ரெனோ டஸ்ட்டர் Vs நிசான் டெரானோ: ஓர் ஒப்பீடு

வரும் 1ந் தேதி முதல் நிசான் டெரானோ எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக சில டீலர்களில் ரகசிய முன்பதிவும் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மார்க்கெட்டில் பெரும் வெற்றியை ருசித்த ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக வரும் நிசான் டெரானோவும் அந்தளவு வெற்றியை பெறுமா என்ற கேள்விகள் உலவ துவங்கியுள்ளன.

ஈக்கோஸ்போர்ட் வரவு டஸ்ட்டருக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ள நிலையில், டெரானோ இந்த நெருக்கடிகளை புறந்தள்ளி எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டஸ்ட்டர் அதிக பிரபல்யமானதால், தோற்றத்தில் டெரானோவுக்கு தனி அடையாளம் இருக்கும் வகையில் மாற்றங்களை செய்துள்ளனர் நிசான் எஞ்சினியர்கள்.

இந்த நிலையில், நிசான் டெரானோவுக்கு முன்பதிவு துவங்க இருக்கும் நிலையில், டெரானோ அறிமுக விழாவின்போது அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ரெனோ டஸ்ட்டருடன் அம்சங்களை ஒப்பீடு செய்து இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

 ரெனோ டஸ்ட்டர் வெளிப்புறம்

ரெனோ டஸ்ட்டர் வெளிப்புறம்

மூன்று குரோம் பட்டைகளுடன் நடுநாயகமாக ரெனோ சின்னத்துடன் முகபப்பு கிரில், அதற்கு இணையாக அமைக்கப்பட்ட ஹெட்லைட்டுகள் ஆகியவை டஸ்ட்டரின் கம்பீரத்துக்கு காரணமாக அமைந்தன. தாழ்வான ஏர் இன்டேக் அதனை சுற்றி பிளாஸ்டிக் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

டெரானோ வெளிப்புறம்

டெரானோ வெளிப்புறம்

டஸ்ட்டரைவிட டெரானோவை எளிதாக வேறுபடுத்தும் விதத்தில் முன்பக்கத்தில்தான் அதிக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எக்ஸ்ட்ரெயில் உள்ளிட்ட நிசான் எஸ்யூவிகளின் முத்தாய்ப்பான வி வடிவ குரோம் கிரில், பின்னணியில் தேன்கூடு வடிவ வலை பின்னலுடன் நிமிர்ந்து நிற்கிறது. இதில், ஏர் டேமை சுற்றிலும் பாடி கலர் பம்பருடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பனி விளக்குகளின் அறையும் மாற்றம் கண்டிருக்கிறது.

டஸ்ட்டர் பக்கவாட்டு டிசைன்

டஸ்ட்டர் பக்கவாட்டு டிசைன்

டஸ்ட்டரில் பி பில்லர் பாடி கலரிலும், ரூஃப் ரெயில்கள் நடுவில் அலுமினிய நிறம் கொண்டதாகவும், இரு புற தாங்கிகள் கருப்பு நிறத்திலும் இருக்கிறது. யு வடி கிரீஸ் உள்வாங்கிய கிரீஸ் போடப்பட்டுள்ளது.

 டெரானோ பக்கவாட்டு டிசைன்

டெரானோ பக்கவாட்டு டிசைன்

டஸ்ட்டரைவிட டெரானோவின் பின்புறம் நன்றாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. பி பில்லர் மற்றும் சி பில்லர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூஃப் ரயில் முழுவதும் அலுமினிய நிறத்தில் இருக்கிறது. பக்கவாட்டில் நேர்கோட்டில் செல்லும் வகையிலான கிரீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

டஸ்ட்டர் பின்புற டிசைன்

டஸ்ட்டர் பின்புற டிசைன்

டெயில் லைட்டுகள் செங்குத்தாகவும், சிம்பிளாகவும் இருக்கிறது. டஸ்டட்ரில் 16 இஞ்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டெரானோ பின்புற டிசைன்

டெரானோ பின்புற டிசைன்

டெயில் லைட் கிளஸ்ட்டர் செங்குத்தாக இல்லாமல் புதிய டிசைனுடன் மாற்றப்பட்டுள்ளது. இதிலும், 16 இஞ்ச் வீல்கள் என்றாலும் டிசைன் வேறுபடுகிறது. பின்புற பம்பர் டிசைனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டஸ்ட்டரைவிட கவர்ச்சியான பின்புறத்தை கொண்டுள்ளது டெரானோ.

டஸ்ட்டர் இன்டிரியர்

டஸ்ட்டர் இன்டிரியர்

3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பேஸிக் டிசைனுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நடுவில் ஏசி வென்ட்டுகள் வட்ட வடிவில் சிம்பிளாக இருக்கிறது. ஒட்டுமொத்ததில் வெளிப்புறத்தில் இருக்கும் பிரம்மாண்டத்திற்கும் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் டிசைனுக்கும் சம்பந்தமில்லாமல் சுமாராக இருக்கிறது.

 டெரானோ இன்டிரியர்

டெரானோ இன்டிரியர்

டெரானோவின் இன்டிரியரில் சற்று பிரிமியம் கூட்டப்பட்டு இருக்கிறது. சென்ட்ரல் கன்சோலில் புதிய ஃபாக்ஸ் வுட் மர அலங்கார தகடு பதிக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல் ஸ்போக் இடையில் அலுமினிய நிறத்திலான பட்டைகள் இருபுறமும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால், டஸ்ட்டரைவிட கவர்வதாக இருக்கிறது. டேஷ்போர்டில் நடுவில் இருக்கும் ஏசி வென்ட்டுகள் நீள் சதுர வடிவமாக மாற்றம் கண்டிருப்பதுடன் குரோம் லைனிங் பதிக்கப்பட்டுள்ளது. புதிய ஆடியோ இன்டர்ஃபேஸ் கொண்டதாக வருகிறது. டெரானோவின் இன்டிரியர் டஸ்ட்டரைவிட சற்று கூடுதல் கவர்ச்சி அம்சங்களை கொண்டிருக்கிறது.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன்களில் மாற்றங்கள் இருக்காது. 104 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எக்ஸ்எல் வேரியண்ட்டிலும், 85 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எல் டி, எக்ஸ்எல் டி ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளிலும், 110 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் மாடல் எக்ஸ்எல் டி, எக்ஸ்வி டி, எக்ஸ்வி டி பிரிமியம் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும்.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

எஞ்சின், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இரண்டிலும் ஒன்றுதான். டஸ்ட்டரை பார்த்து பழகிவிட்டதால், புதிய மாடலாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு நிச்சயம் டெரானோ நல்ல சாய்ஸாக இருக்கும். அதேவேளை, டஸ்ட்டரைவிட கூடுதல் விலையுடன் வருவதாலும், ரெனோவைவிட குறைவான சர்வீஸ் நெட்வொர்க்குடன் நிசான் செயல்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்வதும் அவசியம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2013, 10:38 [IST]
English summary
Nissan is set to commence bookings for the Terrano from September 1st. Details about the Duster inspired compact SUV resulting from the Renault-Nissan alliance are limited as of now. More will be revealed about the car before launch that will take place sometime during the first week of October.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+