டேங்க் ஃபுல் பண்ணா 700கிமீ மேல பயணிக்கலாம்.. டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? ரைடு ரிவியூ!

இந்தியாவில் சிஎன்ஜி கார் (CNG Car)-களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த பிரிவை மையப்படுத்தி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளை அதிகளவில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றனர். அந்தவகையில் நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம் அதன் தரப்பில் பரந்த அளவில் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான சிஎன்ஜி கார் மாடல்களில் ஒன்றே டிகோர் ஐசிஎன்ஜி (Tata Tigor iCNG) ஆகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் டிகோர் ஐசிஎன்ஜி மாடலில் ஏஎம்டி (Tata Tigor iCNG AMT) கியர்பாக்ஸ் தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Tata tigor icng amt review

இந்த காரின் அறிமுகத்தினால் இந்தியாவிலேயே சிஎன்ஜி கார் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை விற்பனைக்குக் களமிறக்கிய முதல் நிறுவனம் எனும் புகழுக்குரிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் மாறியிருக்கின்றது. இத்தகைய புகழ்மிக்க கார் மாடலையே சமீபத்தில் ஓட்டி (ரிவியூ செய்து) பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த சுவாரஷ்ய அனுபவங்களையே இந்த பதிவின் வாயிலாக உங்களுக்காக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி-யின் டிசைன் எப்படி இருக்கு? டாடா மோட்டார்ஸ் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் இதில் வழங்கவில்லை. வழக்கமான ஐசிஎன்ஜி-யும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி-யும் வெளிப்புற தோற்றத்தில் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஏன் பேட்ஜ்கூட இதில் தனித்துவமாக வழங்கப்படவில்லை.

Tata tigor icng amt front bumper

லைட் செட்-அப் கூட அப்படியே இருக்கின்றன. ஹெட்லைட்டுடன் கூடிய எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் பனி மின் விளக்குகள்கூட எந்த மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி ஆப்ஷனின் முன் பக்கத்தை குரோம் மற்றும் பியானோ பிளாக் நிறத்தினால் டாடா அலங்கரித்திருக்கின்றது.

இது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. இதேபோல் பக்கவாட்டு பகுதியையும் அலங்கரிக்கும் விதமாக குரோம் பூச்சினாலான அணிகலன்களை டாடா வழங்கி இருக்கின்றது. கார் கதவு கை பிடிகள் மற்றும் ஜன்னல்களில் அந்த அணிகலன்களைக் காண முடிகின்றது. ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளில் 14 அங்குல டூயல் டோன் அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Tata tigor icng amt interior view

வழக்கமான ஐசிஎன்ஜி மாடலில் உள்ள அதே டிசைனிலேயே இது காட்சியளிக்கின்றது. காரின் பின் பக்கத்திலும் குரோம் அலங்காரங்களைக் காண முடிகின்றது. இத்துடன் கிளியர் லென்ஸ் கொண்ட டெயில் லைட் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஹாலோஜன் மற்றும் எல்இடி இரண்டு லைட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், காரின் பின் பக்கத்திற்கு மிகப் பெரிய ஹை-லைட்டாக பெரிய எல்இடி ஸ்டாப் லைட் மற்றும் ஸ்பாய்லர் இருக்கின்றன. இத்துடன், பின் பக்கத்தில் ரூஃபில் சுறாவின் துடுப்பைப் போன்ற அமைப்புடைய ஆன்டென்னா ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், டிகோர் மற்றும் ஐசிஎன்ஜி சின்னங்களும் காரின் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

Tata tigor icng amt rear seat

ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் இருக்கின்றன. மேலும், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிராவும் காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பார்க்கிங் மற்றும் ரிவர்ஸிங்கின்போது மிகவும் உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டிகோர் சிஎன்ஜி ஏஎம்டியின் வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கமும் நம்மைக் கவரும் வகையிலேயே இருக்கின்றது.

அதேவேளையில் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய ரெண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. என்ன கியர் லிவர் மட்டும் ஏஎம்டி ஆப்ஷனில் இடம் பெறவில்லை. ஆனால், டேஷ்போர்டு, ஏசி வென்ட், வண்ண அலங்காரம் ஆகியவற்றில் இவை ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இத்துடன், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவையே காருக்குள் இடம் பெற்றிருக்கின்றன.

Tata tigor icng amt transmission

இதில் கூடுதலாக சிஎன்ஜி அளவைக் காட்டும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆப்ஷனுக்கான பட்டனும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. சிஎன்ஜியால் இயங்கக் கூடிய வாகனமாக டிகோர் ஐசிஎன்ஜி உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவசர தேவையின்போது பெட்ரோலிலும் ஓட்டிக் கொள்ளும் வசதி இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.

டூயல் (தனி தனியாக இரண்டு) சிலிண்டர்கள் சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ள வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சுமார் 70 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். இரண்டு சிலிண்டர் செட்-அப்பை அதிக லக்கேஜை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே டாடா இந்த காரில் வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடாவை தவிர வேறு எந்த பிராண்டும் இந்த வசதியை அதன் சிஎன்ஜி கார்களில் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

Tata tigor icng amt wheel

டாடா டிகோர் ஐசிஎன்ஜி மோட்டார் பற்றிய விபரம்: டாடா டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி ஆப்ஷனில் 1.2 லிட்டர் ரெவட்ரோன் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே மோட்டாரே மற்ற ஐசிஎன்ஜி தேர்விலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது சிஎன்ஜியில் இயங்கும்போது அதிகபட்சமாக 73.4 பிஎஸ் பவரை வெளியேற்றும்.

அதேவேளையில், இதே மோட்டார் பெட்ரோல் மோடில் 86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், டார்க் விஷயத்தில் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. 95 என்எம் டார்க்கையே அது வெளியேற்றும். இத்துடன், சிறப்பு வசதியாகவே 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Tata tigor icng amt rear brake light

டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி டிரைவிங் அனுபவம் எப்படி இருந்தது? முதலில் கியர்பாக்ஸ் பற்றி பார்க்கலாம். இது சற்று மெதுவாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அதேவேளையில், அதன் வேலையை அது நன்றாக செய்கின்றது. மேலும், நீங்கள் எதிர்பார்க்கும் சிறந்த மைலேஜ் திறனையும் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி கார் வழங்கும்.

அதுவும், குறைவான பட்ஜெட் விலையிலேயே இந்த காரை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். இந்தியாவின் பெரும்பாலான சாலை அதிக போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசில் மிக மிக அதிகம்.

Tata tigor icng amt rear view

இந்த மாதிரியான சாலைகளுக்கு ஏற்றதே இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகும். மேனுவல் கியர்பாக்ஸாக இருந்தால் எப்போதும் கியரிலேயே கைகளை வைத்திருக்க வேண்டும். அத்துடன், கால்களையும் கிளட்சில் வைத்துக் கொண்டு பிசியாகவே இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி தற்போது ஓய்வளிக்கும் அமைந்திருக்கின்றது.

ஆட்டோமேட்டிக் மோடில் அப்-ஷிஃப்டுகள் சற்று பொறுமையாக இருப்பதை உணர முடிந்தது. அதேவேளையில், மேனுவல் மோடுக்கு நீங்கள் மாறினால் ரெஸ்பான்ஸ் சற்றே அதிகரிக்கும். குறிப்பாக, டவுன்ஷிஃப்டில் இதை அதிகம் உங்களால் உணர முடியும். இத்துடன், சௌகரியமான பயணத்திற்காக பெட்ரோல் டிகோரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே சஸ்பென்ஷன் செட்-அப்பே இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Tata tigor icng amt cylinder

ஆனால், லேசான மாற்றங்கள் இதில் செய்யப்பட்டு இருக்கின்றன. சிஎன்ஜி டேங்குகளின் எடையைத் தாங்கிக் கொள்ளும் விதமாக அது மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரில் மூன்று இலக்க வேகத்தில் பயணிக்கும்போது நடப்பட்டதைப் போன்ற அழுத்தமான உணர்வே கிடைக்கின்றது. அதேவேலையில், அனைத்து மூலைகளிலும் இதை உணர முடியவில்லை.

சிறிய பாடி ரோல் உணர்வும் ஏற்பட்டது. இருப்பின் பட்ஜெட் விலையில் சற்றே சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய ஓர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட காராக டிகோர் ஐசிஎன்ஜி காட்சியளிக்கின்றது. டாடா டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிறம் மற்றும் 3 விதமான வேரியண்ட் தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Tata tigor icng amt boot space

இந்த காரின் மைலேஜ் திறனை நாங்கள் முழுமையாக பரிசோதிக்கவில்லை. குறைவான நேரமே இருந்த காரணத்தினால் அதுபற்றிய ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை. அதேவேளையில், ஒரு முறை முழுமையாக சிஎன்ஜி மற்றும் பெட்ரோலை நிரப்பினால் 700 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை இந்த காரில் பயணித்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிகோர், இந்தியாவின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ஐசிஎன்ஜி செடான் கார் மட்டுமில்லைங்க, இது அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காரும்கூட. குடும்பத்துடன் பாதுகாப்பாக பயணிக்க ஏற்ற செடானே இதுவாகும். பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்திற்கு 4 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. ஏபிஎஸ், இபிடி மற்றும் ஏர்பேக் என பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 16:00 [IST]
English summary
Tata tigor icng review design specs and driving impression details are here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X