இது மறு வச்ச ஹாரியர் கார்ன்னு இனி யாராலயும் சொல்ல முடியாது! அப்படி மாத்தி வச்சிருக்காங்க!

கடந்த 2019 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் முறையாக தனது பஸார்டு கான்செப்ட் காரை ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது. இந்த கார் ஒரு 7 சீட்டர் கொண்ட ஹாரியர் எஸ்யூவி காராக இருக்கும் என மக்களால் பேசப்பட்டது. இந்த காரை டாடா நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா கிராவிட்டாஸ் காராக காட்சிப்படுத்தியிருந்தது.

அதிலிருந்து ஒரு வருடம் கழித்து 2021 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் இந்த காரை சஃபாரி காராக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இது அறிமுகமாகி சுமார் 2.5 ஆண்டுகள் ஓடி விட்டது சஃபாரி என்ற பெயருக்காகவே இந்த கார் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த காரை எப்படி ஹாரியர் காரை மேம்படுத்தியதோ அதேபோல சஃபாரி காரையும் அப்டேட் செய்து வெளியிட முடிவு செய்தது.

tata safari facelift review

அதன்படி டாடா நிறுவனம் இந்த சஃபாரி காரை அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய 2023 டாடா சஃபாரி கார் பெரிய குடும்பங்களுக்கான ஃப்ரண்ட்லியான காராக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் இந்த காரை புனேவில் உள்ள சில பகுதிகளில் ஒட்டிப் பார்த்தோம். எங்கள் அனுபவத்தை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாற்றங்கள்: டாடா நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஹாரியர் காரை அப்டேட் செய்தது போல டாடா நிறுவனம் தனது சஃபாரி காரையும் அப்டேட் செய்துள்ளது. இதை ஒரு மிட்-சைக்கிள் பேஸ்லிஃப்ட் காராக அந்நிறுவனம் வெளிப்புறத் தோற்றத்தை அப்டேட் செய்துள்ளது. எப்படி ஹாரியர் காரில் வெளிப்புறத் தோற்றம் அப்டேட் செய்யப்பட்டுள்ளதோ அதே போலவே சஃபாரி காரும் பார்க்க ஷார்ப்பாகவும் அதிக பயன்பாட்டு டிசைன்களுடன் கூடிய அம்சங்களுடனும் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

tata safari facelift review

இந்த காரில் புதிய பேரா மெட்ரிக் கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது அப்டேட் செய்யப்பட்ட ஹாரியர் காரை விட சிறப்பான லுக்கை சஃபாரி காருக்கு கொடுக்கிறது. இதில் மேல் பாகம் டாடா பேட்டரி உடன் கலர் இன்செர்ட்கள் கொண்டதாக இருக்கிறது .இதன் கீழ் பாகம் கருப்பு நிற இன்செர்ட்களுட் ரேடார் சென்சார் மற்றும் ஏர் இன் டேக் ஆகிய அம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சில்வர் பாஸ் பிளேட்டிற்கு மேலே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் முழு நீள எல்இடி டிஆர்எல் செட்டப் கிரில்லுக்கு மேல் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் பக்கவாட்டில் சிக்னஷியல் டர்ன் லைட் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்டுகள் பை எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்களாக வழங்கப்பட்டுள்ளன. ஃபாக் லேம்ப்கள் பம்பரின் வெளிப்பகுதியில் இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

tata safari facelift review

பக்கவாட்டுகளைப் பொருத்தவரை 2023 ஆம் ஆண்டு சஃபாரி அப்டேட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை . பிளார்டு வீல் ஆர்ச்சிகள் கருப்பு நிறத்தால் வழங்கப்பட்டுள்ளன. ஏ,பி மற்றும் சி பில்லர்கள் மற்றும் ரூப்கள் வீல் ஆர்ச்களில் கருப்பு நிற கிளாடிங் உடன் டூயல் டோன் ஸ்பைடர் அலாய் வீல்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது. இதன் வீல்கள் வேரியன்ட்டிற்க்கு தகுந்தார் போல் 17 முதல் 19 இன்ச் வரை வழங்கப்படுகிறது.

இந்தக் காரின் பின்பக்கம் ரூஃப்பில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பிரேக் லைட் பொருத்தப்பட்டுள்ளது. பின் பக்க லைட்டுகள் எல்லாம் எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளன. பின் பக்கமும் ஃபாக் லைட் மற்றும் ரிப்லெக்டர்கள் பின்பக்க பம்பரின் பக்க வாட்டு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

tata safari facelift review

இதுபோக பின்பக்கம் சில்வர் நிற பாஷ் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது, இதில் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பின்பக்க கதவு பவர் கதவாக வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான சென்சாரும் இதில் தான் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் ஷாப்பிங் சென்று விட்டு கை நிறைய பையுடன் வந்தாலும், இந்த காரின் பின்பக்க கதவை திறக்க பெரிதாக கஷ்டப்பட வேண்டியதில்லை.

உங்கள் கால்களை வைத்து இந்த சென்சார் அருகே கொண்டு சென்றால் போதும் கதவு தானாக திறந்து விடும் மேலும் பின்பக்க கதவில் சஃபாரி பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் டிரைவர் மற்றும் முன்பக்க பயணி ஆகியோருக்கான கதவில் இந்த சஃபாரி பேட்ஜ் காணப்படுகிறது.

tata safari facelift review

இந்தக் காரின் உட்பகுதியில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. பல தொழில்நுட்ப அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டேஷ் போர்டு மறு டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆம்பியன்ட் லைட்டிங் வசதி எல்லாம் இருக்கிறது. மேலும் இந்த காரின் உள்ளே பெரிய பேனரோமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள புதிய டேஷ்போர்ட்டில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்பளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் இருக்கிறது. மேலும் இதில் 360 டிகிரி கேமரா வியூவையும் பெற்றுக் கொள்ள முடியும் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் இரண்டாம் தலைமுறை ஐ ஆர்ஏ கனெக்டெட் கார் சூட் தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க முடியும்.

tata safari facelift review

காரின் டேஷ்போர்டில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே இருக்கிறது. இதில் நேவிகேஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது. டிரைவர் சாலையிலிருந்து தனது கண்ணை எடுக்காமலேயே அடுத்தடுத்த தகவல்களை பெற்றுக் கொள்ள வசதியான இடத்தில் இது பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக இந்த டிரைவர் டிஸ்ப்ளேயின் முன் பக்கம் டூயல் டோன் நான்கு ஸ்போர்க் கொண்ட ஸ்டேரிங் வில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் நடுவே டாடா இலுமினேட்டர் லோகோ உள்ளது.

இதுபோக கவனிக்கத்தக்க முக்கியமான விஷயமாக முன்பக்கம் உள்ள இரண்டு சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இரண்டு சீட்டுகளும் வெல்கம் மற்றும் மெமரி அம்சங்களுடன் இருக்கிறது. மேலும் முன் பக்க பயணி சீட்டை முன்பக்கமும் பின்பக்கமும் அட்ஜஸ்ட் செய்து அவரவருக்கு தேவையான வகையில் இடவசதியை பெற்றுக் கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் முதல் வரிசை சீட்டும் இரண்டாவது வரிசை சீட்டும் வெண்டிலேட்டட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோடை காலங்களில் அதிக வெப்பம் இருக்கும்போது இந்த சீட் பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி சன்ஷீல்டு போல செயல்படும் இதை நாம் மேனுவலாக போட்டுக் கொள்ள வேண்டும் இரண்டாவது வரிசை சீட்டில் நல்ல வசதியான ஹெட் ரெஸ்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மூன்றாவது வரிசை சீட்டுகள் எளிதாக அணுகும்படியாக இல்லை. ஆனால் இதுக்காக வழங்கப்பட்டுள்ள இடவசதி பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது. இந்த சீட்டுகள் ஓய்ஸ்டர் ஒயிட் லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சீட் நீட்டாக இருக்க வேண்டும் என விரும்புவோருக்கு இது ஒரு சிறப்பான சீட்டிங் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மாற்றமில்லாதது: 2023 டாடா சஃபாரி கார் சில விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. முக்கியமாக இதன் மெக்கானிக் பாகங்களில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை இதன் பானட்டிற்கு கீழே ஸ்டெல்லடிஸ் 2.0 லிட்டர் கரையோ டெக் டர்போ சார்ஜர் இன் லைன் 4 பாட் டீசல் இன்ஜினை காண முடிகிறது.

இந்த இன்ஜின் 168பிஎச்பி பவரை 3750 ஆர்பிஎம்மிலும் 350 என்எம் டார்க் திறனை 1750 முதல் 2500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து வாங்கி டாடா நிறுவனம் தனது கார்களில் பொருத்தி வருகிறது.

இந்த டீசல் இன்ஜின் காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காரை தான் நாங்கள் ஓட்டி பார்த்தோம். இது ஓட்டி பார்க்க சிறப்பாக இருக்கிறது இதில் எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த டிரைவிங் மோடுகளுக்கு ஏற்ப பவர் மற்றும் கியர் மற்றும் ஆகியவை மாறுபடுகிறது.

உங்களுக்கு அதிகபட்ச பெர்பார்மன்ஸ் வேண்டும் என்றால் ஸ்போர்ட்ஸ் மோடில் போட்டு ஓட்ட வேண்டும். எக்கோ மோட்டில் போட்டால் அதிக மைலேஜ் கிடைக்கும். குறிப்பாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸில் சீக்கிரமாக கியர் மாறுகிறது. இதனால் கார் ஒட்டுவது சுலபமாக இருக்கிறது. பெரிய காராக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் மேனுவலாக கியரை மாற்ற பெடல் ஷிப்டர்களும் இருக்கிறது. இதனால் இந்த காரில் கியர் மாற்றுவதும் சற்று சுலபம்தான். சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை இந்த காரில் சாஃப்ட்வேர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளமேடுகளில் இந்த கார் செல்லும்போது சற்று கிலைட் ஆகிறது. இந்த காரில் 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இதனால் நீங்கள் படுமோசமான சாலையில் சென்றாலும் பெரிதாக சிரமங்களை சந்திக்க வேண்டியது இருக்காது.

சாஃப்ட் ஆன சஸ்பென்ஷன் மற்றும் சொகுசான சீட்டுகள் இந்த காரில் பயணிப்பதை ஒரு சுகமான அனுபவமாக மாற்றி தருகிறது. இதனால் நீண்ட தூர பயணங்களை சுலபமாக செய்ய முடியும். உயரமாக இருப்பவர்கள் மூன்றாவது வரிசை சீட்டிற்கு செல்ல முடியாது. அதேநேரம் நீங்கள் அதிக லக்கேஜ் உடன் குறைவான எண்ணிக்கையில் கொண்ட நபர்களுடன் பயணித்தால் மூன்றாவது வரிசை சீட்டுகளை மடக்கி அதிக பொருட்களை சுமந்து செல்லும் பகுதியாக மாற்ற முடியும்.

இந்த காரில் டெரையின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் மைல்டர் ட்ரையலை பயன்படுத்த வேண்டும். ஹெவியான டெரைனிற்கு 4 வீல் டிரைவ் சிஸ்டம் தேவைப்படும். டாடா இந்த சிஸ்டத்தை தனது சஃபாரி காரில் விரைவில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

இறுதி தீர்ப்பு: 2021 ஆம் ஆண்டு சஃபாரி கார் முதல் முதலாக வரும்போது இது கிட்டத்தட்ட பார்க்க ஹாரியர் போலவே இருந்தது. பின்பக்கம் மற்றும் சற்று கூடுதலான அம்சங்கள் இருந்தது. தற்போது புதிய மாற்றத்திற்கு பிறகு புதிய சஃபாரி கார் ஹாரியர் காரை ஒப்பிடும்போது சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த காரின் உட்புறமும் சரி வெளிப்புறமும் சரி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த காரின் புதிதாக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் எல்லாம் இந்த காரை டாடா நிறுவனத்தின் பிளக்ஷிப் கார் என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது. உங்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட காராக இது இருக்கிறது. இந்த காரில் 4வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை என்பது சற்று வருத்தமான விஷயம் தான். டாடா இதை சீக்கிரம் கொண்டு வர வேண்டும்.

https://tamil.drivespark.com/four-wheelers/2023/tata-safari-facelift-car-video-review-in-tamil-039323.html?utm_campaign=writer-share&utm_source=balasubramanianth-promo&utm_medium=social

More from DriveSpark

Article Published On: Sunday, October 15, 2023, 16:00 [IST]
English summary
Tata safari facelift review updated design and all other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X