குடும்பமாக பயணிக்க இனி இந்த மாதிரி எலக்ட்ரிக் கார் தான் சரியா இருக்கும்... டாடா கார் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மீண்டும் ஒரு புதிய எலக்ட்ரிக் காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. கர்வ் இவி (Curvv EV) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது, டாடா மோட்டார்ஸின் விலைமிக்க எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. 45kWh அல்லது 55kWh பேட்டரி உடன் டாடா கர்வ் இவி காரை வாங்கலாம். இதற்கேற்ப காரின் விலையும் வேறுப்படும். மற்ற மாடர்ன் டாடா கார்களை போன்று, டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரும் அட்வான்ஸான டெக்னாலஜி மற்றும் நேர்த்தியான டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய புத்தம் புதிய டாடா எலக்ட்ரிக் காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது நாங்கள் பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இந்த தொகுப்பில் வழங்கி உள்ளோம்.

தோற்றம்: டாடா கர்வ் இவி ஆனது ஒரு கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார் ஆகும். பொதுவாகவே, கூபே ஸ்டைல் கார்களில் ரூஃப் பின்பக்கத்தில் கூடுதல் சாய்வாக இருக்கும். அதேபோன்று, கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் தோற்றமும் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது. ரூஃப் ஆனது காரின் பின் இறுதிமுனையில் வந்து முடிகிறது. காரை சுற்றிலும் ஆங்காங்கே மெல்லியதான லைன்களை பார்க்க முடிகிறது.

tata curvv ev review

அதேபோல், காரை சுற்றிலும் பாடி கிளாடிங்ஸ் பியானோ கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவை மோதல்களில் இருந்து காரை பாதுகாப்பது மட்டுமின்றி, காருக்கு அழகான தோற்றத்தையும் கொடுத்துள்ளன. குறிப்பாக, சக்கரங்களுக்கு மேலே சதுரமாக கொடுக்கப்பட்டுள்ள வீல் ஆர்ச்சுகள் கர்வ் இவி காரின் தோற்றத்துடன் நன்கு ஒன்றிப்போய் உள்ளன. காரின் முன்னாலும், பின்னாலும் அடியில் காட்சித்தரும் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் காருக்கு ரக்டு தோற்றத்தை கொடுத்துள்ளன.

எலக்ட்ரிக் கார் என்பதால், காருக்கு முன்பக்கத்தில் என்ஜின் கிடையாது. பொனெட்டிற்கு அடியில் 11.6 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஃப்ரங்க் என அழைக்கப்படும் இந்த இடத்தில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்லலாம். ஆனால், இந்த ஃப்ரங்க் இடவசதி ஆனது கர்வ் இவி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். காருக்கு பின்பக்கத்தில் பெரிய பொருட்களை வைத்து செல்ல 500 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

tata curvv ev review

காருக்குள் ஆங்காங்கே வண்ண விளக்குகள் ஒளிர்வதால், கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்குள் நுழைந்ததும் பிரீமியம் தரத்திலான உணர்வு நமக்கு ஏற்படுகிறது. மேலும் ஜாலியான பயண அனுபவத்தை விரும்புபவர்கள் பனோராமிக் சன்ரூஃப்-ஐ திறந்து வைத்துக் கொண்டு வானத்தை பார்த்தப்படி பயணம் செய்யலாம். சன்ரூஃப்-ஐ திறக்க/ மூட பொத்தான்களை பயன்படுத்தலாம் அல்லது எளிமையாக, குரல் மூலமாக அதனை கண்ட்ரோல் செய்யலாம்.

காரின் டேஸ்போர்டில் டிஜிட்டல் பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் டிஜிட்டல் கியர் ஷிஃப்டர் மற்றும் காரின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள சார்ஜிங் பகுதி உள்ளிட்டவை நமக்கு மாடர்ன் கார் என்கிற உணர்வை தருகின்றன. காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள லைட் பார் மற்றும் காருக்குள் புதைந்து கிடக்கும் கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை பயணத்தின்போது எதிர்காற்றினால் காரின் இயக்கம் தடைப்படுவதை குறைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

tata curvv ev review

எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி: ஏற்கனவே கூறியதுபோல், 45kWh மற்றும் 55kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 45kWh பேட்டரியை தேர்வு செய்தால், அதிகப்பட்சமாக 150 எச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். 45kWh பேட்டரி கொண்ட கர்வ் இவி எலக்ட்ரிக் காரை வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தி 72 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜர் மூலமாகவும் சார்ஜ் செய்யலாம்; அதேநேரம் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் மூலமாகவும் சார்ஜ் செய்யலாம்.

55kWh பேட்டரியை தேர்வு செய்தால், அதிகப்பட்சமாக 167 எச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். அதாவது, இரு பேட்டரி ஆப்ஷன்களிலும் அதிகப்பட்சமாக கிடைக்கக்கூடிய டார்க் திறனில் எந்த வித்தியாசமும் கிடையாது. 55kWh பேட்டரியை கொண்ட கர்வ் இவி காரை 70 கிலோவாட்ஸ் சார்ஜரின் மூலமாக 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 40 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.

tata curvv ev review

மேலும், 55kWh பேட்டரி உடன் கர்வ் இவி காரை வாங்குவோர்க்கு மேலும் சில பயன்கள் உள்ளன. அதாவது, கர்வ் இவி காரில் இருந்து வேறொரு காருக்கு சார்ஜை பரிமாறி கொள்ள முடியும் அல்லது அந்த வாகனத்தில் இருந்து சார்ஜை பெற முடியும். மற்றும், கர்வ் இவி காரில் இருந்து தொழிற்நுட்ப சாதனங்களுக்கு மின்சாரத்தை வழங்கவும் முடியும். இந்த வகையில், கர்வ் இவி கார் ஒரு ஆற்றல் வழங்கி ஆக செயல்படும்.

இந்த இரண்டில் எந்த பேட்டரி உடன் கர்வ் இவி காரை வாங்கினாலும் காந்த மின்னியக்குவிசை மோட்டார் கிடைக்கும். காரில் இருந்து அகற்ற முடியாத வகையில் நிரந்தரமான எலக்ட்ரிக் மோட்டாரான இதனுடன், லிக்யுடு-கூல்டு பேட்டரி சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வெவ்வேறான கால சூழ்நிலைகளில் காரின் தடையற்ற இயக்கத்திற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tata curvv ev review

இவற்றுடன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, மல்டிபிள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் கர்வ் இவி காரில் இடம்பெற்றுள்ளன. இந்த பாதுகாப்பு அம்சங்களில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், டிராஃபிக் சிக்னல்களை அடையாளம் காணும் வசதி, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் 360-டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?: டாடா கர்வ் இவி கார் உண்மையில் எங்களுக்கு ஜாலியான பயணத்தை வழங்கியது. எலக்ட்ரிக் கார் என்பதால், காரை ஸ்டார்ட் செய்தவுடன் உடனடியாக அதிக டார்க் திறன் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மொத்தம் 3 விதமான டிரைவ் மோட்களை டாடா கர்வ் இவி காரில் பெறலாம். 55kWh பேட்டரி உடன் 167 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம் என்பதால், இந்த பேட்டரி உடன் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் கர்வ் இவி காரில் எட்டிவிட முடியும்.

tata curvv ev review

ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள பெடில் ஷிஃப்டர்ஸ் ஓட்டுனரின் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. இதனால், கர்வ் இவி காரில் அதிக செயல்திறன் கிடைப்பது மட்டுமல்லாமல், காரை கண்ட்ரோல் செய்வது எளிதாகிறது. இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரின் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆனது மென்மையான மற்றும் சவுகரியமான பயணத்திற்கு ஏற்ப ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிஜிட்டல் ஸ்டேரிங் சக்கரத்தில் ஏகப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளதால், டிரைவிங்கின் போது அவற்றை பயன்படுத்துவது எளியதாக உள்ளது. மேலும், இதன் காரணமாக கர்வ் இவி காரை தொலைத்தூர பயணங்களுக்கு தைரியமாக கொண்டு செல்லலாம். இதற்கேற்றவாறு, பயணிகளுக்கான இருக்கைகள் மிகவும் சவுகரியமானதாக, வெண்டிலேஷன் வசதி உடன் வழங்கப்பட்டுள்ளன.

tata curvv ev review

பயணத்தை மேலும் சவுகரியமாக்கும் வகையில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய ORVM-கள், தானாக டிம் ஆகக்கூடிய ரியர்வியூ மிரர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது எங்களை மிகவும் கவர்ந்தது. மேலும், AQI டிஸ்பிளே உடன் காற்று சுத்திக்கரிப்பான் வழங்கப்பட்டு உள்ளதால், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான பயணத்தை கர்வ் இவி காரில் பெற முடிந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஸ்டைலான தோற்றம், சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மற்றும் அட்வான்ஸான டெக்னாலஜி உடன் கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அன்றாட அலுவலக போக்குவரத்துக்கும், போதுமான பெர்ஃபார்மன்ஸை எதிர்பார்ப்பவர்களும் டாடா கர்வ் இவி காரை 45kWh பேட்டரி உடன் வாங்கலாம்.

tata curvv ev review

அதுவே, அதிக பெர்ஃபார்மன்ஸ் மற்றும் விரைவான சார்ஜிங்கை எதிர்பார்ப்பவர்கள் 55kWh பேட்டரி உடன் இந்த காரை வாங்கலாம். ஒட்டுமொத்தத்தில், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் சிறந்த பயண அனுபவத்தை எங்களுக்கு வழங்கியது. டாடா மோட்டார்ஸின் சமீப கால தரமான கார்களுள் ஒன்றாக கர்வ் இவி-ஐ சொல்லலாம். மேலும், இந்திய எலக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட்டில் டாடா கர்வ் இவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2024, 12:00 [IST]
English summary
Tata curvv ev first test drive review design features battery check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X