வால்வோ கார் என்றால் சும்மாவா!! சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? டெஸ்ட் டிரைவ் ரிவியூ!

உலகமே எலக்ட்ரிக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இதில் நம் இந்தியா மட்டும் என்ன விதிவிலக்கா... நம் நாட்டு சந்தையில் சமீப காலமாக பல்வேறு புதிய புதிய எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில், வால்வோ நிறுவனத்தில் இருந்து விரைவில் விற்பனைக்கு வரும் எலக்ட்ரிக் கார் சி40 ரீசார்ஜ் ஆகும்.

வால்வோவின் கூபே-ஸ்டைல் எஸ்யூவி காரான சி40 ரீசார்ஜ் அடுத்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பின் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்படும். இதற்கிடையில், இந்த வால்வோ எலக்ட்ரிக் காரை இயக்கி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை தொகுப்பாக, டெஸ்ட் டிரைவ் விமர்சனமாக வழங்கியுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

volvo c40 recharge full review

தோற்றம் & சவுகரியம்: வால்வோ சி40, ஓர் கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் என ஏற்கனவே கூறிவிட்டோம். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் ஸ்போர்டியர் வெர்சன் புதிய சி40 ரீசார்ஜ் என கூட சொல்லலாம். ஏனெனில் தோற்றத்தில், இந்த இரு வால்வோ எலக்ட்ரிக் கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையே. சில ஸ்போர்டியான ஹைலைட்கள் மூலம் புதிய சி40 ரீசார்ஜ் சற்று வித்தியாசப்படுகிறது.

சி40 ரீசார்ஜ் காரின் முன்பக்கத்தில் தோரின் சுத்தியல் வடிவிலான ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கு கீழே, மூடப்பட்ட கிரில் அமைப்பு இருக்க, இதில் வால்வோ பிராண்டின் லோகோ பொருத்தப்பட்டு உள்ளது. ஸ்போர்டியரான தோற்றத்திற்கு ஏற்ப, ஸ்போர்டியர் வடிவிலான பம்பர்கள் உள்ளன. முன் பம்பரின் இரு முனைகளிலும் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.

volvo c40 recharge full review

காரின் பக்கவாட்டில் இருந்து பார்த்தால், நேர்த்தியாக சரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள வால்வோ சி40 ரீசார்ஜின் மேற்கூரை நம்மை வசீகரிக்கிறது. சக்கரங்களுக்கு மேலே, வீல் ஆர்ச்சுகள் சற்று அகலமாக & விரிந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. காரின் ஸ்போர்டியரான தோற்றத்திற்கு ஏற்ப சைடு ஸ்க்ரிட்ஸ் முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளன. காரின் பின்பக்கத்தில், விண்ட்ஸ்க்ரீனுக்கு இரு பக்கங்களிலும் இரு மினி ஸ்பாய்லர்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, பின்பக்க ஜன்னல் கண்ணாடி, பின் கதவுடன் இணையும் இடத்திலும் ஸ்பாய்லர் போன்றதான வடிவத்தை பார்க்க முடிகிறது. டெயில்லைட்கள் C-வடிவில் காட்சித் தருகின்றன. பின்பக்க பம்பரின் கீழ் பகுதியில் கருப்பு நிறத்தில் பிளாஸ்டிங் கிளாடிங் வழங்கப்பட்டு உள்ளன. இதே போன்றதான செட்அப்பை காரின் முன்பக்கத்திலும் பார்த்திருந்தோம். காருக்கு உள்ளே சென்றால், வெளிப்பக்கத்திற்கு இணையாக உட்பக்க கேபினும் ரக்டு தோற்றத்தைத் தருகிறது.

volvo c40 recharge full review

நீங்கள் ஒரு எஸ்யூவி காரினுள் இருக்கிறீர்கள் என்பது பல்வேறு இடங்களில் நமக்கு ஞாபகப்படுத்தப்படுகிறது. புதிய சி40 ரீசார்ஜின் வெளிப்புறத்தை போன்று, உட்புற கேபினும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் உடன் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறது. சி40 ரீசார்ஜின் கேபினுள் எந்த இடத்திலும் லெதரை பார்க்க முடியவில்லை. அதேநேரம், இந்த எலக்ட்ரிக் காருக்குள் வேறொரு வித்தியாசமான மெட்டீரியலை தரையில் கார்பேட்களாக பார்க்க முடிகிறது.

இந்த கார்பேட்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் செய்யப்பட்டவை என எங்களிடம் கூறப்பட்டது. டேஸ்போர்டில், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே மூலம் இயங்கும் 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இண்டோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரை உடன் இணைக்கப்பட்டதாக ஹார்மன்-கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளது. இந்த காரின் கேபினுள் ஸ்போர்டியரான டச்சிங்கை பல இடங்களில் காண முடிகிறது.

volvo c40 recharge full review

குறிப்பாக, ஹீட்டிங் & எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதிகளை கொண்ட முன் இருக்கைகள் வித்தியாசமான, ஸ்போர்டியான வடிவில் உள்ளன. ஆனால் உண்மையில் இதன் காரணமாகவே, பின் இருக்கைகள் சற்று குறுகியதாக உள்ளன. அதாவது, பின் இருக்கையில், பெரியவர்கள் 3 பேரை அமர வைத்துவிடலாம் என நினைத்தால், பயணத்தின்போது அது அசவுகரியமாக இருக்கும். ஆதலால், வால்வோ சி40 ரீசார்ஜை ஓர் 4-கதவு எஸ்யூவி கார் என்றே சொல்ல வேண்டும்.

அதேபோல், காரின் மேற்கூரை கூபே-ஸ்டைலில் சாய்வாக வடிவமைக்கப்பட்டு உள்ளதால், பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு அதிக அளவில் ஹெட்ரூம் இடவசதி கிடைக்கவில்லை. இதனால், உயரம் அதிகமானவர்கள் இந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பது சற்று சிரமமே. இருப்பினும், போதுமான அளவில் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஏதுவாக, 413 லிட்டர்கள் கொள்ளளவில் பின்பக்க பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

volvo c40 recharge full review

பின் ஜன்னல் கண்ணாடிகள் செங்குத்தான வடிவில் உள்ளதால், வெளியே விசாலமாக பார்க்க முடிகிறது. இதனால் ஓர் ஸ்போர்ட்ஸ் காரில் இருப்பது போன்றதான உணர்வு ஏற்படுகிறது. இதனை வால்வோ அருமையாக வடிவமைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சி40 ரீசார்ஜ் காரில் ஏகப்பட்ட சென்சார்களும், கேமராக்களும் உள்ளன. பனோராமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங், 360-டிகிரி கேமரா, கனெக்டட் கார் தொழிற்நுட்பம், சென்சார்-சார்ந்த தானியங்கி டிரைவிங் உதவிகள் (ADAS), அதிக எண்ணிக்கையில் ஏர்பேக்குகள் உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த எலக்ட்ரிக் காரில் உள்ளன.

மோட்டார்ஸ், பேட்டரி, ரேஞ்ச் & பரிணாம அளவுகள்: புதிய வால்வோ சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான 78kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 530கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். காருடன் வழங்கப்படும் 11 கிலோவாட்ஸ் சார்ஜர் உதவியுடன் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6இல் இருந்து 7 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும்.

volvo c40 recharge full review

அதுவே 150 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட சார்ஜரின் மூலமாக 10%-இல் இருந்து 80% சார்ஜை வெறும் 27 நிமிடங்களில் நிரப்பிவிடலாம். பேட்டரியின் ஆற்றல் காரின் முன் & பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள இரு எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு சமமாக பிரித்தளிக்கப்படுகிறது. இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக அதிகப்பட்சமாக 402 பிஎச்பி மற்றும் 660 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

0-இல் இருந்து 100kmph வேகத்தை குறைந்தது வெறும் 4.7 வினாடிகளிலேயே எட்டிவிடக்கூடிய இந்த வால்வோ எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும். காம்பெக்ட் எஸ்யூவி கார் என கூறப்பட்டாலும், சி40 ரீசார்ஜ் காரின் நீளம் 4,440மிமீ, அகலம் 1,873மிமீ, உயரம் 1,591மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2,702மிமீ ஆகும். கிரவுண்ட் கிளியரென்ஸ் 171மிமீ ஆக உள்ளது. இந்த காரின் 19-இன்ச் அலாய் சக்கரங்களில் பைரெல்லி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

volvo c40 recharge full review

பயண அனுபவம்: இந்த காரில் மோட்டாரை ஸ்டார்ட் செய்வதற்கு புஷ் பொத்தான் எதுவும் இல்லை. ஆதலால், இருக்கையில் அமர்ந்த பின் நீங்கள் கியர்பாக்ஸை 'டிரைவ்'-க்கு நகர்ந்தினாலே போதுமானது. அதேபோல், டிரைவ் மோட்கள் போன்ற கிரிஞ்ச் விஷயங்களும் இந்த காரில் இல்லை. ஆதலால், இப்போது நாம் எந்த டிரைவ் மோடில் செல்வது சரியானதாக இருக்கும் என்கிற கேள்விகள் நமக்குள் எழவில்லை.

ஆக்ஸலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டால், கார் அதன் போக்கில் மென்மையாக இயங்குகிறது. 100kmph வேகத்தை 4.7 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும் என வால்வோ கூறினாலும், அதற்கு முன்பாகவே எட்டியது போன்றே நாங்கள் உணர்ந்தோம். நின்ற இடத்தில் இருந்துக் கொண்டே ஆக்ஸலேட்டரை கொடுத்து காரை உறும செய்வது மற்றும் ஓவர் டேக்கிங் உள்ளிட்டவை புதிய சி40 ரீசார்ஜில் வேற லெவல் ஜாலியான உணர்வை தந்தன.

volvo c40 recharge full review

சுமார் 2.1 டன்கள் எடை கொண்ட காரின் பேட்டரி தொகுப்பின் எடை காரின் 4 சக்கரங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதுபோல் உணர முடிந்தது. அதேபோல், வளைவுகளில் திரும்பும்போது விரைவான சஸ்பென்ஷன் செட்அப் சிறப்பாக செயல்படுவதை உணர முடிந்தது. ஆனால், மேடு, பள்ளங்களில் ஏறி, இறங்கும்போது டேம்பிங் கொஞ்சம் ஹார்ஷாக உள்ளது போல் உணர்ந்தோம். காரின் வேகத்தை அதிகரிக்க, அதிகரிக்க ஸ்டேரிங் சக்கரமும் அதற்கேற்ப எடைமிக்கதாக மாறுவதை தெளிவாக உணர முடிந்தது.

ஒவ்வொரு முறையும் காரின் வேகத்தை குறைக்கும்போது ரீஜெனரேட்டிவ் பிரேக்குகள் மூலம் பேட்டரி தொகுப்பு கொஞ்சம் சார்ஜாகி கொள்கிறது. 1-பெடல் அமைப்பு சி40 ரீசார்ஜ் காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களில் இயங்குவதற்கு எளிமையானது ஆக்குகிறது. சிறப்பான என்.வி.எச் நிலைகளை கொண்ட சி40 ரீசார்ஜ் காரினுள் அமர்ந்திருக்கும் போது எந்தவொரு மோட்டார் சத்தத்தையும் கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு, இந்த எலக்ட்ரிக் காரின் டிரைவ்டிரெயின் மென்மையானதாக செயல்படுகின்றன.

volvo c40 recharge full review

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களிடம் கார் குறைந்த நேரத்திற்கு மட்டுமே இருந்தால், வால்வோ சி40 ரீசார்ஜின் மைலேஜை ஆராய முடியவில்லை. மற்றப்படி, பிரபலமான ஸ்வீடன் நாட்டு வால்வோ நிறுவனத்தில் என்னென்ன அம்சங்களை ஓர் எலக்ட்ரிக் காரில் எதிர்பார்க்க முடியுமோ அத்தனையும் இதில் உள்ளது. ஆனால், தொழிற்நுட்ப அம்சங்கள் போதுமான அளவில் இருந்தாலும், காரின் கேபின் அளவில்-சிறியதாக இருப்பது எங்களுக்கு குறையாக தோன்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 26, 2023, 10:17 [IST]
English summary
Volvo c40 recharge electric suv car design comfort driving impressions
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X