அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் - 8 டீசல் கார்கள்!

By Saravana Rajan

கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பார்க்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று மைலேஜ். பெட்ரோல், டீசல் கார்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் அதிகமிருந்தாலும், மாதா மாதம், எரிபொருளுக்கு செலவிடும் தொகையை பாக்கெட்டிற்கு அடங்கும் வகையில் இருப்பதற்காக, சிறந்த மைலேஜ் தரும் கார்களை வாங்குகின்றனர். குறிப்பாக, அதிக மைலேஜ் தரும் டீசல் கார்கள் மறு விற்பனை மதிப்பிலும் சிறப்பாக இருப்பதால், அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் விற்பனையாகும் டீசல் கார்களில் அதிக மைலேஜ் தரும் மாடல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இதன்மூலமாக, காரை தேர்வு செய்யும்போது ஏற்படும் குழப்பங்களும், கால விரயமும் தவிர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

08. ஹோண்டா அமேஸ்

08. ஹோண்டா அமேஸ்

மைலேஜ்: 25.8 கிமீ/லி

காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் சிறந்த இடவசதி மற்றும் பூட்ரூம் இடவசதி கொண்ட மாடல். சமீபத்தில் முழுவதும் புதிய இன்டீரியர் அமைப்புடன் புதிய ஹோண்டா அமேஸ் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், வரும் மாதங்களில் ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை எண்ணிக்கையில் உயர்வு இருக்கும் என நம்பலாம். ஹோண்டாவின் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நடைமுறையில்...

நடைமுறையில்...

இந்த காரின் டீசல் மாடல் அதிர்வுகள் அதிகம் என்ற அவப்பெயரை பெற்றது. நடைமுறையில் லிட்டருக்கு 20 கிமீ முதல் 22 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம். சென்னையில் ரூ.7.37 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

07. ஃபோர்டு ஃபிகோ டீசல்

07. ஃபோர்டு ஃபிகோ டீசல்

மைலேஜ்: 25.83 கிமீ/லி

சிறந்த கட்டுமானம், கையாளுமை கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் சரியான விலையில் கிடைக்கும் மாடல். மேலும், புதிய தலைமுறை ஃபிகோ கார் தற்போது 99 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. மைலேஜும், இதன் சக்திவாய்ந்த டீசல் எஞ்சினுடன் சரியான காம்பினேஷனில் கிடைப்பதால், நிச்சயம் உங்களது தேர்வு பட்டியலில் சேர்க்கலாம்.

நடைமுறையில்....

நடைமுறையில்....

ஃபோர்டு ஃபிகோ கார் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் என்ற அளவிற்கு குறையாது. மேலும், வசதிகளிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பான மாடல் ஃபோர்டு ஃபிகோ. இதன் காம்பேக்ட் செடான் மாடலான ஃபோர்டு ஆஸ்பயர் காரும், இதே டீசல் எஞ்சின் கொண்டதாகவும், இதே மைலேஜுடன் கிடைப்பதையும் கருத்தில் கொள்க. எனவே, சற்று கூடுதல் இடவசதியும், பூட் ரூமும் கொண்ட ஃபோர்டு ஆஸ்பயரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். சென்னையில் ஃபோர்டு ஃபிகோ கார் ரூ.6.67 லட்சம் ஆன்ரோடு விலையிலும், ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டீசல் மாடல் ரூ.7.24 லட்சம் ஆன்ரோடு விலையிலும் கிடைக்கிறது.

06. ஹோண்டா சிட்டி

06. ஹோண்டா சிட்டி

மைலேஜ்: 26.0 கிமீ/லி

ஹோண்டா அமேஸ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஹோண்டா சிட்டி காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அழகான டிசைன், தரமான பாகங்கள், இடவசதி என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற இந்த மாடலின் மைலேஜும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

நடைமுறையில்...

நடைமுறையில்...

ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல் நடைமுறையில் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் முதல் 22 கிமீ மைலேஜை தரும் என நம்பலாம். சென்னையில் ரூ.9.94 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. வசதிகள், பாதுகாப்பில் மட்டுமல்ல, மறுவிற்பனையிலும் சிறந்த மாடல் என்பதையும் கவனத்தில் கொள்க.

05. மாருதி டிசையர்

05. மாருதி டிசையர்

மைலேஜ்: 26.59 கிமீ/லி

விற்பனையில் கொடி கட்டி பறக்கும் மாருதி டிசையர் காரின் விற்பனைக்கு, அதன் மைலேஜும் மிக முக்கிய காரணம். மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களும் சிறந்த மைலேஜை வழங்குகின்றன. இதன் டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். இதன் டீசல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைப்பதையும் மனதில் வைக்கவும்.

 நடைமுறையில்....

நடைமுறையில்....

நடைமுறையில் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம். குறைவான பராமரிப்பு செலவு, மாருதியின் சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவை இந்த காரின் விற்பனையை தூக்கி பிடித்திருக்கின்றன. சென்னையில் ரூ.7.29 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

 04. ஹோண்டா ஜாஸ்

04. ஹோண்டா ஜாஸ்

மைலேஜ்: 27.3 கிமீ/லி

இடவசதி, தரம், டிசைன் என அனைத்து விதத்திலும் நிறைவான மாடல். இதன் ஆற்றல் வாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும்.

நடைமுறையில்

நடைமுறையில்

நடைமுறையில் லிட்டருக்கு 18 கிமீ முதல் 20 கிமீ வரை ஹோண்டா ஜாஸ் டீசல் காரின் மைலேஜ் இருக்கும். சென்னையில் ஹோண்டா ஜாஸ் டீசல் கார் ரூ.7.59 லட்சம் ஆன்ரோடு விலை முதல் கிடைக்கிறது.

03. மாருதி பலேனோ

03. மாருதி பலேனோ

மைலேஜ்: 27.39 கிமீ

ஹோண்டா ஜாஸ் டீசல் மாடலை கட்டம் கட்டுவதற்கு, அதனைவிட கூடுதல் மைலேஜ் கொண்ட காராக மாருதி பலேனோவின் டீசல் எஞ்சினை ட்யூனிங் செய்துள்ளனர். இந்த காரிலும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் உயிர் கொடுக்கிறது.

நடைமுறையில்...

நடைமுறையில்...

இலகு கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் நடைமுறையில் லிட்டருக்கு 20 கிமீ முதல் 22 கிமீ வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம். மாருதி பலேனோ காரின் சிக்மா பேஸ் வேரியண்ட் ரூ.7.22 லட்சம் ஆன்ரோடு விலையில் சென்னையில் கிடைக்கிறது.

02. மாருதி செலிரியோ

02. மாருதி செலிரியோ

மைலேஜ்: 27.62 கிமீ/லி

மாருதி செலிரியோ காரில் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வழங்கும். எனவே, முழுக்க முழுக்க நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

நடைமுறையில்....

நடைமுறையில்....

நடைமுறையில் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் வரை எதிர்பார்க்கலாம். குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த மைலேஜ் தரும் டீசல் கார் என்பதும், குறைவான பராமரிப்பு செலவும் இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். சென்னையில் ரூ.5.35 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

01. மாருதி சியாஸ்

01. மாருதி சியாஸ்

மைலேஜ்: 28.09 கிமீ/லி

மாருதி சியாஸ் காரின் எஸ்விஎச்எஸ் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட டீசல் மாடல்தான் தற்போது இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. விற்பனையில் ஓங்கியிருந்த ஹோண்டா சிட்டி காரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கடந்த ஆண்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு கைமேல் பலன் கிட்டியிருக்கிறது. ஆம், மாருதி சியாஸ் காரின் விற்பனை சிறப்பாக உயர்வு பெற்றிருக்கிறது.

நடைமுறையில்...

நடைமுறையில்...

மாருதி சியாஸ் காரில் இருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் ஃபியட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் நடைமுறையில் லிட்டருக்கு 20 கிமீ வரை மைலேஜ் தரும். சென்னையில் ரூ.9.72 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

உலகின் காஸ்ட்லியான டாப் 10 கார் மாடல்கள்!

More from DriveSpark

Article Published On: Monday, March 21, 2016, 18:34 [IST]
English summary
Top 8 Best Fuel Efficient Diesel Cars In India 2016. Read now in Tamil.
மேலும்... #ரிவியூ #review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+