ரூ.6 லட்சத்திற்குள் இந்தியாவின் சிறந்த டீசல் ஹேட்ச்பேக் கார்கள்!

By Saravana

ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை விலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.

இதற்கான முக்கிய காரணம், வேறு எந்தவொரு டீசல் கார்களை விட இந்த ரக கார்கள் அதிக மைலேஜ் கொடுப்பதுதான். விலை, மைலேஜ் போன்ற பல முக்கிய விஷயங்களில் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்திவிடும் இந்த கார்களின் சிறப்புத் தொகுப்பை இங்கே வழங்கியுள்ளோம். இந்த லிஸ்ட்டிலிருந்து எளிதாக கார்களை தேர்வு செய்து கொள்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.


முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

அராய் சான்றளித்துள்ள மைலேஜ் விபரங்களும், டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையிலான விலை விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.6 லட்சத்தையொட்டிய ஆன்ரோடு விலை கொண்ட பேஸ் வேரியண்ட் கொண்ட மாடல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

டாடா இண்டிகா வி2

டாடா இண்டிகா வி2

மிக குறைவான விலையில் ஓர் டீசல் கார் வேண்டும் என்பவர்களுக்கான முதல் சாய்ஸ் இந்த கார்தான். குறைவான பராமரிப்பு செலவு, நல்ல மைலேஜ் ஆகியவை டாக்சி மார்க்கெட் காராக இதனை மாற்றி விட்டது. இருப்பினும், குறைவான விலையில் ஓர் டீசல் கார் வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸ் இதுதான்.

சாதகங்கள்

அதிக மைலேஜ், அதிக இடவசதி

பாதகங்கள்

டிசைன், தரம்

இண்டிகா வி2 மைலேஜ், விலை

இண்டிகா வி2 மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.4.19 லட்சம்

மைலேஜ்: 18 கிமீ/லி

இரண்டு வேரியண்ட்டுகளில் டீசல் மாடல் கிடைக்கிறது

இண்டிகா இவி2

இண்டிகா இவி2

இண்டிகா இவி2 காருக்கும், இண்டிகா வி2 காருக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை. அதேவேளை, இண்டிகா இவி2 காரில் பிஎஸ்-4 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

சாதகங்கள்

அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு செலவு மற்றும் அதிக இடவசதி ஆகியவை இந்த காருக்கான சிறப்பம்சங்களாக கூறலாம்.

பாதகங்கள்

டிசைன்

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.4.46 லட்சம்

மைலேஜ்: 25 கிமீ/லி

டாடா இண்டிகா விஸ்டா டெக்

டாடா இண்டிகா விஸ்டா டெக்

இண்டிகா கார்களின் டாக்சி முத்திரையை போக்கும் விதத்தில் பிரமியம் அம்சங்களுடன் தனிநபர் மார்க்கெட்டுக்காக டாடா விற்பனை செய்யும் மாடல் இது. விஸ்டா காரின் லிமிடேட் எடிசன் மாடலாக தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்தான் விஸ்டா டெக். டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டச்ஸ்கிரீன் மல்டிமீடியா சிஸ்டம், சேட்டிலைட் நேவிகேஷன் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கிறது.

சாதகங்கள்

சிறந்த பெர்ஃபார்மென்ஸ், அதிக வசதிகள், தாராள இடவசதி

பாதகங்கள்

தரமற்ற பாகங்கள், மோசமான ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஆகியவை குறைகளாக இருக்கின்றன.

இதற்கு மாற்றாக விரைவில் போல்ட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.4.78 லட்சம்

மைலேஜ்: 19.1 கிமீ/லி

வசதிகளை பொறுத்து மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

செவர்லே பீட்

செவர்லே பீட்

டாடாவின் குறைவான விலை அஸ்திரங்களை விட்டு வெளியில் வந்து தேடும்போது முதல் சாய்சாக பட்டியலில் இடம்பெறுவது செவர்லே பீட் கார்தான். இந்தியாவின் சிறிய டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படும் காரும்கூட. சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற சிறந்த நகர்ப்புற காரும் இதுதான். இதன் டாப் வேரியண்ட் போதுமான வசதிகளுடன் கிடைக்கிறது.

சாதகங்கள்

மைலேஜ், எளிதான கையாளுமை, போதுமான வசதிகள்

பாதகங்கள்

குறைந்த இடவசதி, சிறிய பின்புற கண்ணாடி ஜன்னல், நெடுஞ்சாலை ஓட்டுதலுக்கு ஒவ்வாத சிறிய டீசல் எஞ்சின்

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ4.74 லட்சம்

மைலேஜ்: 25.44 கிமீ/லி

4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று. சிறந்த இடவசதி கொண்டதாகவும் இருக்கிறது. பெர்ஃபார்மென்ஸ் காராக கூற முடியாவிட்டாலும், நெடுஞ்சாலைகளில் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கிறது.

சாதகங்கள்

சிறந்த இடவசதி, ஏசி, டிசைன்

பாதகங்கள்

கரடுமுரடான சாலைகளில் படுத்தும் சஸ்பென்ஷன் அமைப்பு

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.4.88 லட்சம்

மைலேஜ்: 20 கிமீ/லி

4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

டால்பாய் டிசைன் கான்செப்ட கொண்ட இந்த கார் உயரமானவர்களுக்கும் சவுகரியமாக உட்கார்ந்து ஓட்டுவதற்கான இடவசதியை அளிக்கிறது. இதன் டீசல் எஞ்சின் ஸ்மூத்தாக இருப்பதுடன் நல்ல மைலேஜையும் தருகிறது. மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்கும் பின்புலமாக இருக்கிறது.

சாதகங்கள்

டால்பாய் டிசைன், எஞ்சின்

பாதகங்கள்

பின்புற டிசைன், பின்புற பயணிகளுக்கான இடம்

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.5.42 லட்சம்

மைலேஜ்: 23.2 கிமீ/லி

4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

மார்க்கெட்டின் புதிய டீசல் ஹேட்ச்பேக் கார். ஹூண்டாயின் டிசைனும், தரமும் மிளிர்வதால் தேர்வு பட்டியலில் முன்னுரிமை பெறுகிறது. பல சாதகங்களை பெற்றிருக்கும் இந்த கார் நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கிறது. வசதிகளிலும் குறைவில்லை. சிறப்பான 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படும் இந்த கார் பல முன்னணி ஹேட்ச்பேக் கார்களின் மார்க்கெட்டை சிறிதளவு உடைத்திருப்பது உண்மை.

சாதகங்கள்

சிறப்பான ஃபிட் அண்ட் ஃபினிஷ், எஞ்சின், டிசைன், வசதிகள்

பாதகங்கள்

குறைகளாக குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் சிறந்த டீசல் கார்.

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.5.25 லட்சம்

மைலேஜ்: 24 கிமீ/லி

5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த நிசான் மைக்ரா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. முந்தைய மாடலைவிட அதிக ஸ்போர்ட்டியாக வந்திருக்கும் புதிய மைக்ரா காரின் டீசல் மாடல் சிறப்பான தேர்வாகவே இருக்கும். மேலும், இதன் டீசல் எஞ்சினும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கொண்டது. இலகுவான ஸ்டீயரிங் அமைப்பும் நகர்ப்புற டிரைவிங்கிற்கு ஏற்றது.

சாதகங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் முன்புற ஏர்பேக்குகள், கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாபப் சிஸ்டம், டிசைன், இலகு ஸ்டீயரிங், தரம்

பாதகங்கள்

குறைகள் அதிகமில்லாத காராக இருந்தாலும், நிசான் நிறுவனத்தின் குறைவான சர்வீஸ் நெட்வொர்க் காரணமாக இந்த கார் விற்பனையில் முன்னேற முடியாமல் தவிக்கிறது.

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.5.57 லட்சம்

மைலேஜ்: 23 கிமீ/லி

5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டு சந்தைகளில் அதிகம் விரும்பப்படும், விற்பனையாகும் கார் மாடல். மாருதி ஆல்ட்டோ காருக்கு அடுத்து, இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. ஸ்போர்ட்டியான டிசைன், சிறந்த எஞ்சின், நல்ல மைலேஜ் ஆகியவை இந்த காருக்கான சாதகங்களாக இருக்கின்றன. சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு மூலம் இந்த கார் நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையில் சிறந்த கையாளுமையை வழங்குகிறது.

சாதகங்கள்

எஞ்சின், மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ், கையாளுமை

பாதகங்கள்

விலை, குறைந்த இடவசதி கொண்ட பூட்ரூம்

மைலேஜ், விலை

மைலேஜ், விலை

ஆரம்ப விலை: ரூ.5.58 லட்சம்

மைலேஜ்: 22.9 கிமீ/லி

3 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

இது உங்கள் சாய்ஸ்?!

இது உங்கள் சாய்ஸ்?!

ரூ.6 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்ட கார்களின் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட காரை மட்டும் கைகாட்டி இது சிறந்த கார் என்று கூற முடியாது. பட்டியலில் இருக்கும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து உங்களது குடும்பத்தினருக்கும், உங்களது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு அமைந்தால் சிறப்பானதாக இருக்கும். சிலருக்கு மைலேஜ் வேண்டும், சிலருக்கு டிசைன் சிறப்பாக இருக்க வேண்டும், சிலருக்கு பட்ஜெட்டிற்குள் அடங்க வேண்டும், மீதம் சிலருக்கோ அதிக பெர்ஃபார்மென்ஸ் வழங்க வேண்டும் என்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும், அனைத்து விதங்களிலும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் டீசல் ஹேட்ச்பேக் கார்களில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை சிறப்பானதாக கூறலாம். வசதிகள், விலை, டிசைன், மைலேஜ் என அனைத்து விதத்திலும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை இந்த கார் எளிதில் சமாதானப்படுத்தும் என்று கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 3, 2014, 12:30 [IST]
English summary
The following gallery provides a list of diesel hatchbacks in India priced between Rs 4 lakhs and Rs 6 lakhs, along data such as mileage, price, features and other details, which should help you decide which diesel hatchback to opt for.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+