இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மினி எஸ்யூவி மாடல்கள்: ஒரு கண்ணோட்டம்

By Saravana

இதுவரை பெற்ற தகவல்களின் அடிப்படையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 13 புதிய எஸ்யூவி மாடல்கள் இந்திய மண்ணில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. எனவே, அடுத்த வரும் ஆண்டுகளில் கார் மார்க்கெட்டில் எஸ்யூவி ரக வாகனங்களின் ஆதிக்கம் வெகுவாக அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

குறிப்பாக, காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களின் விற்பனையும், வளர்ச்சியும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ், செயல்திறன் மிக்க எஞ்சின்கள், சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட உதவும் இருக்கை அமைப்பு போன்றவற்றால் இந்த காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கான மவுசு கூடி வருகிறது.


பட்டியல்

பட்டியல்

அடுத்து வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மஹிந்திரா எஸ்க்ஸ்யூவி 300

மஹிந்திரா எஸ்க்ஸ்யூவி 300

எஸ்யூவி வாகன தயாரிப்பில் சிறந்து விளங்கும் மஹிந்திரா பல புதிய மாடல்களை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் மாடல்தான் எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புதிய மினி எஸ்யூவி மாடல். 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் 3+3 இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் வருவதால், பல பி செக்மென்ட் ஹேட்ச்பேக் கார்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Image Credit: Autocarindia

 மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் புதிய மினி எஸ்யூவி கான்செப்ட் மாடல்தான் எக்ஸ்ஏ ஆல்ஃபா. 2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் கே- சீரிஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வருகிறது. ரூ.6.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

 டாடா நெக்ஸன்

டாடா நெக்ஸன்

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸன் எஸ்யூவி கான்செப்ட் டாடாவின் புதிய டிசைன் கொள்கையில் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதனால், மிக ஸ்டைலான தோற்றத்தை கொண்டிருக்கும். டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் டர்போ டீசல் எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு இதன் புரோட்டோடைப் மாடல்கள் சோதனைக்கு களமிறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016ம் ஆண்டில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

 ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி

ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி

பிரியோ காரின் அடிப்படையில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ஹோண்டா கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது. பிரியோ, அமேஸ் போன்ற கார்களின் உதிரிபாகங்களை பங்கிட்டுக் கொள்ளும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும். 2016ம் ஆண்டு இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 ஃபோக்ஸ்வேகன் டைகுன்

ஃபோக்ஸ்வேகன் டைகுன்

இந்திய மார்க்கெட்டில் தடுமாறி வரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது மார்க்கெட்டை வலுப்படுத்திக்கொள்வதற்காக புதிய டைகுன் மினி எஸ்யூவியை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டிடிஐ டர்போ எஞ்சின் பொருத்தப்பட்ட எஞ்சின்களுடன் வருகை தர உள்ளது. ரூ.6 லட்சம் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவர்லே அத்ரா

செவர்லே அத்ரா

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் தரிசனம் கொடுத்த செவர்லே அத்ரா காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைப்பில் மிக அசத்தலாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் வர்த்தகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால், இந்த புதிய மாடலை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம் காட்டவில்லை. ஒருவேளை, இந்த மினி எஸ்யூவி திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸ் கையிலெடுத்தால், 2017ம் ஆண்டில்தான் விற்பனைக்கு வரும்.

ஹூண்டாய் ஐஎக்ஸ்25

ஹூண்டாய் ஐஎக்ஸ்25

இது 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மாடல். இருப்பினும், காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும் என்பதோடு, விரைவில் மார்க்கெட்டுக்கு வர இருப்பதால், இந்த எஸ்யூவி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்டதாக வரும் என்று தெரிகிறது. ரெனோ டஸ்ட்டர், நிசான் டெரானோ எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 6, 2014, 14:40 [IST]
English summary
The compact SUV space in India will undergo a big revolution. We rounds up all-new compact SUVs that are lined up for the Indian market over the next 3 years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+