ஷிஃப்டிங் செய்வது ரொம்ப ஈசி.. நிஸான் மேக்னைட் ஈசி-ஷிஃப்ட் பதிப்பை நாங்க ஓட்டி பார்த்திட்டோம்.. ரைடு ரிவியூ!

நிஸான் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் மேக்னைட்-ம் ஒன்றாகும். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல். இந்த காரை நிஸான் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்த நேரம் உலகற்கே மோசமான காலம் என கூறலாம். ஏனெனில், கொரோனா எனும் வைரஸின் கோரபிடியிலேயே இந்த உலகம் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

இந்த மாதிரியான சூழலிலேயே மிகப் பெரிய ரிஸ்க்கை எடுக்கும் நிஸான் புதிய மேக்னைட் காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது. பலர் நிறுவனத்தின் இந்த செயலைச் சாட தொடங்கினர். நிறுவனம் தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதை எதையும் நிஸான் காதில்கூட வாங்கிக் கொள்ளவில்லை. இந்த துணிச்சலான முடிவிற்கான பலனையே தற்போது பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Nissan magnite ez shift

ஆமாங்க, இந்தியர்கள் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக கடந்த காலங்களில் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த நிஸான் நிறுவனம் சமீப காலமாக லேசான வளர்ச்சியை பதிவுச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் இரண்டு விதமான எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளை நிஸான் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

1.0 லிட்டர், 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜட் ஆகிய மோட்டார் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதில், டர்போ மோட்டார் கொண்ட தேர்வில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும், நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் தேர்வில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றன.

Nissan magnite ez shift display door handle

இந்த சிறப்புகள் போதாதென்று இந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாகவும், இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் நிஸான் நிறுவனம் இந்த காரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பைக்கான ஸ்பான்சர் காராக மைதானத்தில் நிறுத்தியது. இந்த நிலையிலேயே, இந்த நிஸான் காரை கூடுதல் சிறப்புமிக்கதாக வழங்க நிஸான் நிறுவனம் திட்டமிட்டது.

இதன் அடிப்படையில், அதன் கூட்டாளியான ரெனால்ட் உடன் இனணந்து 5 ஸ்பீடு ஆட்டமோட்டட் மேனுவல் தேர்வை மேக்னைட் காரில் வழங்கயிருக்கின்றது. இந்த தேர்வை மேக்னைட் ஈசி-ஆர் என அழைக்கின்றது. இந்த காரையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. தமிழகத்தின் அழகிய நகரமான நமது சென்னையில் வைத்தே இந்த காரை ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Nissan magnite ez shift display

இது என்ன புது கியர்பாக்ஸ்? வாங்க பார்க்கலாம்: நிஸான் நிறுவனம் இந்த அம்சத்தை காரில் வழங்கி இருப்பதைத் தெரிவிக்கவும் வெளிப்புற தோற்றத்தில் லேசான மாற்றத்தை அது தெரிவித்து இருக்கின்றது. 'இஇசட் ஷிஃப்ட்' (EZ-Shift) எனும் பேட்ஜை வழங்கி இருக்கின்றது (ஈசி என்றும் அழைக்கலாம்). இதுமட்டுமில்லைங்க, கணிசமான அம்சங்களை கூடுதலாக சிவிடி தேர்வைக் காட்டிலும் இந்த தேர்வு பெற்றிருக்கின்றது.

அந்தவகையில், புதிய கியர் லிவரை இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த கியரில் ஷைனான குரோம் மையப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய கியர்பாக்ஸை நிஸான் நிறுவனம் மேக்னைட்டின் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே வழங்க இருக்கின்றது.

Nissan magnite ez shift seat

டர்போசார்ஜட் நிஸான் மேக்னைட்டில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. ஈசி ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் இணைந்து 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் இந்த 1.0 லிட்டர் மோட்டார் வெளியேற்றும். இது திறன் அனைத்தும் காரின் முன் வீலுக்கே கடத்தப்படும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

பயணத்தின்போது, நீங்கள் உண்மையான அதிக பவர் மற்றும் டார்க்கை பெற வேண்டும் எனில் கியரை மாற்றுவதற்கு முன்னர் முதலில் எஞ்ஜினை ஒரு முறை முறுக்கிவிட வேண்டும். அப்போதே சிறந்த திறன் வெளிப்பாட்டை உங்களால் உணர முடியும். அதேவேளையில், இதை கூடுதலாக பெற வேண்டும் என நினைத்து ஆக்ஸலரேட்டரை முறுக்கு முறுக்கு என முறுக்கினால் அதிக வேகம் கிடைக்காது. அதற்கு பதிலாக அதிக சத்தம் மட்டுமே கிடைக்கும்.

Nissan magnite ez shift gear lever

ஷிஃப்டிங்கைப் பொருத்த வரை இந்த கியர்பாக்ஸ் மிக சிறந்ததாக இருக்கின்றது. காரை நாங்கள் டிராஃபிக் நிறைந்த சாலையில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போதும் எங்களுக்கு மிக சிறந்த ஷிஃப்டிங் அனுபவத்தையே இந்த இஇசட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் வழங்கியது. இந்த கியர்பாக்ஸ் ஓர் யூசர் ஃப்ரண்ட்லி என கூறலாம்.

அந்த அளவிற்கே அது மிகுந்த சுலபமான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்கியது. மேனுவல் மோடின்போது மட்டும் நீங்கள் இந்த கியர்பாக்ஸை அப்-ஷிஃப்ட் செய்யும்போது லேசாக பின்னடைவைக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில், டவுன்-ஷிஃப்டின்போது அந்த கியர்பாக்ஸ் அதை உருவாக்கப்பட்டதற்கான வேலையை கச்சிதமாகச் செய்தது. நாம் எதிர்பார்க்கும் வெளிப்பாட்டை அது வழங்கும்.

Nissan magnite ez shift pedals

இத்தகைய கியர்பாக்ஸ் அம்சத்துடன் சேர்த்து காருக்குள் கேட்கும் இரைச்சலைக் குறைக்கும் முயற்சியையும் நிஸான் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், உண்மையில் பெரிய அளவில் சத்தம் குறைந்ததாக தெரியவில்லை. இதை எல்லாம் நிறுவனம் மாற்றவில்லை: தற்போது விற்பனையில் இருக்கும் மேக்னைட்டு உடன் அதிக விஷயங்களில் புதிய இஇசட்-ஷிஃப்ட் கொண்ட மேக்னைட் ஒத்துப் போகும் வகையிலேயே இருக்கின்றது.

வெளிப்புறத் தோற்றம், அலங்கரிப்பு என ஏகப்பட்ட விஷயத்தில் இவற்றிற்கு இடையில் ஒற்றுமை இருக்கின்றன. அதேவேளையில், கியர்பாக்ஸ் மட்டுமே நகரங்களின் விறுவிறுப்பான சாலைகளில் வேகமாக மாற்றிக் கொள்ளும் உதவும் வகையில் மாற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இது பெரிய அளவில் சலசலப்பு இல்லாமல் பாதைகளை மாற்றிக் கொள்ளவும் அனுமதிக்கின்றது.

Nissan magnite ez shift rear ac vent

அதேநேரத்தில், அதிக வேகத்தில் செல்லும்போது இதன் ஸ்டியரிங் வீல்கள் அதிக எடைக் கொண்டதைப் போல் உணர வைக்கின்றது. கியர்பாக்ஸிற்கு ஏற்றவாறு சஸ்பென்ஷன் செட்-அப்பில் எந்த மாற்றமும் செய்யாததே இதற்கு காரணமாக இருக்கின்றது. வழக்கமான மேக்னைட்டில் பயன்படுத்தப்படும் சஸ்பென்ஷன் செட்-அப்பே இஇசட்-ஷிஃப்ட் தேர்விலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஆனால், இந்த சஸ்பென்ஷன் பெரிய பெரிய பள்ளம் மற்றும் மேடுகளைகூட அசால்ட் செய்துவிடும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேலையில், நீங்கள் இந்த காரில் அதிக வேகத்தில் வளைவுகளில் திருப்புதைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். குறிப்பாக, வேகத்தைக் குறைத்து நீங்கள் திருப்பங்களில் திருப்ப வேண்டும் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.

Nissan magnite ez shift badge

மற்ற பதிப்புகளைப் போலவே நிஸான் மேக்னைட் இஇசட்-ஷிஃப்ட்டும் அதிக கவர்ச்சியான அலங்கரிப்பைக் கொண்டிருக்கின்றது. பகல் நேரத்தில் ஒளிரும் எல் வடிவ டிஆர்எல்-கள், அறுகோண வடிவ கிரில், எல்இடி பனி மின் விளக்கு, எல்இடி ஹெட்லைட், அழகிய அலாய் வீல்கள், செதுக்கப்பட்ட தோற்றத்திலான டெயில் லைட் மற்றும் குரோம் அலங்கார அணிகலன்கள் ஆகியவற்றை இந்த பதிப்பிலும் காண முடிகின்றது.

இதேபோல் கேபினிலும் பெரிய அளவில் மாற்றத்தை நிஸான் செய்யவில்லை. ஒயரே இல்லாமல் இணைக்கும் வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடனும், அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் இருக்கைகளும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. அதிக இட வசதிக் கொண்ட காரும் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Nissan magnite ez shift wireless charging

நிஸான் மேக்னைட் இஇசட்-ஷிஃப்ட் கார் பற்றிய எங்களின் இறுதி தீர்ப்பு: இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெறும் கார் மாடலாக மேக்னைட் இருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையிலேயே இஇசட் ஷிஃப்ட் எனும் புதிய கியர்பாக்ஸ் தேர்வையும் அது இந்த காரில் வழங்கி இருக்கின்றது.

இந்த தேர்வை வாங்கும் பிளானில் நீங்கள் இருந்தால், கட்டாயம் ஒரு முறை நீங்கள் ரைடு செய்து பார்த்துவிட்டு அதன் பின்னர் அந்த காரை வாங்கிக் கொள்ளவும். இதுவே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். அதேவேளையில், இந்த இஇசட்-ஷிஃப்ட் கொண்ட பதிப்பிற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றே நாங்கள் யூகிக்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Monday, October 9, 2023, 10:09 [IST]
English summary
Nissan magnite ez shift review details in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X