வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இந்திய சந்தையில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களில் ஒன்று. இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்டைலான பிரீமியம் ஹேட்ச்பேக்குகளிலும் ஒன்று. வசதிகளின் பட்டியலிலும் டாடா அல்ட்ராஸ் உங்களை ஏமாற்றாது. ஆனால் டாடா அல்ட்ராஸ் காரில் நீண்ட காலமாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படாமல் இருந்தது வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய செய்து வந்தது.

இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் கார் முதன் முதலில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் டிசைன் கார் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் மிகவும் உபயோகமான வசதிகளையும் அல்ட்ராஸ் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. இதை தொடர்ந்து 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் அல்ட்ராஸ் காரின் ஐ-டர்போ மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் சிறப்பான செயல்திறனை வழங்க கூடியது.

இருப்பினும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லை என்ற குறை அல்ட்ராஸ் காரில் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த குறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது நிவர்த்தி செய்துள்ளது. ஆம், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கூடிய அல்ட்ராஸ் காரின் புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அல்ட்ராஸ் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (DCA - Dual-Clutch Automatic) கியர் பாக்ஸ் தேர்வை வழங்கியுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடல் கடந்த மார்ச் 21ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 8.09 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான ட்யூயல்-க்ளட்ச் கியர் பாக்ஸ் கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது நாங்கள் பெற்ற அனுபவங்களையும், இந்த கார் குறித்த விரிவான தகவல்களையும் இந்த ரிவியூ செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

டிசைன்

முதல் பார்வையில், மேனுவல் கியர் பாக்ஸ் உடன் கூடிய அல்ட்ராஸ் காரின் ஸ்டாண்டர்டு மாடலுக்கும், ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலுக்கும் இடையே டிசைனில் வித்தியாசங்களை கூறுவது கிட்டத்தட்ட முடியாத ஒரு விஷயம்தான். டெயில்கேட்டில் உள்ள சிறிய 'DCA' (Dual-clutch Automatic) பேட்ஜ்ஜை தவிர, வெளிப்புற டிசைனில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆனால் வயதாவதற்கான எந்த அறிகுறியும் டிசைனில் தெரியவில்லை. இந்த காரின் முன் பகுதியில் கவர்ச்சிகரமான ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. லோ பீம்களை ப்ரொஜெக்டரும், ஹை-பீம்களை ரெஃப்லெக்டர்களும் கவனித்து கொள்கின்றன. அதே சமயம் பம்பரில் உயர்வாக பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் க்ரில் அமைப்பில் அறுகோண வடிவ பேட்டர்ன்களும், கம்பீரமான டாடா லோகோவும் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

டாடா அல்ட்ராஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருந்து வருவதால், அதன் டிசைன் நமக்கு நன்கு பரிட்சயமாகி விட்டது. இருப்பினும் டிசைன் இன்னமும் கூட 'ஃப்ரெஷ்' ஆகதான் உள்ளது. டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட கார், ஒபேரா ப்ளூ வண்ணத்தில் இருந்தது. இது டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வண்ண தேர்வு ஆகும். இந்த வண்ணத்தில் டாடா அல்ட்ராஸ் உண்மையிலேயே நம்மை சுண்டியிழுக்கிறது.

இந்த காரின் பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, 16 இன்ச் ட்யூயல்-டோன் டைமண்ட்-கட் அலாய் வீல்கள்தான் உங்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் விஷயமாக இருக்கும். சிங்கிள்-டோன் மற்றும் ட்யூயல்-டோன் என இரண்டு வகையான வண்ண தேர்வுகளிலும் டாடா அல்ட்ராஸ் கார் கிடைக்கிறது. நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தது ட்யூயல்-டோன் மாடல் ஆகும். இதன் ஓர்விஎம்களும், மேற்கூரையும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. பின் பகுதியை பொறுத்தவரையில், ஸ்பாய்லர் மற்றும் டெயில்கேட்டின் மேல் பாதி ஆகியவற்றுக்கும் கூட கருப்பு நிறம்தான் வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள் கவர்ச்சி சேர்க்கின்றன. டெயில்கேட்டில், Tata, Altroz மற்றும் DCA ஆகிய பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் டிசைன் நம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

காக்பிட் & இன்டீரியர்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் விசாலமானதாகவும், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் இருக்கும். அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நீங்கள் டோர் ஹேண்டில்களை பிடித்து, கதவை திறக்கும்போதே இதனை உணர்ந்து கொள்ளலாம். ஆம், மிகவும் பிரபலமான 90 டிகிரியில் திறக்க கூடிய டோர்களை டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் பெற்றுள்ளது. இதன் மூலம் காருக்கு உள்ளே ஏறுவதும், இறங்குவதும் மிகவும் சுலபமாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

இதற்கிடையே கதவுகளை திறந்ததும், கருப்பு மற்றும் பழுப்பு நிற ட்யூயல்-டோன் இன்டீரியர் நம்மை வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டேஷ்போர்டு ட்ரை-டோன் யூனிட் ஆகும். டேஷ்போர்டின் மைய பகுதியில், ஹார்மன் நிறுவனத்தின் 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வசதிகளையும் இன்னமும் 'வயர்லெஸ்' முறையில் பயன்படுத்த முடியாது. சிஸ்டத்துடன் உங்களை போனை இணைப்பதற்கு ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஏர் கண்டிஷனிங் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கும் கூட இந்த திரையை பயன்படுத்தி கொள்ள முடியும். இதை பயன்படுத்துவது எளிமையாக உள்ளது. ஆனால் இந்த திரையில் 'ஸ்க்ரோல் டவுன்' செய்யும்போது சில சமயங்களில் எரிச்சலான உணர்வு ஏற்படுகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரில் 8 ஸ்பீக்கர் ஹார்மன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு கீழே ஏர் கண்டிஷனிங் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்கள் இருக்கின்றன. டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் காரில், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் கேபினை விரைவாக குளிர்ச்சியடைய செய்வதற்கான 'எக்ஸ்பிரஸ் கூல்' வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை நாங்கள் ஒரு சில முறை பயன்படுத்தி பார்த்தோம். உண்மையிலேயே இது மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த காரில் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியான வசதி எதுவும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் கியர் லிவர் அட்டகாசமாக உள்ளது. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 'ட்ரை-ஏரோ பேட்டர்ன்' கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரில் ஃபேப்ரிக் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை கருப்பு நிறத்தில் இருக்கின்றன. டிரைவர் இருக்கையில் அமர்ந்து பார்க்கும்போது, சாலையின் 'வியூ' நன்றாக உள்ளது. இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ, க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றுக்கான கண்ட்ரோல்களும் ஸ்டியரிங் வீலிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வாய்ஸ் அஸிஸ்ட் வசதியை ஆக்டிவேட் செய்வதற்கான பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பட்டனை அழுத்தி, வாய்ஸ் அஸிஸ்டண்ட்டிற்கு கட்டளைகளை பிறப்பிக்கலாம். அதாவது வால்யூமை கூட்டவோ அல்லது குறைக்கவோ சொல்லலாம். அதேபோல் டெம்ப்ரேச்சரை கூட்டவோ அல்லது குறைக்கவோ உத்தரவிடலாம். ஆனால் இன்னும் பல்வேறு கட்டளைகள் கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

அதே நேரத்தில் இந்த காரின் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மிகவும் விரிவாக உள்ளது. நிறைய தகவல்களை அது நமக்கு வழங்குகிறது. இடது பக்கத்தில் 7.0 இன்ச் டிஎஃப்டி ஃபுல்-கலர் டிஸ்ப்ளேவையும், வலது பக்கத்தில் அனலாக் ஸ்பீடோமீட்டரையும் இது கொண்டுள்ளது. டேக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர்கள், ஓடோமீட்டர், எரிபொருள் அளவு உள்பட பல்வேறு தகவல்களை இந்த திரை காட்டுகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் இன்டீரியர் சிறப்பாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

நடைமுறை பயன்பாடு, சௌகரியம் & பூட் ஸ்பேஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொதுவாகவே நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற மற்றும் சௌகரியமான கார்களைதான் தயாரிக்கும். டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் காரும் அப்படிதான் உள்ளது.

கியர் லிவருக்கு பின்னால் இரண்டு கப் ஹோல்டர்கள் இருக்கின்றன. சென்டர் கன்சோலின் இறுதியில் ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே சிறிய அளவில் இட வசதி உள்ளது. இது மிகவும் சிறியதாக உள்ளதால், இங்கே எதை வைக்க முடியும்? என்பது உறுதியாக தெரியவில்லை. வழக்கமான ஆண்ட்ராய்டு மொபைல் போனை வைக்க முடியுமா? என்பது கூட சந்தேகமாதான் உள்ளது. இருப்பினும் இந்த காரின் அனைத்து டோர்களிலும், டோர் பாக்கெட்கள் இருக்கின்றன. இந்த காரின் 4 டோர்களிலும் 1 லிட்டர் வாட்டர் பாட்டிலை வைக்க முடியும். இது உண்மையிலேயே சிறப்பான விஷயம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

அதே நேரத்தில் முன் பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளும் சௌகரியமாக இருக்கின்றன. இந்த இருக்கைகள் மென்மையாக இருப்பதுடன், குஷனிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. நகர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறிய பயணங்கள் என்றாலும், தொலை தூர பயணங்கள் என்றாலும், இந்த 2 இருக்கைகளும் உங்களுக்கு போதுமான சௌகரியத்தை வழங்கும்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

அதே சமயம் பின் பக்க இருக்கைகளில், லெக்ரூம், ஹெட்ரூம் ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளன. இந்த விஷயத்தில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் பக்க பயணிகளுக்கு என தனியாக ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டிருப்பதும் சிறப்பான விஷயம். காற்றின் ஓட்டம் மற்றும் திசையை கட்டுப்படுத்தி கொள்ள முடியும். ஏசி வெண்ட்களுக்கு கீழே 12V பவர் அவுட்லெட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பின் பக்க பயணிகள் தங்கள் செல்போன் போன்றவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம். அதே சமயம் டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் காரின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டர்கள் ஆகும். இதுவும் உண்மையிலேயே சிறப்பான விஷயம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

இன்ஜின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

பவர்ட்ரெயின் என வந்து விட்டால், டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கார், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனித்துவமான கார்களில் ஒன்று. நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே கார் இது மட்டும்தான். மற்ற கார்களில், ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்கள், டர்போசார்ஜ்டு இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவமான காம்பினேஷன் காரணமாக, டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலின் செயல்திறனில் எங்களுக்கு சிறிய அளவில் சந்தேகம் இருந்தது.

டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலில், 1.2 லிட்டர் Revotron நேச்சுரலி அஸ்பிரேட்டட், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 84.8 பிஹெச்பி பவரையும், 3,300 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரில் மிக முக்கியமான பாதுகாப்பு வசதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த கார், 'ஆட்டோ பார்க் லாக்' வசதியை பெற்றுள்ளது. கார் தற்செயலாக உருண்டு வருவதை இந்த வசதி தடுக்கிறது. இதனை சோதித்து பார்ப்பதற்காக சற்றே சரிவான பகுதியில் காரை நிறுத்தி விட்டோம். பின்னர் கியர் பாக்ஸை நியூட்ரலுக்கு கொண்டு வந்து விட்டு, டிரைவர் பக்க கதவை திறந்து விட்டோம். அப்போது 'Auto Park Activated' என்ற மெசேஜ் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் தோன்றுகிறது. நியூட்ரலில் இருக்கும்போது டிரைவர் வெளியே சென்று விட்டார் என்பதை இந்த கார் தானாகவே கண்டறிந்து, உருண்டு வருவதை தடுக்க, அதுவாகவே பார்க் மோடை ஆக்டிவேட் செய்து விடுகிறது. இது உண்மையிலேயே நல்ல வசதி. சரி, இனி இந்த காரின் செயல்திறன் மற்றும் கியர் பாக்ஸ் குறித்த தகவல்களுக்கு வருவோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

இந்த காரில் வழங்கப்பட்டிருப்பது 6 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். இதுவும் வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயம்தான். ஏனெனில் ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்கள் பொதுவாக 7 ஸ்பீடுகளை கொண்டிருக்கும். டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்பட்டிருக்கும் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வரப்பிரசாதமாக இருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய கியர் பாக்ஸை மிக சிறப்பாக வடிவமைத்துள்ளது என்பதை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக அனைத்து ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்களிலும், 2 லேஷாஃப்ட்கள் வழங்கப்பட்டிருக்கும். இதுதான் அனைத்து ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன்களிலும் எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய கியர் பாக்ஸ் ஒரே ஒரு லேஷாஃப்ட்டை மட்டுமே பெற்றுள்ளது. இதன் காரணமாக கியர் பாக்ஸின் உள்ளே நகரும் பாகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிக்கலும் குறைந்துள்ளது. இவை அனைத்தும், இந்த புதிய கியர் பாக்ஸை சிறப்பான ஒன்றாக மாற்றியுள்ளன.

டாடா அல்ட்ராஸ் காரில் இந்த கியர் பாக்ஸ் தனது பணியை கச்சிதமாக செய்கிறது. ஆனால் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளதால், விரைவான ஆக்ஸலரேஷன் மட்டும் மிஸ்ஸிங். இதில் இருந்து அதிக செயல்திறனை வெளிக்கொணர்வதற்கு, இந்த கியர் பாக்சுக்கு, டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேவை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ காரில் இந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை டாடா மோட்டார்ஸ் வழங்கியிருந்தால், சிறப்பான செயல்திறன் கிடைத்திருக்கும். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன்தான், ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை வழங்கியுள்ளது. வரும் காலத்தில் அல்ட்ராஸ் காரின் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன், இந்த கியர் பாக்ஸை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கலாம். ஏதேனும் ஒரு வகையில் அல்ட்ராஸ் காருடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். இருப்பினும் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பாடி ரோலும், சிறப்பான சஸ்பென்ஸனும் உங்களுக்கு மிகச்சிறந்த பயணத்தை வழங்குகின்றன. அத்துடன் இந்த காரின் பிரேக்குகளும் சிறப்பாக பணியாற்றுகின்றன.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

பாதுகாப்பு மற்றும் முக்கியமான வசதிகள்

இந்த செய்தியின் தொடக்கத்திலேயே, இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என டாடா அல்ட்ராஸ் காரை குறிப்பிட்டிருந்தோம். ஆம், டாடா அல்ட்ராஸ் கார் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின் வெற்றிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு வசதிகள்

  • ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்
  • பிரேக் ஸ்வே கண்ட்ரோல்
  • எலெக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஸன்
  • கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
  • முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள்
  • வாய்ஸ் அலர்ட்கள்
  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
  • பார்க்கிங் அஸிஸ்டன்ஸ்
  • ஆட்டோ பார்க் லாக்
  • டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் முக்கியமான வசதிகள்

    • ஐரா கனெக்ட்டிவிட் சூட்
    • 7.0 இன்ச் ஹார்மென் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
    • வாய்ஸ் கமாண்ட்கள்
    • எக்ஸ்பிரஸ் கூலிங்
    • ஆட்டோ ஹெட்லேம்ப்கள்
    • மழை வந்தால் தானாகவே இயங்கும் வைப்பர்கள்
    • க்ரூஸ் கண்ட்ரோல்
    • வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

      வேரியண்ட்கள், விலை மற்றும் வண்ண தேர்வுகள்

      டாடா அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கார் 7 வேரியண்ட்கள் மற்றும் 6 வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

      வேரியண்ட்கள் மற்றும் விலை

      • XMA+ : 8,09,900 ரூபாய்
      • XTA : 8,59,900 ரூபாய்
      • XTA டார்க் : 9,05,900 ரூபாய்
      • XZA : 9,09,900 ரூபாய்
      • XZA (O) : 9,21,900 ரூபாய்
      • XZA+ : 9,59,900 ரூபாய்
      • XZA+ டார்க் : 9,89,900 ரூபாய்
      • வண்ண தேர்வுகள்

        • காஸ்மோ டார்க்
        • ஒபேரா ப்ளூ
        • டவுன்டவுன் ரெட்
        • ஆர்கேட் க்ரே
        • அவென்யூ ஒயிட்
        • ஹார்பர் ப்ளூ
        • இதில் ஒபேரா ப்ளூ வண்ண தேர்வுதான், ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலுடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வண்ண தேர்வுகள் அனைத்தும் ஸ்டாண்டர்டு அல்ட்ராஸ் காரில் இருந்து அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன.

          வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது டாடா... அல்ட்ராஸ் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ரிவியூ!

          தீர்ப்பு

          டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே மிக சிறப்பான கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லாமல் இருந்ததுதான் இந்த காரின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வை வழங்கியிருப்பதன் மூலம், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை எதிர்பார்ப்பவர்களின் தேவையை டாடா மோட்டார்ஸ் பூர்த்தி செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 30, 2022, 9:00 [IST]
English summary
Tata altroz dual clutch automatic review features price engine performance driving impressions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+