ரெனோ லாட்ஜி Vs மாருதி எர்டிகா Vs ஹோண்டா மொபிலியோ Vs டொயோட்டா இன்னோவா: ஒப்பீடு

இந்தியாவில் எம்பிவி வகை கார்களுக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. டொயோட்டா இன்னோவா கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த மார்க்கெட்டை மாருதி எர்டிகா உடைத்தது.

இன்னோவாவுடன் இடவசதியில் எர்டிகாவை ஒப்பிட முடியாது. எனினும், சரியான விலை, 7 நபர்கள் செல்வதற்கான இருக்கை அமைப்பு போன்றவை எர்டிகா பக்கம் வாடிக்கையாளர்களை இழுந்தது. இதற்கடுத்து வந்த ஹோண்டா மொபிலியோ டிசைனில் நன்றாக இருந்தாலும் விலை விஷயத்தில் கோட்டை விட்டது.

அடுத்து இந்த மார்க்கெட்டில் களம் புகுந்திருக்கும் மாடல் ரெனோ லாட்ஜியுடன் பிற எம்பிவி கார் மாடல்களின் முக்கிய அம்சங்களின் அடிப்படையில் ஒப்பீட்டுத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். எந்த கார் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என்பதையும் பார்க்கலாம் வாருங்கள்.

விலை ஒப்பீடு - [டீசல் மாடல்கள்]

விலை ஒப்பீடு - [டீசல் மாடல்கள்]

ரெனோ லாட்ஜி [டீசல்]: ரூ.8.19 லட்சம்

மாருதி எர்டிகா [டீசல்]: ரூ. 7.46 லட்சம்

ஹோண்டா மொபிலியோ [டீசல்]: ரூ.8.19 லட்சம்

டொயோட்டா இன்னோவா [டீசல்]: ரூ.12.29 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

 இதுவும் முக்கியம்...

இதுவும் முக்கியம்...

மாருதி எர்டிகா பெட்ரோல்: ரூ.5.98 லட்சம்

ஹோண்டா மொபிலியோ பெட்ரோல்: ரூ. 6.75 லட்சம்

இதில், கவனிக்க வேண்டிய விஷயம், ரெனோ லாட்ஜி மற்றும் டொயோட்டா இன்னோவா கார்கள் டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ ஆகியவை பெட்ரோல் மாடலிலும் கிடைக்கின்றன. எனவே அவற்றின் ஆரம்ப விலையையும் மேலே வழங்கியிருக்கிறோம்.

டிசைன்: ரெனோ லாட்ஜி

டிசைன்: ரெனோ லாட்ஜி

முன்புற அமைப்பும், பக்கவாட்டிலும் நன்றாகவே இருக்கிறது. க்ரோம் பினிஷ் கொண்ட முகப்பு கிரில், இரட்டை வண்ண பம்பர், பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில் போன்றவை டிசைனுக்கு வலுவூட்டும் விஷயங்கள். 15 இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது, காரின் உருவ அமைப்புக்கு ஒத்துப் போகிறது. அதேநேரத்தில், பின்புற டிசைன் அனைவரையும் கவரும் வகையில் இல்லை.

டிசைன்: மாருதி எர்டிகா

டிசைன்: மாருதி எர்டிகா

ஹேட்ச்பேக் காரை பெரிதுப்படுத்தப்பட்ட டிசைன் என்பதை பார்த்தவுடன் சொல்லி விட முடியும். முன்புறம், பக்கவாட்டு டிசைன் நன்றாக இருக்கிறது. ஆனால், பின்புறத்தில் டெயில்லைட்டுகளின் டிசைன் இந்த எம்பிவி காரை ஒரு சிறிய கார் போன்ற தோற்றத்தை கொடுத்து விடுகிறது. ஆனால், அடக்கமான சைஸில் ஓர் சிறப்பான எம்பிவி கார் மாடலாக டிசைனை மாருதி எர்டிகா கொண்டிருக்கிறது. இந்த காரிலும் 15 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிசைன்: ஹோண்டா மொபிலியோ

டிசைன்: ஹோண்டா மொபிலியோ

கவர்ச்சியான டிசைன் கொண்ட எம்பிவி கார் ஹோண்டா மொபிலியோ. ஆனால், இதன் முன்புறம் மற்ற கார்களை போன்று கம்பீரமாக இல்லை. எனினும், நவநாகரீகமான டிசைன் அமைப்பை கொண்டது. இந்த காரின் பின்புறம் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரிலும் 15 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிசைன்: டொயோட்டா இன்னோவா

டிசைன்: டொயோட்டா இன்னோவா

முகப்பில் பெரிய க்ரோம் கிரில், அதற்கேற்ப இயைந்து நிற்கும் ஹெட்லைட் டிசைன், பம்பரின் இருமருங்கிலும் பனிவிளக்குகள், கம்பீரமான பானட் என கம்பீரமாக இருக்கிறது. பக்கவாட்டிலும், பின்புறம் என ஒட்டுமொத்த காரும் ஒரு முழுமையான எம்பிவி காராக டொயோட்டா இன்னோவாவை டிசைன் விஷயத்தில் முன்னிறுத்துகின்றன.

வீல்பேஸ் - ரெனோ லாட்ஜி

வீல்பேஸ் - ரெனோ லாட்ஜி

2,810 மிமீ வீல்பேஸ் கொண்ட இந்த கார் 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. மூன்று வரிசை இருக்கைகள் இருக்கும் நிலையில், 207 லிட்டர் பூட்ரூம் கொண்டுள்ளது. 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. இதன் குறைந்தபட்ச டர்னிங் ரேடியஸ் 5.55 மீட்டர்.

 வீல் பேஸ் - மாருதி எர்டிகா

வீல் பேஸ் - மாருதி எர்டிகா

மாருதி எர்டிகாவின் வீல் பேஸ் 2,740மிமீ. 185மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. இந்த காரில் 135 லிட்டர் பொருட்களை வைப்பதற்கான பூட்ஸ்பேஸ் உள்ளது. ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முக்கிய மாடல்களில் குறைவான இடவசதி மற்றும் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி கொண்ட மாடல் இது. இந்த காரில் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. இதன் குறைந்தபட்ச டர்னிங் ரேடியஸ் 5.2 மீட்டர்.

 வீல்பேஸ் - ஹோண்டா மொபிலியோ

வீல்பேஸ் - ஹோண்டா மொபிலியோ

இந்த கார் 189 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,652மிமீ. மூன்று வரிசை இருக்கைகளும் போடப்பட்ட நிலையில், 223 லிட்டர் பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை வழங்குகிறது. இதன் குறைந்தபட்ச டர்னிங் ரேடியஸ் 5.2 மீட்டர்.

வீல்பேஸ் - டொயோட்டா இன்னோவா

வீல்பேஸ் - டொயோட்டா இன்னோவா

இதன் கிரவுண்ட் கிளிரயன்ஸ் 176மிமீ, வீல் பேஸ் 2,750மிமீ. மூன்று வரிசை இருக்கையும் பயன்பாட்டில் இருக்கும்போது 300 லிட்டர் வரை பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை வழங்குகிறது. இதன் குறைந்தபட்ச டர்னிங் ரேடியஸ் 5.4 மீட்டர்.

 முக்கிய அம்சங்கள் - ரெனோ லாட்ஜி

முக்கிய அம்சங்கள் - ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி கார் 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் வசதி கொண்ட இரு மாடல்களில் கிடைக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கையிலும் சிறப்பான இடவசதியை கொண்டிருப்பது இதன் பலம். 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய மீடியாநவ் மல்டிமீடியா சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரோம் ஃபினிஷ் கொண்ட ஏசி வென்ட்டுகள் என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.

 முக்கிய அம்சங்கள் - மாருதி எர்டிகா

முக்கிய அம்சங்கள் - மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா 7 இருக்கைகள் கொண்ட மாடலில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட்டில் இரண்டாவது இருக்கைக்கான ஏசி வென்ட்டுகள், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் போர்ட்டுகள், மியூசிக் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதிகள் இருக்கின்றன.

 முக்கிய அம்சங்கள் - ஹோண்டா மொபிலியோ

முக்கிய அம்சங்கள் - ஹோண்டா மொபிலியோ

மாருதி எர்டிகாவை போன்றே 7 இருக்கைகள் கொண்ட மாடலில் கிடைக்கிறது. மூன்றாவது வரிசையில் சராசரி உயரம் கொண்ட பெரியவர்கள் அமர முடியும். ஆனால், வசதியாக அல்ல. இரண்டாவது வரிசை இருக்கைக்கு தனி ஏசி வென்ட்டுகள், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதிகள் உள்ளன. மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாளர்.

முக்கிய அம்சங்கள் - டொயோட்டா இன்னோவா

முக்கிய அம்சங்கள் - டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா கார் 7 இருக்கைகள் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. மூன்று வரிசை இருக்கைகளிலும் சிறப்பான இடவசதியை அளிப்பதே இந்த காரின் மிக முக்கிய சிறப்பு. யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் வசதிகளுடன் மீயூசிக் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற ஏராளமான வசதிகள் வேரியண்ட்டுக்கு தக்கவாறு வழங்கப்படுகிறது.

ரெனோ லாட்ஜி - எஞ்சின் ஆப்ஷன்கள்

ரெனோ லாட்ஜி - எஞ்சின் ஆப்ஷன்கள்

ரெனோ லாட்ஜி கார் இருவிதமான சக்தியை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. 85 பிஎஸ் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 110 பிஎஸ் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது.

மாருதி எர்டிகா - எஞ்சின் ஆப்ஷன்கள்

மாருதி எர்டிகா - எஞ்சின் ஆப்ஷன்கள்

மாருதி எர்டிகா கார் 95 பிஎஸ் சக்தியை அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் மாடலிலும், 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இரண்டு மாடல்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

 ஹோண்டா மொபிலியோ - எஞ்சின் ஆப்ஷன்கள்

ஹோண்டா மொபிலியோ - எஞ்சின் ஆப்ஷன்கள்

ஹோண்டா மொபிலியோவில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 119 பிஎஸ் பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 100 பிஎஸ் பவரை அளிக்கும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது.

டொயோட்டா இன்னோவா - எஞ்சின் ஆப்ஷன்கள்

டொயோட்டா இன்னோவா - எஞ்சின் ஆப்ஷன்கள்

டொயோட்டா இன்னோவா காரில் 101 பிஎச்பி பவரை அளிக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. மிகவும் நம்பகமான எஞ்சின்.

மைலேஜ் - ரெனோ லாட்ஜி

மைலேஜ் - ரெனோ லாட்ஜி

85 பிஎஸ் மாடல்: 21.04 கிமீ/லி

110 பிஎஸ் மாடல்: 19.98 கிமீ/லி

மைலேஜ் - மாருதி எர்டிகா

மைலேஜ் - மாருதி எர்டிகா

பெட்ரோல்: 16.02 கிமீ/லி

டீசல்: 20.77 கிமீ/லி

மைலேஜ் - ஹோண்டா மொபிலியோ

மைலேஜ் - ஹோண்டா மொபிலியோ

பெட்ரோல்: 17.3 கிமீ/லி

டீசல்: 24.2 கிமீ/லி

 மைலேஜ் - டொயோட்டா இன்னோவா

மைலேஜ் - டொயோட்டா இன்னோவா

மைலேஜ்[டீசல்]: 12.99 கிமீ/லி

 பாதுகாப்பு அம்சங்கள் ஒப்பீடு

பாதுகாப்பு அம்சங்கள் ஒப்பீடு

ரெனோ லாட்ஜி, மாருதி எர்டிகா, ரெனோ லாட்ஜி மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகிய 4 மாடல்களின் விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டுகளில் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பம் கொண்ட ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், மற்றும் முன்வரிசைக்கான டியூவல் ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா மொபிலியோ, ரெனோ லாட்ஜி மற்றும் டொயோட்டா இன்னோவா கார்களின் டாப் வேரியண்ட்டில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி உள்ளது. இதுபோன்ற, பெரிய கார்களுக்கு இந்த ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சிறப்பான வசதியாக கூறலாம்.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

குறைவான விலையில் இந்த செக்மென்ட்டில் வாடிக்கையாளர்களை கவரும் மாடல் மாருதி எர்டிகா. அடுத்து ஹோண்டா மொபிலியோ. ஆனால், ஓர் முழுமையான எம்பிவி கார்களை விரும்புபவர்களுக்கு டொயோட்டா இன்னோவாதான் சிறந்த தேர்வாக இருக்க முடியும். அதேநேரத்தில், எல்லாம் ஒகே, இன்னோவாவின் விலைதான் என்று கண்ணை கசக்குபவர்களுக்கு இப்போது சிறந்த தேர்வாக இருப்பது ரெனோ லாட்ஜிதான். ரெனோ லாட்ஜியை சிறப்பான தேர்வாக கூறுவதற்கு என்ன காரணம்.

லாட்ஜிதான் சிறந்தது ஏன்?

லாட்ஜிதான் சிறந்தது ஏன்?

எம்பிவி கார் டீசல் செக்மென்ட்டில் அதிசக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட மாடல் ரெனோ லாட்ஜியின்110 பிஎஸ் மாடல். எம்பிவி கார் என்றாலே இடவசதிதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்க்கும் முக்கிய அம்சம். 2,810மிமீ வீல் பேஸ் கொண்ட ரெனோ லாட்ஜி அதனை நிறைவு செய்யும் என்பதுடன், இன்னோவாவைவிட ரூ.4 லட்சம் வரை விலை குறைவாக இருப்பதும் வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் ரெனோ லாட்ஜியும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 13, 2015, 12:56 [IST]
English summary
The Toyota Innova has proved to be the best till date, with the pricing, features and its reliable engine. Competing with the Innova are the Maruti Suzuki Ertiga, Honda Mobilio and the very recently launched Renault Lodgy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+