நிசான் டெரானோ காம்பெக்ட் எஸ்யூவி - சிறப்பு பார்வை

கடந்த மாதம் 10ந் தேதி மும்பையில் நடந்த வண்ணமிகு விழாவில் நிசான் டெரானோ முதல் தரிசனம் கொடுத்தது. மார்க்கெட்டில் பெரும் வெற்றியை ருசித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலாக வரும் இந்த புதிய காருக்கு மார்க்கெட்டில் வரவேற்பு கிடைக்குமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.

ஆனால், கூடுதல் பிரிமியம் அம்சங்கள், ஈக்கோஸ்போர்ட்டுக்கு நீளும் காத்திருப்பு காலம் ஆகியவை நிசான் டெரானோவுக்கு ஓர் நல்ல ஆரம்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிசான் டெரானோவில் இருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியுள்ளோம்.

பரிமாணம்

பரிமாணம்

பம்பரின் அளவு கூடுதலாகியுள்ளதால் டஸ்ட்டரைவிட 16 மிமீ கூடுதல் நீளத்தை கொண்டுள்ளது. அதேவேளை, உயரத்தில் 14 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீல் பேஸ், கிரவுன்ட் கிளியரன்ஸ் ஆகியவை இரண்டிலும் ஒன்றுதான். இந்த எஸ்யூவி 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

வாடிக்கையாளர்களிம் ஏற்றுக் கொள்ளப்பட்ட டஸ்ட்டரின் டிசைனிலிருந்து வேறுபடுத்தும் விதத்திலும், அதேவேளை, அவலட்சணமாக மாறிவிடாத வகையிலும் மிக கவனமாக டெரானோவை மெருகூட்டியுள்ளனர் நிசான் எஞ்சினியர்கள்.

முகப்பு

முகப்பு

டஸ்ட்டரிலிருந்து எளிதாக வேறுபடுத்துவதற்காக நிசான் எஸ்யூவிகளில் காணப்படும் தலைகீழ் சரிவகத்திலான 'v' வடிவ முகப்பு கிரில் டெரானோவிற்கு கம்பீரமான அழகை வழங்குகிறது. அதற்கு இணையாக ஹெட்லைட் வசீகரிக்கிறது. பானட்டிலும், பக்கவாட்டிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாப் வேரியண்ட்டுகளில் 16 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இரட்டை வண்ண கலவையில் ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது இது குறித்து தகவல் தெரியவரும்.

பக்கவாட்டு மாற்றங்கள்

பக்கவாட்டு மாற்றங்கள்

பக்கவாட்டில் அதிக வேறுபாடுகள் இல்லை. பி பில்லர் மற்றும் சி பில்லர்களில் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு கதவு கண்ணாடிகளின் கலரோடு ஒத்துப் போக செய்யப்பட்டுள்ளது. ரூஃப் ரெயில்களும் கூடுதல் கம்பீரத்தை கொடுப்பதோடு, உறுதியாகவும் தெரிகிறது.

பின்புறம்

பின்புறம்

டெயில் லேம்ப் கிளஸ்ட்டர் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டஸ்ட்டரில் காரின் உருவத்தைவிட சிறியதாக இருக்கும் டெயில் லேம்ப் கிளஸ்ட்டரை மாற்றி உருவத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான வடிவத்தை பெற்றுள்ளன டெரானோ டெயில் லைட் கிளஸ்ட்டர்.

இன்டிரியர்

இன்டிரியர்

டஸ்ட்டரைவிட சற்று பிரிமியமாக இருக்கும் வகையில் டெரானோவின் இன்டிரியரில் ஆங்காங்கே குரோம் வேலைப்பாடுகளை செய்துள்ளது நிசான். டஸ்ட்டரில் டேஷ்போர்டு நடுவில் வட்ட வடிவ ஏசி வென்ட்டுகள் இருக்கும். அதனை முழுவதுமாக மூட முடியாது. ஆனால், டெரானோவில் அது செவ்வக வடிவமாக மாறியுள்ளதோடு, முழுவதுமாக மூடும் வசதி இருக்கிறது

டியூவல் டோன் டேஷ்போர்டு

டியூவல் டோன் டேஷ்போர்டு

பேஸ் மாடலில் கருப்பு வண்ண இன்டிரியரும், டாப் என்ட் மாடல்களில் பீஜ் மற்றும் கருப்பு நிற கலவையிலான இன்டிரியரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. டஸ்ட்டரில் இருக்கும் ஆடியோ சிஸ்டத்தை தூக்கிப் போட்டுவிட்டு புதிய ஆடியோ சிஸ்டத்தை பொருத்தி டெரானோவுக்கு வேறுபாடு உண்டாக்கியிருக்கிறது நிசான். எக்ஸ்எல் வேரியண்ட்டில் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடனும், எக்ஸ்வி வேரியண்ட்டில் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. கதவுகள், சென்ட்ரல் கன்சோலில் மரவேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொருட்கள் வைக்க பெட்டி

பொருட்கள் வைக்க பெட்டி

சென்ட்ரல் கன்சோலுக்கு மேலே மூடும் வசதிகொண்ட பொருட்கள் வைப்பதற்கான சிறிய பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் மாற்றங்கள் இல்லை. டஸ்ட்டரில் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்தான்.

இடவசதி

இடவசதி

கேபின் தாராள இடவசதியை கொண்டுள்ளது. மிட்சைஸ் செடான் காரின் அளவுக்கு லெக்ரூம் சிறப்பாக தெரிகிறது. அதேவேளை, உயரம் குறைக்கப்பட்டிருப்பதால், ஹெட்ரூம் கொஞ்சம் குறைவாக தெரிகிறது. ஆனால், போதுமான அளவு இடவசதியுடன் 5 சீட்டர் எஸ்யூவியாக இருக்கிறது. டிரைவர் இருக்கையை நமக்கு தகுந்தவாறு உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதியும் உண்டு.

ரியர் ஏசி

ரியர் ஏசி

கால் வைப்பதற்கு கடினமாக இருப்பதாக கூறி டஸ்ட்டரில் பின்புற பயணிகளுக்கான ரியர் ஏசி வென்ட் நீக்கப்பட்டது. ஆனால், டெரானோவின் டாப் வேரியண்ட்டுகளில் பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட் வசதி இருக்கும்.

பூட்ரூம்

பூட்ரூம்

டஸ்ட்டரை போன்றே டெரானோவில் பொருட்களை வைப்பதற்கு 475 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் வசதி இருக்கிறது. பின் இருக்கையை மடக்கினால் பூட் ரூம் கொள்ளளவை 1064 லிட்டராக அதிகரித்துக் கொள்ள முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

டஸ்ட்டரில் செயல்புரியும் அதே எஞ்சின்கள்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 102.6 பிஎச்பி கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 84 பிஎச்பி மற்றும் 108.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டுவிதமாக ட்யூனிங் செய்யப்பட்ட 1.5 லிட்டர் கே9கே எஞ்சினுடன் கிடைக்கும். இதில், 84 பிஎச்பி டீசல் எஞ்சின் மாடல் மைலேஜிலும் சிறப்பாக இருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கும். இதுதவிர, ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டெரானோவும் விரைவில் வர இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

சொகுசு

சொகுசு

தொழில்நுட்ப ரீதியாக டஸ்ட்டருக்கும், டெரானோவுக்கு அதிக வித்தியாசங்கள் இல்லை. இருப்பினும், நெடுஞ்சாலை பயணங்களின்போது டெரானோ கூடுதல் சொகுசான அனுபவத்தை தருகிறது. வழக்கம்போல் இந்த எஸ்யூவியின் டீசல் மாடலிலும் டர்போ லேக் குறை தெரிகிறது. ஆனால், மித வேகத்தை எட்டியதும் எஞ்சின் படு துரிதமான செயல்திறனை காட்டுகிறது. உயர் வேகத்திலும் அதிர்வுகள் குறைவாக இருப்பது டெரானோவின் பலம்.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் 13.2 கிமீ மைலேஜையும், 85 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 20.45 கிமீ மைலேஜையும், 110 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 19.01 கிமீ மைலேஜையும் தருவதாக நிசான் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் டிரைவருக்கான காற்றுப்பை நிரந்தர ஆக்சஸெரீயாக இருக்கும். பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து மிட் வேரியண்ட் முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தரமாக இடம் பிடித்துள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், பனி விளக்குகள் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், புளுடூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மொத்தம் 6 வண்ணங்களில் நிசான் டெரானோ விற்பனைக்கு கிடைக்கும். அதில், பிரான்ஸ் கிரே வண்ணம் பிரத்யேகமாக கவரும் வகையில் இருக்கிறது.

விலை

விலை

ரூ.10 லட்சத்தில் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது. அக்டோபர் 9ந் தேதி இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1ந் தேதி முதல் இந்த புதிய எஸ்யூவிக்கான முன்பதிவு நடந்து வருவது நினைவிருக்கலாம்.

சாதககங்கள்

சாதககங்கள்

சிறப்பான ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

தோற்றம்

அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட டீசல் எஞ்சின்(85பிஎஸ்)

பாதகங்கள்

பாதகங்கள்

போதிய ஆக்சஸெரீஸ்கள் இல்லாதது

டிரைவர் எளிதாக இயக்கும் வகையில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இல்லாதது

பலம், பலவீனம்

பலம், பலவீனம்

டஸ்ட்டர் போரடித்தவர்களுக்கும், ஈக்கோஸ்போர்ட் காத்திருப்பு காலத்தை வெறுப்பவர்களுக்கும் சிறந்த சாய்ஸ் டெரானோ. மைலேஜ், தோற்றம், கையாளுமை ஆகியவற்றில் சிறப்பாக இருக்கிறது. அதேவேளை, இந்த விலை கொண்ட மார்க்கெட்டில் போதிய வசதிகளை நிசான் கொடுக்க தவறியுள்ளதையும், டஸ்ட்டரைவிட கூடுதல் விலையில் வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய விஷயம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2013, 11:09 [IST]
English summary
Nissan Terrano compact SUV was unveiled on August 10. This is Nissan's first offering in India that is based on an existing Renault model - the globally popular Duster. Despite being a rebadged model, Nissan has tried to make the Terrano look distinct and it has succeeded in its endeavour to a large extent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+