டாடாவோட இந்த எலெக்ட்ரிக் காரை வேண்டாம்னு சொல்ல மனசே வராது... சும்மா சொல்லலைங்க ஓட்டி பார்த்தத வச்சு சொல்றோம்!

டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றே நெக்ஸான்.இவி. தேனைக் கண்ட தேனீயைபோல ஏற்கனவே இந்த காரை இந்தியர்கள் சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே இதன் பக்கம் கூடுதலாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, இந்த கார் மாடலின் அப்டேட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டாடா களமிறங்கி இருக்கின்றது.

இதன் வெளியீட்டு நிகழ்வு ஏற்கனவே இந்தியாவில் அரங்கேறிவிட்டது. இப்போது இதன் விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வருவது மட்டுமே பேலன்ஸாக உள்ளது. இந்த நிகழ்வும் கூடிய விரைவில் அரங்கேற இருக்கின்றது. வருகின்ற செப்டம்பர் 14 ஆம் தேதி அன்றே அந்த சம்பவம் அரங்கேற இருக்கின்றது. இதனை டாடா மோட்டார்ஸும் உறுதி செய்துவிட்டது.

Tata nexon ev review

இந்த நிலையிலேயே பன்முக சிறப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கும் நெக்ஸான்.இவி-யை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அதாவது, ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தையே ரைடு ரிவியூ தகவலாக இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் புதிய நெக்ஸான்.இவி-யை டாடா மோட்டார்ஸ் எந்த அளவிற்கு மெருகேற்றி இருக்கின்றது என்பதனைக் காணலாம்.

புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான்.இவி-யின் வடிவமைப்பு மற்றம் சிறப்பம்சங்கள் எப்படி இருக்கின்றன?: நீங்கள் பெரிய டாடா கார் பிரியராகவோஅல்லது வாகன காதலராகவோ இருந்தால், டாடாவின் கர்வ் கான்செப்ட் கார் மாடல் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த கார் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் காட்சிப்படுத்தியது.

Tata nexon ev front design

மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடலே இதுவாகும். இதன் டிசைன் தாத்பரியங்கள் பலவற்றை பயன்படுத்தியே புதிய நெக்ஸான்.இவி-யை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான்.இவி-க்கும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான்.இவி-க்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசத்தை நம்மால் காண முடிகின்றது.

வெளிப்புற தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. கிரில், பான்னெட், ஹெட்லேம்ப் என அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கின்றது. மெல்லிய ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்பே தற்போது பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவை நெக்ஸான்.இவி-க்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதைவிட மிக முக்கியமாக காரின் முன்பக்கத்தின் இரு முனைகளையும் இணைக்கின்ற வகையில் ஓர் மெல்லிய இழை போன்ற எல்இடி லைட் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Tata nexon ev headlamp

இந்த எல்இடி லைட் இன்டிகேட்டராகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க. இந்த லைட் சார்ஜேற்றம் செய்யும்போது அதன் அளவை குறிக்கும் விதமாக ஒளிரும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாகவே முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கும் பகல்நேரத்தில் ஒளிரக் கூடிய அந்த எல்இடி லைட் இருக்கின்றது.

இத்துடன், பக்கவாட்டு மற்றும் பின் பக்கத்தில் ஆங்காங்கே .இவி எனும் பேட்ஜ் நீல நிறத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே, ஐசிஇ (எரிபொருள் எஞ்ஜின் கொண்ட) நெக்ஸானுக்கும், மின்சார வெர்ஷன் நெக்ஸானுக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஆகும். இதுதவிர, பம்பர் மற்றும் கிரில்லும் மாறுபட்டவையாகக் காட்சியளிக்கின்றன.

Tata nexon ev side view

இத்துடன், வித்தியாசமான தோற்றம் கொண்ட ஃபாக்ஸ் பாஷ் பிளேட்டுகள் இந்த காரின் பின் பக்கத்தில் பயன்படத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாற்றங்களை செய்ய டாடா தவறி இருந்திருந்தால், ஐசிஇ-மின்சாரம் இரண்டிற்கும் இடையில் வித்தியாசம் என்பதே இல்லாமல் போயிருக்கும். டாடா மோட்டார்ஸ் நெக்ஸான்.இவி-யை போலவே நெக்ஸானின் எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வெர்ஷனை அப்கிரேட் செய்திருக்கின்றது.

அதுவும் புதிய அவதாரத்தில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலிலும் கான்னெக்டட் வகை லைட், ஸ்பாய்ளர் பொருத்தப்பட்ட ரூஃப், இன்செர்ட்டுகள் கொண்ட வீல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஸ்மார்ட் வகை எல்இடி லைட் 'வெல்கம்' மற்றும் 'குட் பை' சொல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata nexon ev tracking shot

இதுதவிர, கண்களுக்கு புலப்படாத வகையில் ரியர் வைப்பர்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஸ்டாப் லைட்டு 'எக்ஸ்' வடிவத்தில் இருப்பது காரின் பின்பக்கத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கும் வகையில் இருக்கின்றது. இதுபோன்று இன்னும் சில மாற்றங்களை இரு எரிபொருள்-மின்சார வெர்ஷன்களுக்கு இடையில் டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது.

தற்போது புதுப்பிக்கப்பட்டு இருக்கும் நெக்ஸான்.இவி-யின் உட்புறத்தில் பன்முக புதிய தொழில்நுட்பங்களை டாடா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. புதிதாக வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, இரட்டை திரை (இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஆக இவை செயல்படும்) உள்ளிட்ட அம்சங்களும்கூட இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Tata nexon ev dashboard

இதன் இன்ஃபோடெயின்மென்ட் திரை 12.3 அங்குலம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐசிஇ வெர்ஷன் நெக்ஸானில் 10.25 அங்குலத்திலேயே இது காணப்படும். இத்துடன் தனித்துவமான தோற்றம் கொண்ட டிஜிட்டல் ஸ்டியரிங் வீலும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் திரை ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி கொண்டது.

இத்துடன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்மார்ட் டிரான்ஸ்மிஷன் லிவர், சி டைப் சார்ஜிங் போர்ட், வென்டிலேஷன் வசதி கொண்ட லெதர் இருக்கைகள், கோப்பைகளை தாங்கும் வசதிக் கொண்ட ஆர்ம் ரெஸ்ட், வாய்ஸ் அசிஸ்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் கூல்டு குளோவ் பாக்ஸ், டச் வகை எச்விஏசி கன்ட்ரோல்கள் மற்றும் ஜேபிஎஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் புதிய நெக்ஸான்.இவி-யில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Tata nexon ev climate control

கவர்ச்சியான தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் போலவே இந்த கார் பாதுகாப்பு அம்சத்திலும் ஜொலிக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஹில் அசென்ட் மற்றும் டெசன்ட் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர் பாயிண்ட், பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி மற்றும் பிரேக்டவுன் நேரத்தில் அழைப்பை மேற்கொள்ளும் வசதி, ஆட்டோ ஹெட்லேம்ப், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள் போன்ற அம்சங்களையும் இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது.

Tata nexon ev captain seat

புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸானின் விவரக் குறிப்புகள் மற்றும் பரிமாணங்கள் பற்றிய விபரம்: இப்போது விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான்.இவி இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் ஆகியவையே ஆகும். ஆனால், புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் மிட் ரேஞ்ஜ் மற்றும் லாங் ரேஞ்ஜ் என்கிற இரு தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது.

இதில், லாங் ரேஞ்ஜ் தேர்வு ஓர் முழு சார்ஜில் 465 கிமீ ரேஞ்ஜையும், மிட் ரேஞ்ஜ் தேர்வு 325 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியைக் காட்டிலும் 12 கிமீ முதல் 13 கிமீ வரை அதிக ரேஞ்ஜ் திறன் என்பது கவனிக்கத்தகுந்தது.

Tata nexon ev badge

இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வில் 40.5 kWh பேட்டரி பேக்கும், மிட் ரேஞ்ஜ் தேர்வில் 30 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மோட்டார் திறன் வெளிப்பாட்டு விஷயத்திலும் இந்த தேர்வுகளுக்கு இடையே வித்தியாசம் தென்படுகின்றது. லாங் ரேஞ்ஜ் தேர்வில் பொருத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் 106.4 kW பவர் மற்றும் 215 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இதன் மிட் ரேஞ்ஜ் தேர்வில் பொருத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் 95 kW மற்றும் 215 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். திறன் வெளிப்பாட்டில் மட்டுமில்லைங்க பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் விஷயத்திலும் இரண்டிற்கும் இடையில் லேசான வித்தியாசம் உள்ளது.

Tata nexon ev auto hold

லாங் ரேஞ்ஜ் தேர்வு வெறும் 8.9 செகண்டுகளிலேயே இந்த திறனை எட்ட எடுத்துக் கொள்ளும். ஆனால், மிட் ரேஞ்ஜோ இதற்கு 9.2 செகண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த கார்களில்ஜென் 2 வகை மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும்.

இந்த இரு வேரியண்டுகளிலும் 7.2kW சார்ஜர் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதைக் கொண்டு வீட்டிலேயே வைத்து எலெக்ட்ரிக் கார்களைச் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தி மிட் ரேஞ்ஜ் தேர்வை சார்ஜ் செய்யும்போது 10 சதவீத்தில் இருந்து 100 சதவீதத்தை அடைய அதற்கு 6 மணி நேரங்களும், லாங் ரேஞ்ஜ் தேர்வு 4.3 மணி நேரங்களையும் எடுத்துக் கொள்ளும்.

இதுவே போர்டபிள் சார்ஜிங்கை பயன்படுத்தினால் 10.5 மணி நேரம், 15 மணி நேரம் என அதிக நேரங்களை இந்த தேர்வுகள் எடுத்துக் கொள்ளும். அதேவேளையில், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை பயன்படுத்தினால் வெறும் 56 நிமிடங்களிலேயே 10-80 சதவீத சார்ஜை இந்த காரில் ஏற்றிவிட முடியும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், கார்-டூ-கார் சார்ஜை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பிற எலெக்ட்ரிக் காருக்கு தேவையான மின்சாரத்தை வழங்குதல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கின்றது. இதன் திறனைப் பயன்படுத்தி தற்காலிக கூடாரங்களுக்கு தேவையான மின்சாரத்தைக்கூட புதிய நெக்ஸானிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய டாடா நெக்ஸான்.இவி ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? முக்கியமான பாயிண்டிற்குள்ளேயே இப்போதான் நுழைகின்றோம். நாங்கள் நிறைய எலெக்ட்ரிக் கார்களை ரைடு ரிவியூ செய்து பார்த்திருக்கின்றோம். அந்தவகையில், நாங்கள் ஓட்டி பார்த்ததில் மிக சிறந்த ஓர் எலெக்ட்ரிக் காராக இது இருக்கின்றது.

இந்த காரில் இருக்கும்போது உங்களுக்கு வெறுப்பாக இருக்கும் எனில் முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் திரை வாயிலாக வீடியோ கேமை விளையாடிக் கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக தொழில்நுட்பத்தை அந்த திரையில் டாடா வழங்கி இருக்கின்றது. நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்கும் நேரங்களில் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Tata nexon ev transmission

இதுமட்டுமே இந்த காரின் சிறப்பு கிடையாதுங்க. இதன் செயல்பாட்டு திறனும் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. நிறுவனம் இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வு வெறும் 8.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என கூறி இருக்கின்றது. இந்த வாக்குறுதியை சற்றும் மாறாமல் அப்படியே புதிய நெக்ஸான்.இவி வெளிக்காட்டுகின்றது.

சாலையில் வைத்து நாங்கள் சோதித்தபோது துள்ளலான இந்த வேகத்தில் அந்த கார் சீறிப் பாய்ந்தது. இந்த திறனும் மேலே இந்த காரில் கொடுக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் கூறிய சிறப்பம்சங்களும் புதிய நெக்ஸான்.இவி தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யை காட்டிலும் பலமடங்கு மேம்பட்டு உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

Tata nexon ev wheel

இயக்கத்திலும் சரி, அழகிலும் சரி எல்லாவற்றிலும் இந்த கார் மிக சிறப்பாக மேம்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் செட்-அப் லேசாக கடினமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஐசிஇ வெர்ஷனைக் காட்டிலும் இது சற்றுக் கடினமானதாக உள்ளது. ஆனால், இதை நீங்கள் உற்று கவனித்தால் மட்டுமே உணர முடியும்.

பள்ளம், மேடுகள் நிறைந்த சாலைகளில்கூட இதை உங்களால் உணர முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், எங்களால் இந்த எலெக்ட்ரிக் காரின் முழு ரேஞ்ஜ் திறனையும் சோதித்து பார்க்க முடியவில்லை. குறைவான நேரம் மட்டுமே எங்களுக்கு இருந்ததால் சில முக்கிய அம்சங்களை மட்டுமே டெஸ்ட் செய்து பார்க்க முடிந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்தவகையில், எங்களுக்கு கிடைத்த நேரத்தில் நாங்கள் சோதித்து பார்ததது வரை ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் காரில் 350 கிலோ மீட்டர் தூரம் வரை மிக தாராளமாக பயணிக்க முடியும் என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். சில மின் சிக்கன யுக்தியை கையாண்டால் இதைவிட அதிக ரேஞ்ஜை லாங் ரேஞ்ஜ் தேர்வில் பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 12, 2023, 18:49 [IST]
English summary
Tata nexon ev facelift review in tamil design features specs and dimensions details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X