சின்ன காருன்னு அசால்டா எடுத்துக்காதீங்க, ஓட்டி பார்த்தா சும்மா தாறுமாறா இருக்குது! - எம்ஜி கோமெட் இவி ரிவியூ!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே தான் செல்கிறது. இதுவரை பெரும்பாலும் பெரிய அளவிலான மற்றும் குடும்பத்துடன் செல்லக்கூடிய கார்கள் தான் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் நாளாக நாளாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதை உணர்ந்துகொண்ட கார் தயாரிப்பாளர்கள் மக்கள் தேவையை அறிந்து கார்களை தயாரிக்கத் துவங்கிவிட்டனர்.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் எம்ஜி கோமெட் என்ற சிறிய ரக இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு டில்லியில் இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கார் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் எதிர்காலத்தை மாற்றுமா? வாருங்கள் இந்த கார் குறித்த விமர்சனத்தை விரிவாகக் காணலாம்.

MG Comet EV Review

டிசைன் மற்றும் அம்சங்கள்: இந்த எம்ஜி கோமெட் இவி என்ற பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. 2 டோர் கொண்ட இந்த கார் சிறிய கார் என்பதால் மற்றவர்களின் கவனத்தைச் சுலபமாக ஈர்க்கிறது. இந்த காரின் முன்பக்கம் பெரிய விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. கீழே இலுமினேடட் எம்ஜி லோகோ வழங்கப்பட்டுள்ளது. இது இந்த காரை சார்ஜ் செய்யும் இடத்தில் டோர் கவர் கேப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேல் லைட் பார் ஸ்டைலில் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. இது முகப்பு பகுதி முழுவதும் கவர் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஆர்எல் டிசைன் காரின் பக்கவாட்டு பகுதிகளில் க்ரோம் பட்டைகளாக வந்து காரின் ஓஆர்விஎம்மில் உள்ள டர்ன் இன்டிகேட்டர் வரை வழங்கப்பட்டுள்ளது.

MG Comet EV Review

முன்பக்கத்தின் கீழ்ப் பகுதியில் எல்இடி லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஹெட்லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர் ஆகியன 2 பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய ஏர் இன்டேக் பகுதியும் முன்பக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் பெரிய கதவு வழங்கப்பட்டுள்ளது. இந்த கதவு கிட்டத்தட்ட இரு வீல்களுக்கு இடையேயுள்ள பெரும்பாலான பகுதியைக் கவர் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது போக இந்த காரின் ஜன்னல் பகுதி உயர வாக்கில் 3ல் 1 பங்காக வழங்கப்பட்டுள்ளது.

MG Comet EV Review

இந்த காரில் 12 இன்ச் ஸ்டீல் வீல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீலுக்கு ஸ்டைலிஷ் கவர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கத்தைப் பொருத்தவரை முன்பக்கத்தில் உள்ள பெரும்பாலான டிசைன்கள் பின்பக்கத்திலும் உள்ளது. பெரிய பின்பக்க விண்ட் ஸ்கிரீன், முழு நீள லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. இது பிரேக் லைட்டாக செயல்படுகிறது.

இதற்குக் கீழே எம்ஜி லோகோ வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது முன்பக்கத்தில் இருப்பது போல இலுமினேட் செய்யப்படாத லோகோ தான். பின்பக்க பம்பரில் நீள வாக்கிலான எல்இடி லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தான் எம்ஜி கோமெட் காரின் வெளிப்புற டிசைன்.

இந்த காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை இந்த கேபின் பகுதி மினிமல் டிசைன்களை கொண்டுள்ளது. இதன் டேஷ்போர்டில் இரண்டு 10.25 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் டச் ஸ்கிரீன் அம்சத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய வசதிகளுடன் உள்ளது. மேலும் இது இரண்டு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆடியோக்களை லேதரால் விராப் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீலிலேயே கண்ட்ரோல் செய்யலாம்.

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரின் கனெக்டெட் கார் சூட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 55க்கும் அதிகமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது ரியர் வியூ பார்க்கிங் கேமராவின் டிஸ்பிளே உடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கீழே 3 நாப்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஏசியை மேனுவலாக கண்ட்ரோல் செய்ய பயன்படுகிறது. முன்பக்கத்தில் இரண்டு சீட்களுக்கும் நடுவே கியர் நாப் வழங்கப்பட்டுள்ளது. ஹேண்ட் பிரேக்கும் அருகிலேயே வழங்கப்பட்டுள்ளது. பழைய லிலர் டைப்பில் தான் இந்த ஹேண்ட் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் சீட்கள் எல்லாம் கேபினில் உள்ளதைப் போல டூயல் டோன் க்ரே தீமில் வழங்கப்பட்டுள்ளது. சீட்கள் வழக்கமான கார் சீட்களை விட சிறியதாக இருக்கிறது. இருந்தாலும் சௌகரியமான அளவில் தான் இந்த சீட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த எம்ஜி கோமெட் கார் 4 சீட்டர் கார். பின்பக்க சீட்களுக்கு செல்வது சுலபமாகத் தான் உள்ளது. முன்பக்க பயணிகள் சீட்டை ஒன் டச்சில் மடக்கி பின்பக்கம் செல்ல முடியும். இந்த கார் சிறிய காராக இருக்கிறதே இது எந்த அளவிற்குப் பாதுகாப்பான கார் என நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது.

இந்த கோமெட் இவி கார் அதிக பலம் கொண்ட பாடியுடன் கூடிய 17 ஹாட் ஸ்டிடாப்டு பேனல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் முன் சீட்டில் டூயல் ஏர்பேக் வசதி இருக்கிறது. இதுபோக குழந்தைகளுக்கான ஐஎஸ்ஓஃபிக்ஸ் ஆங்கர் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பைக் மற்றும் அளவுகள்: எம்ஜி கோமெட் கார் இந்தியாவிலேயே சிறிய காராக வெளியாகியுள்ளது. இந்த காரின் நீளம் டாடா நானோ காரின் நீளத்தை விட 125 மிமீ குறைவாக இருக்கிறது. இந்த கார் 2975 மிமீ நீளம், 1,505 மிமீ அகலம் மற்றும் 1640 மிமி உயரம் கொண்டது. இந்த கார் 2,010 மிமீ வீல் பேஸ் மற்றும் 4.2மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோமெட் இவி காரை பொருத்தவரை 17.3 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ARAI சான்றின் படி 230 கி.மீ ரேஞ்ச் தரக்கூடியது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஏசி சார்ஜிங் வசதி மட்டுமே இருக்கிறது. இதற்காக 3.3 கிலோ வாட் சார்ஜிங் கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இது 7 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏறிவிடுகிறது. 10-80 சதவீத பேட்டரி சார்ஜை வெறும் 5 மணி நேரத்தில் ஏற்றிவிடுகிறது.

இந்த காரில் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது நேரடியாக பின்பக்க வீல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 41.4 பிஎச்பி பவரையும், 110என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிரைவிங் இம்பிரஷன்: எம்ஜி கோமெட் இவி கார் மற்ற கார்களிலிருந்து சற்று வித்தியாசமானது. நீங்கள் இந்த காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் பிரேக் பெடலை இரண்டு முறை அழுத்த வேண்டும். அப்பொழுது தான் கார் ஸ்டார்ட் ஆகும். இது சத்தமே இல்லாமல் அமைதியாக பயணிக்கும் காராகும்.

இந்த கார் அதிகபட்சம் 110 கி.மீ வேகத்தில் சிறீ பாயும் திறன் கொண்டது. மொத்தம் 3 விதமான டிரைவ் மோட்கள் உள்ளது. எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவ் மோட்கள் உள்ளன. இதில் எக்கோ மற்றும் நார்மல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் ஃபெர்ஃபாமென்ஸை தருகிறது. ஸ்போர்ட் மோட் ஆக்ஸிலரேஷனில் சற்று ஷார்ப்பாக இருக்கிறது.

ஸ்டியரிங்கை பொருத்தவரை சிறிய வீலாக தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் டில்ட் அட்ஜெஸ்ட்மென்ட் மட்டுமே இருக்கிறது. சிட்டி பயணத்திற்கு இந்த ஸ்டியரிங் கைக்கு அடக்கமாகச் சிறப்பாக இருக்கிறது. லைட்டான ஸ்டியரிங் வீல், மேனுவல் ஹேண்ட் பிரேக், எல்லாம் ஃபன்னாக இருக்கிறது. அக்ரஸிவான டிரைவிங்கிற்கு இந்த கார் சப்போர்ட் செய்யாது.

இந்த காரை வேகமாக கார்னர்களில் திருப்புவது எளிதாக இருக்காது. இதன் உயரமான பாடி டிசைன், சிறிய வீல் பேஸ், சிறிய வீல் மற்றும் சாஃப்டான சஸ்பென்சன் ஆகியன அதிகமான பாடி ரோலை கொடுக்கிறது. சிட்டி பயணத்தில் வேகமாகச் செல்ல முடியாது என்பதால் இது பற்றி எம்ஜி கவலைப்படவில்லை.

சஸ்பென்சன் சாஃப்டாக இருப்பதால் சிட்டியில் கரடு முரடான சாலையில் பயணிப்பது கொஞ்சம் வலி மிகுந்ததாக தான் இருக்கிறது. இந்த காரில் சிறிய 12 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 145/70 R12 டயர் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பிரேக்கள் போதுமான ஸ்டாப்பிங் பவருடன் இருக்கிறது. இந்த காரில் முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மல்டிபிள் லெவல் ரீஜென் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. பிரேக் பெடல் அழுத்தியவுடன் உடனடியாக சிறப்பான ஃபெர்பாமென்ஸை வழங்குகிறது.

இந்த கோமெட் இவி காரில் மல்டிபிள் ரீஜென் மோட்கள் இருக்கிறது. இதனால் பிரேக்கிங் மிக ஸ்டிராங்காக இருக்கிறது. ஆனால் இந்த காரில் ஒன்பெடல் டிரைவிங் வசதி வழங்கப்படவில்லை. சிட்டி எலெக்ட்ரிக் காரில் இந்த வசதி இல்லாதது ஒரு ஏமாற்றம் தான்.

எம்ஜி நிறுவனம் இந்த கார் முழு சார்ஜில் 230 கி.மீ வரை பயணிக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் பயணிக்கவில்லை. ஆனால் நாங்கள் பயணித்தது வரை கணக்கிட்டு பார்த்தால் 170 கி.மீ வரை ரியல் வேல்டில் தாராளமாக பயணிக்கலாம்.

இறுதி தீர்ப்பு: எம்ஜி கோமெட் இவி புதிய தலைமுறை இவி ஓட்டுநர்களுக்கு ஏற்ற காராக இருக்கிறது. முதன் முறையாக எலெக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு இந்த கார் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த கார் பார்க்க க்யூட்டாக இருக்கிறது. அதே நேரம் உட்புறமும் அதிக இட வசதியுடன் இருக்கிறது. சிட்டி டிராஃபிக்கில் நீங்கள் சிக்கனாலும் உங்களுக்கு ஒரு நெருக்கடியான ஃபீலை இது தராது. சிட்டி பயணத்தில் பொறுமையான பயணம் செய்பவர்களுக்கு ஏற்ற கார் இது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 27, 2023, 12:00 [IST]
English summary
Mg comet ev review price battery range safety features all other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X