புதிய மாருதி வேகன்-ஆர் காரில் மாற்றங்கள் என்னென்ன?

By Super

வாடிக்கையாளர்களின் கவனம் திசை திரும்பாத வகையில் அனைத்து மாடல்களையும் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், வடிவமைப்பில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் புதிய வேகன்-ஆர் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ரிட்ஸ் காரில் சில மாற்றங்களை செய்து மாருதி அறிமுகம் செய்தது. அந்த வகையில் தற்போது வேகன்-ஆர் காரின் டிசைனில் சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய வேகன்-ஆர் காரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

முகப்பு பகுதிதான் அதிக மாற்றங்களை சந்தித்துள்ளது. முகப்பு கிரில்லின் அளவு குறைந்துள்ளது. ஹெட்லைட் வடிவமைப்பில் மாற்றங்கள் இல்லை. புதிய ரிட்ஸ் கார் போன்றே புதிய வேகன் ஆர் காரின் ஏர் டேம் அகலம் குறைந்து உயரம் கூட்டப்பட்டிருக்கிறது.

பனி விளக்குகளின் அமைவிட டிசைனில் மாற்றங்கள் இல்லை. முன்பக்க பம்பர் வடிவமைப்பில் மாற்றங்களை கண்டிருக்கிறது. பேஸன் ரெட் மற்றும் எக்ரூ பீயேஜ் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும். பின்புறத்தில் மாற்றங்கள் இல்லை.

 உட்புறத்தில் மாற்றங்கள்

உட்புறத்தில் மாற்றங்கள்

பீயேஜ், கிரே வண்ணக் கலவையில் முன்பைவிட இன்னமும் பிரிமியமாக தோற்றமளிக்கிறது புதிய வேகன்-ஆரின் உட்புறம். ஆனால், பீயேஜ் இன்டிரியர் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். டேஷ்போர்டில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அதிக வித்தியாசம் இல்லை.

யுஎஸ்பி போர்ட் வசதியுடன் புதிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் குறிப்பிட்டு கூறலாம். சென்ட்ரல் கன்சோலில் சிறிய ஸ்டோரேஜ் வசதி செய்யப்பட்டுள்ளது. காருக்குள் டே நைட் ரியர் வியூ மிரர் பொருத்தப்பட்டுள்ளது.

இடவசதி

இடவசதி

"டால் பாய்" கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அதிக ஹெட்ரூமை கொண்டிருக்கிறது.

 எஞ்சினில் சிறு மாற்றம்

எஞ்சினில் சிறு மாற்றம்

பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+ எல்பிஜி மாடல்களில் கிடைக்கிறது. கூடுதல் மைலேஜ் தரும் வகையில் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, முந்தைய மாடலைவிட 8 சதவீதம் கூடுதல் மைலேஜ் தரும் என மாருதி தெரிவிக்கிறது.

அராய் சான்று படி லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும். 68 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் புதிய வேகன்-ஆருக்கு உயிர்கொடுக்கிறது.

விலையில் மாற்றம்

விலையில் மாற்றம்

ரூ.3.58 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய வேகன்-ஆர் ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் ரூ.10,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 17, 2013, 10:25 [IST]
English summary
Maruti Suzuki India has launched new Maruti Wagon R with small cosmetic and interior changes. In this article, we compare what all changes have been made to the new 2013 Maruti Wagon R VS Old Maruti Wagon R 2010 model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+