காரை ஓட்டி பார்த்த எங்களால் நம்பவே முடியல! ஸ்கோடா தரமான காரை உருவாக்கி அசத்திடுச்சு!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார், கோடியாக் (kodiaq) ஆகும். உலகின் மிக பெரும் கரடி (Bear) ஆன கோடியாக் (Kodiak)ஐ குறிப்பிடும் விதமாக இந்த பெயரை கோடியாக் காருக்கு ஸ்கோடா சூட்டியது.

உலகின் பெரிய கரடி எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்குமோ அதற்கு இணையாக ஸ்கோடா கோடியாக் காரும் அளவில் பெரியதாக உருவாக்கப் படுகிறது. முதல்முறையாக 2016ஆம் ஆண்டில் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட கோடியாக் எஸ்யூவி காரை கடந்த வருடங்களில் பலமுறை ஸ்கோடா நிறுவனம் அப்டேட் செய்து இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

skoda kodiaq test drive review

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் சமயத்தில் கூட கோடியாக் காரை மேம்படுத்தி இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அந்த சமயத்தில்தான், டீசல் என்ஜின் ஆப்ஷன் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வெறும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கோடியாக் காரை விற்பனை செய்ய ஸ்கோடா துவங்கியது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் ஸ்கோடா கோடியாக் காரின் நியூ-ஜென்ரேஷன் (New-Generation) இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த பிரம்மாண்டமான ஸ்கோடா எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, மும்பையில் புதிய கோடியாக் காரை நாங்கள் ஓட்டிப் பார்த்தோம். அப்போது இந்த காரை பற்றி எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை விரிவான ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம். வாருங்கள் அதனை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

skoda kodiaq test drive review

தோற்றம் & வசதிகள்: 2016ஆம் ஆண்டில் முதல் தலைமுறை கோடியாக் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 9 வருடங்களுக்கு பின் 2வது தலைமுறை கோடியாக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கோடியாக் இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஸ்போர்ட்லைன் மற்றும் லாரண்ட் & க்லேமெண்ட் (L&K) என்பன அந்த இரு வேரியண்ட்கள் ஆகும்.

பழைய கோடியாக் காரை போலவே இருந்தாலும், புதிய கோடியாக் ஆனது நீளத்தில் 59மிமீ அதிகமானது மற்றும் 17மிமீ உயரம் குறைவானது ஆகும். எதிர்காற்றில் கிழித்துக் கொண்டு செல்வதற்காக புதிய கோடியாக் காரின் உயரத்தை குறைத்து, நீளத்தை அதிகரித்து ஸ்கோடா உருவாக்கியுள்ளது. இதற்கேற்ப காரின் முன் மற்றும் பின்பகுதிகள் ஏரோடைனாமிக்ஸ் (Aerodynamics)க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

skoda kodiaq test drive review

ஏரோ கோ-எஃபிசியண்ட்டை (Aero Coefficient) 0.282 ஆக கொண்டிருக்கும் புதிய கோடியாக் எஸ்யூவி கார் முன்பை விட எதிர்காற்றில் சிறப்பாக செயல்படும். மொத்தத்தில் பார்க்க புதிய 2ஆம் தலைமுறை கோடியாக் கார் பழைய மாடலை போலவே இருந்தாலும், நெருக்கமாக பார்க்கும்போது நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது.

காரின் முன்பக்கத்தில் எல்இடி விளக்குகள் முன்பை காட்டிலும் மெல்லியதான வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஹெட்லைட்களில் 'Welcome' அனிமேஷன் (Animation) கொடுக்கப்பட்டுள்ளது. காரின் முன் மற்றும் பின்பக்க பம்பர்களின் டிசைன் இன்னும் கூர்மையானதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், பின்பக்க பம்பரில் டிஃப்யூஸர் (Diffuser) ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஸ்கோடா கோடியாக் காரில் ஒருவழியாக சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

skoda kodiaq test drive review

அதாவது, சக்கரங்களுக்கு மேலே கொடுக்கப்படும் வளைவு ஆனது வட்டமாக இல்லாமல், சதுரமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும், காரின் ஏரோடைனாமிக்ஸை மேம்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த சதுர வடிவ வீல் ஆர்ச்சில் கொடுக்கப்படும் பேனல் ஆனது ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் பளபளக்கும் கருப்பு நிறத்திலும், எல்&கே வேரியண்ட்டில் மேட் டார்க் க்ரோம் ஃபினிஷிங்கிலும் கிடைக்கும்.

அப்படியே புதிய கோடியாக் காருக்குள் நுழைந்தால், காருக்கு உள்ளேயும் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காரின் ஒட்டுமொத்த உட்புற கேபினின் தோற்றமும் முன்பை காட்டிலும் எளிமையானதாக மாற்றப்பட்டுள்ளது. காருக்குள் சில இடங்களில் மென்மையான மெட்டீரியல்களும், சில இடங்களில் பிளாஸ்டிக் மெட்ட்ரீயல்களும் வழங்கப்பட்டுள்ளன. டேஸ்போர்டில் 2 விதமான திரைகள் உள்ளன.

skoda kodiaq test drive review

ஒன்று, 13-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை; மற்றொன்று, டிரைவருக்கான தகவல்களை வழங்கக்கூடிய 10-இன்ச் டிஜிட்டல் திரை ஆகும். இதில், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஷார்ப்பான கிராஃபிக்ஸ் உடன் உபயோகப்படுத்துவதற்கு எளிமையானதாக உள்ளது. இதைவிட முக்கியம், இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் ஏகப்பட்ட இணைப்பு வசதிகள் உள்ளன. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காக பொத்தான்களையும் தனியாக ஸ்கோடா வழங்கியுள்ளது.

இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வது மட்டுமின்றி, HVAC மற்றும் சீட் ஹீட்டிங் வசதியையும் இந்த பொத்தான்கள் கண்ட்ரோல் செய்யக்கூடியவைகளாக உள்ளன. கியர் செலக்டர் (Gear Selector) ஸ்டேரிங் சக்கரத்துக்கு அருகே மாற்றப்பட்டுள்ளது. மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான 'போன் பாக்ஸ்' (Phone Box)ஐ ஸ்கோடா நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இதன் மூலமாக, ஒரே நேரத்தில் இரு மொபைல் போன்களை வயர்-இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.

skoda kodiaq test drive review

இரண்டுமே 15 வாட்ஸ் மின்சாரத்தில் மொபைல் போனை சார்ஜ் செய்யக்கூடியவைகளாக உள்ளன. அதிக நேரம் சார்ஜ் ஆகி மொபைல் போனோ அல்லது சார்ஜரோ சூடாக நேர்ந்தால், அதனை தணிப்பதற்காக கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லாமல், நான்கு யுஎஸ்பி-சி சார்ஜிங் துளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 45 வாட்ஸ் திறன் கொண்டவைகளாக உள்ளன.

புதிய கோடியாக் காரில் அளவில் பெரியதான பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வழங்கப்பட்டுள்ளது. புதிய கோடியாக் காரின் முன் இருக்கைகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடியவைகளாக ஹீட்டிங், வெண்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதிகளை கொண்டவைகளாக உள்ளன. 2வது வரிசை இருக்கைகளை தேவைக்கேற்ப முன்னாலும், பின்னாலும் நகர்த்திக் கொள்ளலாம். இதன் மூலமாக, 3வது இருக்கை வரிசைக்கு தேவையான இடவசதியை அட்ஜெஸ் செய்துக் கொள்ள முடியும்.

skoda kodiaq test drive review

முதல் இரு வரிசைகளில் உள்ள இருக்கைகள் அமர்வதற்கு மிகவும் சவுகரியமாக உள்ளன. கடைசி மூன்றவாது வரிசை இருக்கைகளை குழந்தைகளுக்கு விட்டுவிடுவது நல்லது. புதிய கோடியாக்கில் பாதுகாப்பு அம்சங்களாக, 9 ஏர்பேக்குகள், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உடன் 360-டிகிரி கேமரா சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவை இல்லாமல், ஏறுமுகமான சாலைகளில் காரை ஸ்டார்ட் செய்வதற்கும், ஒரே திசையில் பயணிப்பதற்குமான கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS), ஐசோஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கைக்கான கொக்கிகள் மற்றும் காரை பார்க் செய்வதற்கு உதவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இன்றைய கால மாடர்ன் கார்களில் வழங்கப்படும் அடாஸ் (ADAS) புதிய கோடியாக்கில் வழங்கப்படாதது ஒரு குறையாக உள்ளது.

skoda kodiaq test drive review

பரிமாண அளவுகள் & என்ஜின்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய கோடியாக் பழைய மாடலை விட 59மிமீ நீளம் அதிகமானதாக 4,758மிமீ நீளத்தையும், 17மிமீ குறைவாக 1,659மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, காரின் அகலமும் 18மிமீ குறைக்கப்பட்டு 1,864மிமீ ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றப்படி, காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தில் (2,791மிமீ) எந்த மாற்றமும் இல்லை.

காரின் 18-இன்ச் சக்கரங்களில் 235/55 அளவிலான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கோடியாக் காரில் ஸ்பேர் சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,825 கிலோ எடை கொண்ட புதிய கோடியாக் காரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து 155மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. காருக்குள் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்தினால் கூட காருக்கு பின்னால் 281 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைப்பதற்கான இடவசதியை பெறலாம்.

skoda kodiaq test drive review

3வது வரிசை இருக்கைகளை மடக்கினால் இதனை 786 லிட்டர்கள் வரையிலும், 2வது வரிசை இருக்கைகளையும் சேர்த்து மடக்கினால் சுமார் 1,976 லிட்டர்கள் கொள்ளளவு வரையிலும் பூட் ஸ்பேஸை பெரியதாக்கி கொள்ள முடியும். இந்த பிரம்மாண்டமான ஸ்கோடா எஸ்யூவி காரில் பெட்ரோல் டேங்க் 62 லிட்டர்கள் கொள்ளளவில் கொடுக்கப்பட்டு உள்ளது.

புதிய 2ஆம் தலைமுறை ஸ்கோடா கோடியாக் காரில் வழக்கமான 2 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. பழைய கோடியாக் காரிலும் இதே என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய இயக்க ஆற்றல் ஆனது 14 பிஎச்பி அதிகரித்து 201 பிஎச்பி வரையில் கிடைக்கும்.

skoda kodiaq test drive review

என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய டார்க் திறன் 320என்.எம் ஆகும். என்ஜின் உடன் இணைக்கப்படும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கக்கூடியதாக உள்ளது. புதிய கோடியாக் காரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 14.86கிமீ வரையிலான மைலேஜை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது.

பயண அனுபவம்: புதிய ஸ்கோடா கோடியாக் கார் விரைவாகவே எங்களது டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப மாறிவிட்டது. எந்த டிரைவிங் மோடில் காரை ஓட்டினாலும், என்ஜினில் இருந்து கிடைக்கக்கூடிய இயக்க ஆற்றல் ஆனது சீராக உள்ளது. ஆக்ஸலரேஷன் பெடலை எவ்வளவுதான் மூர்க்கத்தனமாக அழுத்தினாலும், என்ஜினில் இருந்து மென்மையான வேகத்தில் ஆற்றல் கிடைப்பதை எங்களால் உணர முடிந்தது.

skoda kodiaq test drive review

7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் எளிதாக கியர்களை மாற்ற உதவுவதால், புதிய கோடியாக் காரில் விரைவாகவே அதிகப்பட்ச வேகத்தை எட்ட முடிகிறது. நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலையில் காரின் செயல்பாடுகள் இன்னும் சிறப்பானதாக உள்ளதால், புதிய கோடியாக் ஓர் தொலைத்தூர பயணத்திற்கான கார் ஆகும். இந்த காரின் சஸ்பென்ஷன் செட்-அப் மென்மையானதாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மேடு, பள்ளங்களில் காரை ஏற்றி இறக்கும்போது அவற்றில் கார் மென்மையாக ஏறி இறங்குகின்றன. அதேபோல், புதிய கோடியாக்கின் அதிவேகத்தில் இயக்கும் திறனும் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. குறிப்பாக, வளைவுகளிலும் இந்த காரில் வேகமாக திரும்ப முடிகிறது. இருப்பினும், கடைசி 3வது வரிசை இருக்கைகளில் அமர்பவர்கள் மட்டும் சில நேரங்களில் குலுக்கல்களை எதிர்கொண்டனர்.

skoda kodiaq test drive review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா கோடியாக் காரின் விற்பனை இந்தியாவில் பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், இந்த ஸ்கோடா எஸ்யூவி காரின் தரத்தை யாரும் குறை கூறியது இல்லை. அந்த அளவிற்கு தரமான கோடியாக் காரை இரண்டாவது ஜென்ரேஷனிலும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தரமானதாக உருவாக்கி உள்ளது. கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த கார்களில் இருப்பதை போல், இந்த காருக்கு உள்ளே அமர்ந்திருக்கும்போது உணர்ந்தோம்.

இடவசதிகள் முன்பை காட்டிலும் அதிகமாக்கப்பட்டு உள்ளதால், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற காராக புதிய கோடியாக் விளங்குகிறது. இருப்பினும், அடாஸ் வழங்கப்படாதது மட்டும் ஒரு குறையாகவே தோன்றுகிறது. எங்களது புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி காரின் விமர்சனம் இத்துடன் முடிகிறது. இந்த கார் விமர்சனம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் அல்லது பரிந்துரைப்புகள் இருந்தால் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளலாம். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

skoda kodiaq test drive review

புதிய ஸ்கோடா கோடியாக் காருக்கான முன்பதிவுகள் இன்று (ஏப்ரல் 17) துவங்கப்பட்டு, டெலிவிரிகள் மே 2இல் துவங்கப்பட உள்ளன. புதிய ஸ்கோடா கோடியாக் காரின் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.46 லட்சத்து 89 ஆயிரமாகவும், எல்&கே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.48 லட்சத்து 69 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 11:02 [IST]
English summary
New skoda kodiaq suv first test drive review check design features price all details here
மேலும்... #skoda #kodiaq #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X