இங்கே பட்ஜெட் அன்லிமிடேட்... இந்தியாவின் 5 காஸ்ட்லி எஸ்யூவி மாடல்கள்!!

By Saravana

இந்தியாவில் எஸ்யூவி வகை கார் மாடல்களுக்கான வரவேற்பு நீங்கள் அறிந்ததே. கம்பீரமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், இடவசதி, எந்தவொரு சாலை நிலைகளுக்கும் ஏற்ற கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவை காரணமாக, எஸ்யூவி மாடல்களின் மீது இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்.

அதேநேரத்தில், சாதாரண எஸ்யூவி மாடல்களிலிருந்து வேறுபட்டு இந்திய கோடீஸ்வரர்களை கவர்ந்து வரும் இந்தியாவின் மிக காஸ்ட்லியான 5 எஸ்யூவி மாடல்களின் விபரங்களை இந்த செய்தித்தொகுப்பில் படிக்கலாம். பட்ஜெட் அன்லிமிடேட் வாடிக்கையாளர்களுக்கான அந்த 5 எஸ்யூவி மாடல்களின் விபரங்கள் இதோ உங்களுக்காக...

05. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி

05. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி

விலை: ரூ.1.69 கோடி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஒரு பெட்டியை போன்ற தோற்றத்தை கொண்டிருப்பது பலருக்கு பிடிக்காமல் போகலாம். எனவே, அதுபோன்ற வாடிக்கையாளர்களுக்காக கொஞ்சம் நாசூக்கான வடிவமைப்பை பெற்ற மாடல்தான் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்63 ஏஎம்ஜி. இந்த எஸ்யூவியில் 5.8 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த எஸ்யூவி மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது.

04. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராஃபி

04. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராஃபி

விலை: ரூ.1.74 கோடி

ரேஞ்ச்ரோவர் வரிசையில் மற்றொரு மாடலான ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோபயோகிராபி மாடலும் அதிக விலை கொண்ட எஸ்யூவி மாடல். ரூ.1.74 கோடி விலையில் இந்தியாவில் கிடைகக்கிறது. இந்த எஸ்யூவியில் 503 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுவும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருப்பதோடு, ஏராளமான சொகுசு வசதிகளை அளிக்கிறது.

03. போர்ஷே கேயென் டர்போ

03. போர்ஷே கேயென் டர்போ

விலை: ரூ.1.78 கோடி

போர்ஷே கேயென் எஸ்யூவியும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் காஸ்ட்லியான மாடல்களில் ஒன்று. இந்த எஸ்யூவி மாடலில் 500 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும் 4.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறு. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் கிடைக்கிறது.5 சீட்டர் மாடலாக இருந்தாலும், 4 பேர் அமர்ந்து செல்வதற்கு வசதியான இருக்கை அமைப்பை உடையது.

02. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி

02. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி

ரூ.1.8 கோடி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி - வேகன் வரிசையிலான இந்த எஸ்யூவி மாடல் சொகுசையும், செயல்திறனையும் ஒருங்கே வழங்கும் ஓர் மாடல். இந்த மாடலில் 544 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வழங்கும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் 4 மேட்டிக் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கிறது. இதன் இன்டிரியரை கஸ்டமைஸ் செய்து வாங்கும் வாய்ப்பையும் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்குகிறது.

01. ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராபி LWB

01. ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராபி LWB

விலை: ரூ.3.8 கோடி

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் வெற்றிகரமான ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் ஆட்டோபயோகிராஃபி அதிக வீல்பேஸ் கொண்ட மாடல் தற்போது இந்தியாவில் கிடைக்கும் காஸ்ட்லி எஸ்யூவிகளில் ஒன்று. வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுக்கும்போது தனது விருப்பப்படி, கூடுதல் தனித்துவத்துடன் இந்த ஆட்டோபயோகிராஃபி மாடலை கஸ்டமைஸ் செய்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்யூவியில் 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் உள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. ஆஃப்ரோடு செயல்பாடுகளுக்கும் ஓர் உன்னதமான மாடல். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட எஸ்யூவி மாடலின் விபரம் அடுத்த ஸ்லைடில்...

உலகின் காஸ்ட்லி எஸ்யூவி மாடல்

உலகின் காஸ்ட்லி எஸ்யூவி மாடல்

More from DriveSpark

Article Published On: Monday, May 11, 2015, 12:53 [IST]
English summary
The demand for SUVs has surged so dramatically that the market for SUVs in India is nothing less than a battlefield. To cater to this demand, automobile giants from all over the world to introduce SUVs in every possible price range
மேலும்... #டாப் 5 #review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+