மறு விற்பனை மதிப்பில் சிறந்து விளங்கும் டாப் 10 புதிய கார்கள்!
புதிய கார் வாங்கும்போது டிசைன், மைலேஜ், வசதிகள், விலை என எல்லாவற்றையும் பார்க்கும்போதே, அதனை சில ஆண்டுகள் பயன்படுத்தி விட்டு விற்பனை செய்யும்போது நல்ல ரேட்டுக்கு போகுமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
அவ்வாறு, நல்ல ரீசேல் வேல்யூ கொண்ட புதிய கார்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.

01. மாருதி ஸ்விஃப்ட்
நல்ல ரீசேல் மதிப்பு கொண்ட கார்களில் மாருதி ஸ்விஃப்ட் காருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக, இதன் டீசல் மாடலுக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக டிமான்ட் இருக்கிறது. டிசைன், மைலேஜ், வசதிகள், கையாளுமை என பல விதத்திலும் சிறப்பாக இருப்பதால், இன்னும் சில ஆண்டுகள் கழித்தும் நல்ல மதிப்பு கொண்ட மாடலாக இருக்கும் என்று கூற முடியும்.

02. மாருதி டிசையர்
விற்பனையில் சக்கைபோட்டு போட்டு வரும் மாருதி டிசையர் கார் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பான சாய்ஸ். ஸ்விஃப்ட்டைவிட கூடுதல் பூட் ரூம் வசதி கொண்டிருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சரியான விலை, அதிக மைலேஜ் போன்றவையும் இதன் பெருமையை பரைசாற்றும் அம்சங்கள். கடந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வந்துவிட்டதால், இன்னும் சில ஆண்டுகளுக்கு அதிக மாற்றங்கள் இருக்காது. மேலும், இந்த காருக்கு யூஸ்டு மார்க்கெட்டில் நல்ல ரீசேல் மதிப்பு இருக்கிறது.

03. ஹோண்டா சிட்டி
புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. மிட்சைஸ் செக்மென்ட்டில் ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ என்று பல மாடல்கள் இருந்தாலும் ஹோண்டா சிட்டி காரை விஞ்ச தற்போது ஆளில்லை எனும் அளவுக்கு தரம், டிசைன், வசதிகள், மைலேஜில் சிறந்து விளங்குகிறது. புதிய ஹோண்டா சிட்டி என்றில்லை, பழைய தலைமுறை மாடல்களுக்கு கூட இப்போதும் நல்ல ரீசேல் வேல்யூ இருப்பதை மனதில் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு முன்பதிவு செய்யலாம்.

04. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஃபோர்டு நிறுவனத்தின் சிறந்த ரீசேல் வேல்யூ கொண்ட கார் மாடல் ஈக்கோஸ்போர்ட். எவர்க்ரீன் டிசைன், வசதிகள் இந்த காருக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல ரீசேல் மதிப்பை பெற்று தரும் என்று கூறலாம். 4 மீட்டர் எஸ்யூவி செக்மென்ட்டில் புதிய மாடல்கள் வந்தால் கூட ஈக்கோஸ்போர்ட்டுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர்.

05. ஹூண்டாய் எலைட் ஐ20
கலக்கலான டிசைனால் மார்க்கெட்டில் கலக்கி வரும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரும் சிறப்பான ரீசேல் வேல்யூ கொண்ட மாடல். பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையான சாய்ஸாக இருப்பது இதன் விற்பனை மூலமாக புலனாகிறது. இந்த காரின் பெட்ரோல், டீசல் என இரு மாடல்களுக்கும் நல்ல ரீசேல் மதிப்பு இருக்கிறது.

07. மாருதி வேகன் ஆர்
யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல் மாருதி வேகன் ஆர். நகர்ப்புறத்திற்கு ஏற்ற அருமையான வசதிகள், அதிக மைலேஜ், சிறந்த இடவசதி, சரியான விலை கொண்ட மாடல். சில ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு விற்கும்போது நல்ல ரீசேல் மதிப்புடன் விற்பனையாகும் என்று கூறலாம்.

06. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா ஸ்கோர்ப்பியோ எஸ்யூவிக்கு நல்ல ரீசேல் மதிப்பு உள்ள எஸ்யூவி. பவர்ஃபுல் எஞ்சின், தோற்றம், பயன்பாடு என அனைத்திலும் சிறப்பானது. தற்போது விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை மாடலுக்கு அடுத்த சில ஆண்டுகள் வரை கண்டிப்பாக நல்ல ரீசேல் மதிப்பு இருக்கும் என்று அடித்து கூற முடியும்.

09. மாருதி எர்டிகா
காம்பேக்ட் ரக எம்பிவி மார்க்கெட்டில் மாருதி எர்டிகா சிறப்பான வரவேற்பை பெற்ற மாடல். மேலும், மைலேஜ், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் மனதை நிறைக்கிறது. சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்திருப்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு பெரிய அளவில் மாற்றம் இருக்காது. சில ஆண்டுகள் பயன்பாட்டிற்கு பிறகு நல்ல விலைக்கு விற்பனையாகும் என உறுதியாக நம்பலாம்.

08. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
பட்ஜெட் ரகத்தில் சிறந்த பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடல். டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பானது. எனவே, இந்த காரையும் கண்ணை மூடிக் கொண்டு முன்திவு செய்ய முடியும். சில ஆண்டுகள் பயன்பாட்டிற்கு பிறகு நல்ல விலைக்கு போகும்.

10. டொயோட்டா இன்னோவா
சொகுசான, நீண்ட தூர பயணங்களுக்கு சிறப்பான ஒரு எம்பிவி மாடலை விரும்புவோர்க்கு, டொயோட்டா இன்னோவாதான் சிறந்த சாய்ஸ். யூஸ்டு மார்க்கெட்டிலும் மிக மிக சிறப்பான ரீசேல் மதிப்பை கொண்டிருக்கிறது. எனவே, பட்ஜெட் கவலை இல்லாதவர்கள் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் இன்னோவாவை வாங்குவதில் எந்த தயக்கமும் வேண்டாம். விரைவில் புதிய தலைமுறை இன்னோவா மாடல் வருவதையும் மனதில் வைக்கவும்.

கண்டிஷன்
பொதுவாக யூஸ்டு கார் மார்க்கெட்டில் எந்த மாடலாக இருந்தாலும், அதன் பராமரிப்பு மிக முக்கியமாக பார்க்கப்படும். எனவே, காரை நல்ல பராமரிப்பில் வைத்திருப்பதும், கவனமான ஓட்டுதல் முறைகளை கையாள்வதும் நல்ல ரீசேல் மதிப்பை பெற்றுத் தரும்.


Click it and Unblock the Notifications








