ரோட்டுல போனா ஊரே திரும்பி பார்க்கும்! டாடா கர்வ் ICE காரை ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

டாடா நிறுவனம் தனது கர்வ் கார் மூலம் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகப்பெரிய புரட்சியே செய்து வருகிறது. இந்த கார் கூபே ரக காராகும் இதனால் இதன் ரூஃப் பகுதி ஸ்லோப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு பலரை ஈர்த்துள்ளது. சாலையில் செல்லும்போது இந்த கார் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் காண்பதற்கு மட்டுமல்ல இந்த காரில் உள்ள அம்சங்களும் சிறப்பாக இருக்கின்றன. பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் சொகுசு அம்சங்கள் எல்லாம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. சொகுசு மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த காரை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிறப்பான ரைடிங் அனுபவமும் இந்த காரில் பயணிக்கும் போது கிடைக்கும்.

tata curvv ice review

இந்த காரின் கம்பஷன் இன்ஜின் கொண்ட வெர்ஷனை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது குழுவிற்கு கிடைத்தது. அதன்படி இந்த காரின் வடிவமைப்பு இந்த காரில் உள்ள அம்சங்கள் டிரைவிங் அனுபவம் உள்ளிட்ட ஒட்டுமொத்தமான விஷயங்களை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். விரிவாக இந்த விமர்சனத்தை காணலாம் வாருங்கள்.

டிசைன் டாடா கர்வ் கார் ஆட்டோமொபைல் மார்க்கெட்டிலேயே தனித்துவமான வடிவமைப்பு கொண்ட காராக இருக்கிறது. இரண்டு டிசைனையும் சேர்த்து இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு பகுதி காண்பவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு மாடர்னான இலக்கை கொடுக்கிறது.

tata curvv ice review

இந்த காரில் உள்ள ஹெட்லைட் சரியாக பம்பரின் இறுதிப் பகுதியில் ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கிரில் பகுதியில் உள்ள கிரோம் ஃபினிஷ் காருக்கு சிறப்பான லுக்கை கொடுக்கிறது. மேலும் இந்த காரில் ஏர் ஃப்ளோ சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முகப்பு பகுதி தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு பகுதியில் முன்பே சொன்னதுப்படி கூப்பே ஸ்டைலில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் டாப் வேரியண்டில் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீல்களும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு சிறப்பான பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏரோ டைனமிக் சிறப்பாக இருக்கும். ஓஆர்விஎம் பகுதியில் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

tata curvv ice review

இந்த கார் பார்ப்பதற்கு போட்டியான லுக்கை கொடுக்கிறது ஸ்லோப்பான ரூஃப் லைன் இருந்தாலும் இந்த காரின் வடிவமைப்பு எஸ்யூவி கார் போலவே இருக்கிறது இந்த காரின் பின்பக்கத்தில் கனெக்டிங் லைட் பார் வழங்கப்பட்டுள்ளது பம்பர் பகுதிக்கு மேலே வழங்கப்பட்டுள்ளது காரின் முன்புற வடிவமைப்பிற்கு ஏற்றார் போல் பின்புறமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை சொகுசான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. லெதர் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டேரிங் வீலை சுற்றி லெதர் கவர் பொருத்தப்பட்டுள்ளது. 12.3 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கிறது. அதிக தொழில் நுட்பங்கள் நிறைந்த காராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் உள்ளே 10 இன்ச் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரைவருக்கு தேவையான ஏகப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஸ்பீக்கருகாக 9 ஜேபிஎல் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இது நேரடியாக சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு காருக்குள் சிறப்பான சத்தம் ஏற்படுத்த வழி வகுக்கிறது.

இந்த காரின் வடிவமைப்பில் சில பிரச்சினைகளும் இருக்கிறது. உயரமான பயணிகள் இந்த காரில் பின் சீட்டில் அமர்ந்து செல்வது சற்று சிரமமாக இருக்கும். பின்பக்கம் ஸ்லோப்பான ரூப் லைன் இருப்பதால் அவர்களுக்கு தலைப்பகுதியில் அதிக இடம் இருக்காது. கால் வைக்கவும் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கலாம். இதனால் அவர்கள் காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் கூட சற்று சிரமமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டாடா நிறுவனம் இந்த காரின் டிரைவர் சீட்டில் 6 ஸ்டேப் கொண்ட எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது வெண்டிலேட்டர் சீட்டுகளாக உள்ளன. அதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது டிரைவருக்கு பெரிய அளவில் ஏற்படாமல் இருக்கும். மேலும் இந்த காரில் என்ட்ரன்ஸ் மற்றும் எக்ஸிட் ஆகிய விஷயங்களை குறிக்கும் வகையில் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது.

இது போக கார்னரிங் ஃபாக் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கூடிய சன்ரூஃப் பேனல், மூடிற்கு ஏற்றார் போல் லைட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இந்த காரின் உட்பகுதி சொகுசாகவும் அதே நேரம் வசதி நிறைந்த காராகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா கார் காரின் அம்சங்களை பொருத்தவரை மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் அடாஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அடாப்டிக் க்ரூஸ் கண்ட்ரோல், லேண்ட் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், 360 டிகிரி 3டி சரவுண்ட் கேமரா இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை இரண்டு பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது 1.2லிட்டர் டர்போ சார்ஜர் ஹைப்பர்யான் டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 9.9 கிலோ வாட் பவரையும் 225 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆப்ஷனாக 1.2 லிட்டர் ரிவோட்ரான் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 88.2 கிலோ வாட் பவரையும் 170என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

மூன்றாவது இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் கைரோஜெட் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 86.7 கிலோ வாட் பவரையும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கார் பாதுகாப்பு மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. செக்மெண்டிலேயே சிறந்த காராக இந்த கார் இருக்கும் என்ற பேச்சு நிலவி வருகிறது.

முதல் முறையாக டீசல் இன்ஜினில் 7 ஸ்பீடு டூயட் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தியுள்ளது. இதுபோக 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் பெடல் ஷிஃப்ட் அனுபவமும் கிடைக்கிறது. மேலும் இந்த காரில் எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடு மோடுகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இது சிறப்பாக செயல்படும் இடத்திற்கு தகுந்தார் போல் ரைடு மோடு மாற்றிக் கொள்ள முடியும்.

டாடா கர்வ் கார் சாலையில் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் வெளிப்படுத்துகிறது. நாங்கள் ஓட்டி சென்ற கார் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் காராக இருக்கிறது. இது சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கியது. முக்கியமாக ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த கார் சிறப்பாக செயல்பட்டது பல்வேறு கண்டிஷன்களில் சிறப்பாக செயல்படும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக டார்க்கை விரும்புபவர்கள் டீசல் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். ஹைவேயில் வேகமாக பயணிக்க இந்த கார் சிறந்ததாக இருக்கும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள 7 ஸ்பீடு டிசிஏ கியர்பாக்ஸ் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தி சிறப்பான அனுபவம் பெற வழி வகுக்கிறது.

மேலும் இந்த கார் ஹேண்டிலிங் செய்ய பேலன்ஸாக இருக்கிறது. பின்பக்கம் ஸ்லோப்பான ரூப் லைன் இருப்பதால் பின்பக்க விசிபிலிட்டி பெரிய அளவில் இல்லை. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அடாஸ் தொழில்நுட்பம் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களால் இந்த கார் சிறப்பாக இருக்கிறது.

இந்த காரின் ரைடிங் குவாலிட்டியும் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக முன் பக்க சீட்டுகள் வெண்டிலேட்டர் சீட்டுகளாகவும் டிரைவர் சீட் சொகுசான வசதியுடனும் வழங்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது படி அதிக உயரமானவர்கள் பின்பக்க சீட்டில் அமர்வது சற்று சிரமமாக இருக்கலாம். சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் தரும் வாகனத்தை விரும்புவோருக்கு இந்த கார் நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இறுதி தீர்ப்பு: டாடா கர்வ் கார் எஸ்யூவி மார்க்கெட்டிற்கு புதிய காராக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் கூபே போன்ற வடிவமைப்பு வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. மேலும் இந்த காரில் உள்ள பிளாஷ் டோர் ஹேண்டில் சிக்கன் எல்இடி லைட், லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் உள்ளீட்ட அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. டிசைன் சொகுசு மற்றும் புதுமைக்காக இந்த காரை நிச்சயம் வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2024, 12:00 [IST]
English summary
Tata curvv ice review design engine performance
மேலும்... #tata motors #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X