ஓட்டி பார்த்தா சும்மா தாறுமாறு! இந்த காரை வாங்க ஷோரூம்ல கூட்டம் குவிய போகுது - டாடா அல்ட்ராஸ் ரேஸர் ரிவியூ!

கடந்த 2018ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முறையாக தனது டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஜேடிபி வெர்ஷனை கோவையில் உள்ள ஜெயம் ஆட்டோமொட்டிவ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்தது இரண்டு ஆண்டுகள் இந்த கார்கள் விற்பனையில் இருந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஜேடிபி வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரிவு படுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஃபாஸ்டர் வெர்ஷன் காரான அல்ட்ராஸ் ரேஸர் காரை இந்த உலகிற்கு முதன் முதலாக காட்சிப்படுத்தியது. அதன் பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்நிறுவனம் டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரை இந்திய சாலைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

tata altroz racer review

இந்த காரை உருவாக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள எஃப்1 கார் ரேஸரான நரேன் கார்த்திகேயன் உதவியுடன் வேகமாக சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் வகையில் இந்த டாடா அல்ட்ராஸ் பிரீமியம் காரை அப்டேட் செய்து ரேஸர் எடிசனை உருவாக்கியுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்க எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவினர் கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள CoASST டிராக்கில் இந்த காரை ஓட்டி பார்த்தோம். இந்த கார் ஓட்டி பார்க்கும்போது எப்படி இருந்தது. இதில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன. ரேஸர் எடிசன் என்ற பெயருக்கு உண்மையில் இந்த கார் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் வழங்குகிறதா என்பதை விரிவாக பார்ப்போம்.

tata altroz racer review

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ராஸ் ரேஸர் காருக்கு சாதாரண அல்ட்ராஸ் காருக்கு அதற்கான ஸ்போர்ட்டி லுக்கை கொடுத்துள்ளது. முக்கியமாக இதில் டூயல் டோன் லுக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் மேல் உள்ள பகுதியிலும் கீழ் உள்ள பகுதிகளும் கலர் மாற்றங்களை செய்துள்ளன. இந்த காரில் அடாமிக் ஆரஞ்சு, ப்யூர் கிரே, அவென்யூ ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் இருக்கிறது.

இந்தக் காரின் பானட் மற்றும் ரூப் பகுதியில் இரண்டு வைட் ஸ்டிரிப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் பகுதி கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஓஆர்விஎம், பில்லர், அலாய் வீல்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அலாய் வீல்கள் 16 இன்ச் அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

tata altroz racer review

இந்த புதிய காரில் ரேஸர் என்ற பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க வீல் ஆட்சிக்கு மேலே இந்த பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. பூட் லிட் பகுதியில் ஐ-டர்போ ப்ளஸ் பேட்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க ஸ்பாய்லர்கள் டூயல் டிப் எக்ஸாஸ்ட் செட்டப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் பார்க்க ஸ்போர்ட்டியான லுக்கில் இருக்கிறது. பெயருக்கு தகுந்தார் போல் காரின் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டுள்ளது சிறப்பாக இருக்கிறது.

இந்த அல்ட்ராஸ் ரேஸர் காரின் உட்பகுதியை பொருத்தவரை முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே அட்டாமிக் ஆரஞ்ச் நிற ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஏர் வென்ட் பகுதி அட்டாமிக் ஆரஞ்ச் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. தையல் ஸ்டிரிப்கள் கான்ட்ராஸ்ட் நிறத்தில் இந்த காரின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராஸ் ரேஸர் காரின் பகுதியில் ஹெட் ரெஸ்ட், ரேஸர் லோகோ எம்போஸ் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்டுகள் வெண்டிலேட்டட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த செக்மென்டிலேயே இந்த சீட்டுகள் கொண்ட முதல் கார் இதுதான். இந்தியாவில் இருக்கும் அதிக வெப்பமான சூழ்நிலைக்கு இந்த சீட்டுகள் நிச்சயம் டிரைவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த காரின் மிகப்பெரிய மாற்றமே ஸ்டேரிங் வீலுக்கு பின்னால் தான் இருக்கிறது. இது செமி டிஜிட்டல் செட்டப் உடன் சாதாரண அல்ட்ராஸ் காரில் இருக்கிறது. ரேஸர் காரை பொறுத்த வரை 7 இன்ச் முழு டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான தகவல்கள் இடம் பெறுகின்றன. இந்த கார் ஓட்டும்போது உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இந்த டிஸ்ப்ளேயில் வருவதால் இது உதவிகரமாக இருக்கிறது.

மற்ற அப்டேட்களை பொறுத்தவரை டாடா அல்ட்ராஸ் காரில் அம்பியன்ட் லைட்டிங் இருக்கிறது. இதுபோக 360 டிகிரி கேமரா சிஸ்டம் இருக்கிறது. இதை இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோக வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபையர், வாய்ஸ் கமெண்ட் உடன் கண்ட்ரோல் செய்யக்கூடிய சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பிரேக் டவுன் நேரத்தில் பயன்படுத்தக்கூடிய இ-கால் மற்றும் பி-கால் சிஸ்டம்களும் இருக்கின்றன. நீங்கள் செல்போன் இல்லாமல் பயணம் செய்யும்போது அவசர சூழ்நிலையில், சிக்கிவிட்டாலோ அல்லது விபத்தில் சிக்கி விட்டாலோ உடனடியாக இது எமர்ஜென்சி யூனிட்டுக்கு தகவலை அனுப்பி உங்களை காப்பாற்ற உதவும்.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2லிட்டர் டர்போ சார்ஜர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் நெக்ஸான் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 118.3 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்மிலும் 170 என்எம் டார்க் திறனை 1750 மற்றும் 4000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முன்பக்க வீலுக்கு டிரைவ் அவுட்புட்டை அனுப்புகிறது.

இந்த இன்ஜினுடன் இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 11.3 நொடிகளில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கிளட்சை பொருத்தவரை புதிய ஹைட்ராலிக் கண்ட்ரோல் சிஸ்டம் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கியர் மாற்றத்தின் போது நீங்கள் கிளட்ச் குறித்து பெரிதாக கவலைப்பட தேவையில்லை. இதன் சஸ்பென்ஷன் சிஸ்டமும் ரேஸர் காருக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் இந்த அல்ட்ராஸ் ரேஸர் காரை இந்தியாவின் முதல் எஃப்1 ரேஸரை வைத்து உருவாக்கியுள்ளதால், இதன் பெர்ஃபார்மென்ஸ் பற்றி நீங்கள் கேட்கவே தேவையில்லை. நாங்கள் கோவையில் இந்த காரை ஓட்டிப் பார்த்தபோது, சிறப்பான பெர்ஃபார்மென்ஸை கொடுத்தது தைரியமாக கார்களை கார்னர் பகுதியில் திருப்ப முடிகிறது. வேகமாக செல்லும்போது எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது.

இந்த காரை எடுத்து மூவ் செய்தவுடன் இதன் பஞ்ச் பெர்பார்மன்ஸ் பெரிய அளவுக்கு தெரியவில்லை. மெல்ல மெல்ல கார் போகும்போது 2500 ஆர்பிஎம்-க்கு மேல் கார் பயணிக்கும் போது இதன் பஞ்ச் பெர்ஃபார்மென்ஸ் வெளிப்படுத்துகிறது. 5500 ஆர்பிஎம் வரை சிறப்பான பவரை வெளிப்படுத்தும் வகையில் இதன் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கியர்பாக்ஸில் கியரை மாற்றுவது சுலபமாக இருக்கிறது. ஹைட்ராலிக் ஆப்ஷன் கொண்ட கிளட்ச் இருப்பதால் லேசாக கிளட்சை மிதித்தாலே போதுமானதாக இருக்கிறது. இந்த ரக கிளட்சை பயன்படுத்த ஓட்டுனருக்கு கொஞ்சம் காலம் தேவைப்படும். ஆனால் ஒரு முறை பிக்கப் செய்துவிட்டால் இந்த மாதிரி கிளட்சை தான் நீங்கள் விரும்புவீர்கள்.

இந்த காரில் உள்ள சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை ரெகுலரான அல்ட்ராஸ் காரை விட கொஞ்சம் ஸ்ட்ரிப்பாக இருக்கிறது. இதன் ஸ்டேரிங் செட்டப்பும் சார்பாக இருக்கிறது. இதன் வேகம் ஏற ஏற ஸ்டீரிங் வெயிட்டும் அதிகரிக்கிறது. இதனால் இந்த காரில் வேகமாக செல்லும்போது நம்பிக்கையுடன் தைரியத்தையும் வழங்குகிறது. சஸ்பென்ஷன் செட்டப்பாக இருந்தாலும் பெரிய அளவில் சிறப்பாக இல்லை.

இந்த காரை ஓட்டிப் பார்க்கும்போது எங்களுக்கு இருந்த ஒரே பிரச்சனை இதன் பிரேக் தான். டாடா நிறுவனம் இதன் பிரேக்குகளை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம். பிரேக் அமைக்கப்பட்ட பகுதி சிறப்பாக இருக்கிறது. ஆனால் ஒரு பஞ்சு போல பிரேக் செயல்படுகிறது. டிரைவருக்கு இது பெரிய அளவிலான தைரியத்தை கொடுக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

இறுதி தீர்ப்பு: டாடா அல்ட்ராஸ் கர்ர் ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இது இந்தியர்கள் மத்தியில் நம்பகத்தன்மையான அதே நேரம் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற ஹேட்ச்பேக் காராக பெயர் பெற்று உள்ளது. இதில் டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் சற்று வித்தியாசமாக சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ஃபன்னான ரைடிங் பவர்ஃபுல்லான பெர்ஃபார்மென்ஸை விரும்புபவர்களுக்கு டாடா அல்ட்ராஸ் கார் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக பயணிக்க இந்த கார் சிறப்பாக இருக்கும். இந்த காரிலும் குடும்பத்துடன் பயணிக்க நல்ல அனுபவத்தை தான் தரும். இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 9.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் போட்டி காரான ஹூண்டாய் ஐ20 என் லைன் காரை விட இந்த கார் பெஸ்ட் என சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 16, 2024, 12:00 [IST]
English summary
Tata altroz racer edition review in tamil
மேலும்... #india #Tata Altroz Racer #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X