இன்டிகா விஸ்டாவு டி90 காருக்கு என்ன குறைச்சல்? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

மைலேஜை மட்டுமே பார்த்து ஹேட்ச்பேக் கார்களை வாங்கி வந்த நிலையில், தற்போது பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களின் மீதான ஈர்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், முன்னணி நிறுவனங்கள் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களை களமிறக்கி வருகின்றன. அந்த வரிசையில், சமீபத்தில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள மாடல்தான் இன்டிகா விஸ்டா டி90. ஹூண்டாய் ஐ20, ஃபியட் புன்ட்டோ கார்களுக்கு அடுத்து வந்திருக்கும் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்.(சமீபத்தில் பவர்ஃபுல் போலோ விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், அது பெட்ரோல் மாடல்)

சாதாரண விஸ்டா காரை விட கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் டியூனிங் செய்யப்பட்ட எஞ்சினுடன் வந்திருக்கும் டி90 காரின் இசட்எக்ஸ்+ டாப் வேரியண்ட் காரை சாலை பரிசோதனை செய்து பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கு டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் வழங்கியது. நகர்ப்புறம், நெடுஞ்சாலை என அனைத்து சாலை நிலைகளிலும் வைத்து விஸ்டா டி90 காரை சோதனை செய்தோம். இந்த அனுபவத்தின் வாயிலாக டி90 பற்றிய சாதக, பாதக அம்சங்களையும் இந்த டெஸ்ட் ரிப்போர்ட் பகுதியில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

தோற்றம்

தோற்றம்

ஏரோடைனமிக்ஸ் மற்றும் கூடுதல் கவர்ச்சியை தருவதற்காக விஸ்டா டி90யில் ரியர் ஸ்பாய்லர், முன்பக்கம் கூடுதல் பம்பர் ஆகியவை விஸ்டாவுக்கு கூடுதல் கவர்ச்சியை அளிக்கிறது.14 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனால் கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது என்று கூற முடியவில்லை. இளைய சமுதாயத்தை கவரும் விதமாக இந்த மாற்றங்களை கூறலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

சாதாரண விஸ்டாவில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபியட்டின் 74 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் இருக்கிறது. ஆனால், வேரியபிள் ஜியாமெட்ரிக் டர்போசார்ஜர் மூலம் டி90 காரின் பவர் 89 பிஎச்பி., ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் திறனை பெற்றிருக்கிறது.

டர்போலேக்

டர்போலேக்

2,000 ஆர்பிஎம் தாண்டும் வரை டர்போலேக் அதிகம் இருக்கிறது. 2,000 ஆர்பிஎம் வேகத்தை முள் தொடும்போது எஞ்சினிலிருந்து சக்தி பீறிட்டு எழுந்து புது உத்வேகத்துடன் பறக்கிறது.

 லாங் டிராவல் கிளட்ச்

லாங் டிராவல் கிளட்ச்

கிளட்சை விடும்போது லாங் டிராவல் எடுத்து கார் நகர்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

சாதாரண விஸ்டாவிற்கும், இதற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக டேஷ்போர்டை கூறலாம். மான்ஸா கிளப் கிளாஸ் செடான் காரின் டேஷ்போர்டை அப்படியே டி90யில் பொருத்திவிட்டது டாடா மோட்டார்ஸ். இரட்டை வண்ண டேஷ்போர்டு, பீஜ் நிற இருக்கைகள் ஆகியவை பிரிமியமாக காட்சியளிக்கிறது. ஆனால், பிளாஸ்டிக் தரம் சொல்வதற்கில்லை.

டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம்

டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம்

மல்டிமீடியா, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவற்றின் வசதிகளை ஒருங்கிணைந்து தரும் 6.7 இஞ்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆக்ஸ், யுஎஸ்பி மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கிளைமேட் கன்ட்ரோல் ஏசி

கிளைமேட் கன்ட்ரோல் ஏசி

வெளியில் இருக்கும் தட்ப வெப்பத்திற்கு தக்கவாறு கேபினுக்குள் குளிர்ச்சியை வழங்கும் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி இருக்கிறது.

ஸ்டீயரிங்

ஸ்டீயரிங்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் மொபைல்போன் அழைப்பை பெறுவதற்கும், துண்டிபதற்குமான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீலை நம் உயரத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

ஸ்பீடோமீட்டர் மற்றும் ஆர்பிஎம் மீட்டர்களில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் மிக சிறியதாக இருப்பதால், உற்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இடவசதி

இடவசதி

இண்டிகா வரிசை கார்கள் இடவசதிக்கு பெயர்போனவை. அந்த வகையில், விஸ்டா டி90யும் எந்த குறையும் வைக்கவில்லை. நிறைவான லெக்ரூம், ஹெட்ரூமை கொண்டிருக்கிறது. மேலும், பின் இருக்கையில் 3 பேர் சவுகரியமாக அமர்ந்து செல்வதற்கு இடம் கியாரண்டி.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்கள். ஏபிஎஸ் பிரேக்கின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது. 130 கிமீ வேகத்தில் செல்லும்போது கூட மிக குறைந்த தூரத்தில், பேலன்சாக காரை நிறுத்துகிறது.

டிரைவர் இருக்கை

டிரைவர் இருக்கை

6 வே அட்ஜெஸ்ட்டபிள் வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கையில் லம்பார் அட்ஜெஸ்ட்மென்ட் வசதியும் இருப்பதால் நமக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடிகிறது.

 ரியர் வியூ மிரர்

ரியர் வியூ மிரர்

ரியர் வியூ மிரர்களை டிரைவர் இருக்கையின் வலது பக்க கதவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஜாய் ஸ்டிக் போன்ற திருகு மூலம் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

இன்டிகேட்டர்

இன்டிகேட்டர்

ரியர் வியூ மிரர் மற்றும் பக்கவாட்டில் இன்டிகேட்டர்கள் பொருத்தப்படுவது வழமையாகி வரும் நிலையில், டி90யில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் இன்டிகேட்டர் யாருக்கும் தெரியாத வகையில் பாடியுடன் இருக்கிறது. இரவில் மட்டுமே ஓரளவு புண்ணியமளிக்கிறது.

கையாளுமை

கையாளுமை

சிறப்பான கையாளுமை கொண்ட காராக இருந்தாலும், இதன் ஸ்டீயரிங் செயல்பாடு மிகுந்த அதிருப்தி தருகிறது. மேலும், மரக்கட்டையில் செய்தது போன்ற உணர்வை கைகளுக்கு தருகிறது. இதன் கியர் பாக்ஸ் செயல்பாடும் அப்படித்தான்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

டர்போலேக் இருந்தாலும், 2,000 ஆர்பிஎம்மை தாண்டவிட்டால் சிலிர்த்தெழுந்து சிட்டாய் வேகமெடுக்கிறது இதன் எஞ்சின். வளைவுகளில் திரும்பும்போதும் வேகத்தை அதிகம் குறைக்காமல் அச்சமின்றி திருப்ப முடிகிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பவர்ஃபுல் காராக மாறியதால் இதன் சஸ்பென்ஷனை மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். பள்ளம், மேடு பற்றி கவலை கொள்ள தேவையில்லை. இதன் சஸ்பென்ஷன் எஸ்யூவியில் அமர்ந்து செல்வது போன்ற உணர்வை தருகிறது. ஆனால், சொகுசான பயணத்தை எதிர்பார்க்க முடியாது.

மகாமட்டம்

மகாமட்டம்

விஸ்டா டி90யின் மிகப்பெரிய குறையே மகா மோசமான பிட் அன்ட் பினிஷிங்தான். மேலும், முன்னர் கூறினோமே ரியர் ஸ்பாய்லர் மற்றும் பம்பர்கள் ஆகிய எல்லாமே ஆஃப்டர் மார்க்கெட் ஐயிட்டங்கள்தான். பார்த்தவுடனே பல் இளிக்கிறது. டீலரிலிருந்து கொடுக்கப்படுகிறதாம். காரின் கம்பெனி பெயின்ட்டிங்கிற்கும், இந்த ஆக்சஸெரீஸ்களுக்கும் பொருந்தவில்லை. ஒயரிங் பல இடங்களில் வெளியில் தெரியும் வகையில் இன்சுலேட்டர் இல்லாமலே இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

டெஸ்ட் டிரைவின்போது நகர்ப்புற சாலை மற்றும் நெடுஞ்சாலையில் சராசரியாக லிட்டருக்கு 14.4 கிமீ மைலேஜ் கொடுத்தது.

ஏர்பேக் லாக்

ஏர்பேக் லாக்

ஒருவேளை குழந்தைகள் முன்புறத்தில் அமர்ந்தால் ஏர்பேக் விரிவடையாமல் இருப்பதற்காக, ஏர்பேக் லாக் கொடுக்கப்பட்டுள்ளது.

பூட் ரூம்

பூட் ரூம்

வெளியூர் பயணங்களை சமாளிக்கும் வகையிலான பூட் ரூம் இருக்கிறது.

மடக்கி விரிக்கும் இருக்கை

மடக்கி விரிக்கும் இருக்கை

பொருட்களை வைப்பதற்கு இடவசதியை அதிகரித்துக் கொள்வதற்காக பின்புற இருக்கைகளை மடக்கி வைத்துக் கொள்ள முடியும்.

விலை டூ மச்...

விலை டூ மச்...

இதன் இசட்எக்ஸ்+ டாப் வேரியண்ட் விலை ரூ.8 லட்சத்தை நெருங்குகிறது. ஆனால், போட்டியாளர்களுடன் தரம் உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிடும்போது விலை 'டூ மச்' என்று சொல்லத் தோன்றுகிறது. கூடுதல் ஆக்சஸெரீஸ்களையும், பவர்ஃபுல் எஞ்சினும் போதுமா என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது.

டிரைவ் ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ் ஸ்பார்க் தீர்ப்பு

5 பேர் பயணிக்க ஒரு சிறந்த ஹேட்ச்பேக் காராக விஸ்டா டி90 காரை கூறலாம். இடவசதி, மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் ஓகேதான். ஆனால், தர விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. தர விஷயத்திலும், விலையிலும் டாடா கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்த காருக்கு நிச்சயம் வரவேற்பு கிடைத்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2013, 13:11 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+