டாடாவின் புது எலக்ட்ரிக் கார் பஞ்ச் இவி ஓட்டுவதற்கு சூப்பரா இருக்கு!! இவ்வளவு தொகை கொடுத்து வாங்கலாமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் இந்த நிறுவனம் தனது நெக்ஸான் இவி காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்நிலையில், அந்நிறுவனம் சிறிய ரக எஸ்யூவி காரை எலக்ட்ரிக் வெர்ஷனில் வெளியிட முடிவு செய்து தனது பஞ்ச் இவி காரை தயார் செய்தது.
டாடா பஞ்சு கார் அறிமுகமாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பஞ்சு இவி கார் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த எலக்ட்ரிக் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு பெங்களூருவில் இந்த எலக்ட்ரிக் காரை ஓட்டிப் பார்த்தோம். எங்களது விமர்சனங்களை இங்கே வழங்கி உள்ளோம்.

முதலில் இந்த காரை பார்க்கும் போது நமக்கு இது பெட்ரோல் இன்ஜின் காரின் எலக்ட்ரிக் வெர்ஷன் என்பது தெளிவாக தெரிகிறது அதன் டிசைன் மொழி அப்படியே பெட்ரோல் இன்ஜின் காரை போலவே இருக்கிறது. முன்பக்க பம்பரில் உள்ள சிறிய இடைவெளி மற்றும் முன்பக்கத்தில் உள்ள ஏர் இன்டேக் பகுதி உள்ளிட்டவை மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனம் இந்த காரில் வித்தியாசமாக முன்பக்கத்தில் சார்ஜிங் பாய்ண்டுகளை வைத்துள்ளது.
டாடா பஞ்ச் இவி காரில் முன்பக்கத்தில் எல்.இ.டி டி.ஆர்.எல் முழு அகல காருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் பகுதியில் இந்த காரின் ஃபாக் லைட், ஹெட் லைட் மற்றும் டர்னிங் இண்டிகேட்டர்ஸ் உள்ளிட்ட லைட்டுகள் எல்லாம் ஒரே செட் ஆக அமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் மற்றொரு முக்கிய மாற்றமாக கதவுகளில் ஈபி பின் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தில் இரண்டு 10.25 இன்ச் கொண்ட டிஸ்பிலேயர்கள் வழங்கப்பட்டுள்ளன அதில் ஒன்று இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டராகவும் மற்றொன்று இன்ஃபோடைமென்ட் சிஸ்டமாகவும் செயல்படுகிறது மேலும் இந்த காரில் இரண்டு ஸ்போக்குக் கொண்ட ஸ்டேரிங் வில் வழங்கப்பட்டுள்ளது. முன்ன சொன்ன இரண்டு டிஸ்ப்ளேவில் இன்ஃபோடைமென்ட் டிஸ்ப்ளே டச் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே ஆக வழங்கப்பட்டுள்ளது. இது கனெக்டிவிட்டி அம்சங்கள் மற்றும் போன் மிரரிங் ஆப்ஷன் உடன் இருக்கிறது.
இந்த காரின் உட்புறம் டூயட் ஒன் லுக்கில் இருக்கிறது. வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கொண்ட இன்டீரியர் உள்ள காரை நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். இது சற்று பிரிமியமான லுக்கை தருகிறது. நல்ல ஹார்டான பிளாஸ்டிக்கை கொண்டு உட்புற கட்டமைப்பை வடிவமைத்துள்ளார்கள். ஸ்டீரிங் வீல் டில்ட் அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே கொண்டதாக இருக்கிறது.

இந்த காரில் இரண்டு ஏசி சுவிட்சுகள் மற்றும் சில கண்ட்ரோல்களும் உள்ளன சார்ஜிங் போர்டுக்காக யு.எஸ்.பி ஏ மற்றும் சி சார்ஜ் போட்டு ஆப்ஷன்கள் உள்ளன. இது 12 வோல்ட் சார்ஜிங் போர்ட்டு ஆக செயல்படுகிறது. இந்த காரில் முன்பக்கம் சொகுசு வசதியுடன் கூடிய வென்டிலேஷன் ஆப்ஷன் உடன் கூடிய இருக்கைகள் உள்ளன. கோடை காலத்தில் இது நல்ல பலனை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே, டிரைவ் மோடு பட்டன்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், கப் ஹோல்டர் ஆகியன முன் பகுதியில் உள்ளன.
பஞ்சு இவி காரின் பின்பக்கத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. பெஞ்ச் சீட்டுகள் இரண்டு ஹெட் ரெஸ்ட் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆறு அடிக்கு மேல் உயரமாக இருக்கும் பயணிகள் பின்பக்க இருக்கைகளில் அமர்ந்தால் அவர்களுக்கு நிச்சயம் பெட்ரூம் வசதி கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும். அத்துடன், வசதிகளும் அவர்களுக்கு சிக்கலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதுவே, சராசரியாக ஆறடிக்கு கீழே இருக்கும் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

டாடா பஞ்ச் இவி காரில் உட்புறத்தில் பூட் வசதி அதிகமாக இருக்கிறது 366 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் வசதி இருக்கிறது. 14 லிட்டர் ஃப்ரங் வசதியும் இருக்கிறது. இந்த கார் முழுமையாக டாடாவின் மாஸ் ஏற்படுத்தாத கார்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3857 மிமீ நீளமும், 1742 மிமீ அகலமும், 1633 மிமீ உயரமும், 245 மிமீ நீளத்தில் வீல் பேசும் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. இது பஞ்ச் பெட்ரோல் காரை விட 30 மிமீ நீளமும், 18 மிமீ உயரமும் அதிகமாக உள்ளது. இந்த கார் தயாரிக்கப்பட்ட ஆக்டி.இவி பிளாட்பார்மை பொறுத்தவரை லிக்யூட்-கூல்டு பேட்டரி பேக் ஆப்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 25 கிலோ வாட் அவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த எலக்ட்ரிக் கார் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 315 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் லாங்க் ரேஞ்ஜ் வேரியண்டை பொறுத்த வரை, 35 கிலோ வாட் அவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 421 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த காரின் மோட்டாரை பொருத்தவரையில் 120.7 பிஎச்பி பவரையும் 190 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜீரோ முதல் 100 கிலோமீட்டர்/ஹவர் வேகத்தை வெறும் ஒன்பது புள்ளி ஐந்து நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டதாக பஞ்ச் இவி இருக்கிறது.

லாங் ரேஞ்ச் மற்றும் மீடியம் ரேஞ்ச் ஆகிய இரண்டு வெர்சன் கார்களுக்கும் 3.3 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது மீடியம் ரேஞ்ச் விஷன் காரின் பேட்டரியை ஒன்பது புள்ளி நான்கு மணி நேரத்தில் சார்ஜ் செய்கிறது. இதுவே லாங் ரேஞ்ச் வெர்சனில் 13.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடலாம். இதுபோக, 7.2 கிலோ வாட் பாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது மீடியம் ரேஞ்ச் பேட்டரியை மூன்று புள்ளி ஆறு மணி நேரத்திலும், லாங் ரேஞ்ச் பேட்டரியை ஐந்து மணி நேரத்திலும் சார்ஜ் செய்கிறது.
மீடியம் & லாங் என இரண்டு வெர்சனுக்கும் டிசி பாஸ்ட் சார்ஜிங் சார்ஜரை சப்போர்ட் செய்யும் திறன் இருக்கிறது இதன் மூலம் இந்த காரை சார்ஜ் செய்தால் பத்து முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 56 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடலாம். நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர் பேக்குகள் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, பிளைன்ட் வியூ மானிட்டர் ஆகிய வசதிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவிங் இம்ப்ரசன்: இந்த காரை ஓட்டி பார்க்கும்போது முதலில் அமைதியாக தான் இருக்கிறது. ஆனால் ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாற்றி விட்டால் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் ஆகிய இரண்டிற்கும் இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த காரை ஸ்டார்ட் செய்யும் போது அது ஆட்டோமேட்டிக்காக சிட்டி மோடில் தான் செட் ஆகிறது.

ஈக்கோ மோடில் நீங்கள் ஆக்சிலேட்டரை அழுத்தினால் அதன் ரெஸ்பான்ஸ் மிக மெதுவாக தான் கிடைக்கிறது. சிட்டி மோட் கொஞ்சம் லீனியராக இருக்கிறது ஸ்போர்ட்ஸ் மோட் மிகச் சிறப்பாக இருக்கிறது. ரெஸ்பான்ஸ் நன்றாக வருகிறது. இது எலக்ட்ரிக் காரா அல்லது பெட்ரோலியம் காரா என்று என உங்களை யோசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
இதன் சஸ்பென்ஷன் செட்டப் கொஞ்சம் ஸ்டிப் ஆக இருக்கிறது. டிரைவிங்கின் போது ஹேண்டிலிங் பேலன்ஸ் சிறப்பாக இருக்கிறது. சாலையில் வரும் சிறு சிறு பள்ளமேடுகளை எல்லாம் அசால்ட்டாக கடந்து செல்கிறது அதிக வேகத்தில் செல்லும்போதும் ஸ்டேபிளாக இருக்கிறது. இந்த காரின் ஸ்டேரிங் வீல் சற்று ஹெவியாக இருக்கிறது. எந்த மோடில் பயணம் செய்தாலும் இதே பீல் தான் வருகிறது. இது ஷார்ப்-ஆகவும், துல்லியமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வளைவுகளில் நீங்கள் திரும்பும்போது உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.

பிரேக்கிங்கை பொறுத்தவரை, சொகுசான பிரேக்கிங் இருக்கிறது இந்த காரில் மொத்தம் நான்கு லெவல் ரீஜென்ட் மோடுகள் உள்ளன. இதன் லெவல்களை நீங்கள் ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்னால் உள்ள பெடல் ஷிப்டர்கள் மூலம் தேர்வு செய்ய முடியும். இருப்பதிலேயே அதிகமான லெவலில் நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் காரை மெதுவாக்கியவுடன் பேட்டரி சார்ஜ் அதிகமாக ஏற துவங்கிவிடும்.
இந்த காரை சோதனை செய்யும் போது எங்களால் அதன் ரேஞ்ச் குறித்த சோதனையை செய்ய முடியவில்லை. அதற்கான போதிய நேரம் எங்களிடம் இல்லை. நாங்கள் லாங் ரேஞ்ச் காரை தான் சோதனை செய்தோம். நாங்கள் ஓட்டி பார்த்தவரை, இந்த கார் முழு சார்ஜில் 300 கிலோ மீட்டர் வரை தாராளமாக பயணிக்கும் என சொல்லலாம். இது, டாடா நிறுவனத்தின் மற்ற எலக்ட்ரிக் கார்களின் பெர்பார்மன்ஸ் பொறுத்து நாங்கள் செய்த மன கணக்கீடு தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் இவி கார் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது டாடா நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது டாடா நிறுவனம் மிக வேகமாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் வளர்ந்து கொண்டே இருக்கிறது இந்த காரை பொறுத்தவரை ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பசுமையான எதிர்காலத்திற்காக டாடா நிறுவனம் இந்த காரை தயாரித்துள்ளது. உயரமாக இருக்கும் மனிதர்கள் இந்த காரை தவிர்க்கலாம் மற்றவர்களுக்கு இது சிறந்த கார் ஆகும்.


Click it and Unblock the Notifications









