மானேசரில் ரூ. 1,925 கோடி செலவில் உருவாகும் புதிய மாருதி தொழிற்சாலை

சுசுகி மோட்டார் கார்பரேஷனின் தலைவர் ஒசாமு சுசுகி இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவில் கார்களின் கிராக்கி இந்த வேகத்தில் அதிகரிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.எனவேதான் புதிய கார் தயாரிப்பு ஆலை நிறுப்படவுள்ளதாக கூறினார்.
மாருதி கார்களின் கிராக்கி அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் உற்பத்தியைப் பெருக்கி, மக்களுக்கு விரைவில் கார் கிடைக்கச் செய்ய முடியும். தற்போது துவங்கவுள்ள தொழிற்சாலையையும் சேர்த்து மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மூன்று ஆகும். இந்த புதிய தொழிற்சாலையும் துவங்கப்பட்டால் மாருதி கார்களின் உற்பத்தி அதிகரித்து வருடத்திற்கு 1.75 மில்லியன் கார்கள் தயாரிக்கப்படும்.
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாருதி கிட்டத்தட்ட 5 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் மட்டும் நாட்டின் கார் விற்பனை 38 சதவிகிதம் அதிகரித்து 1,58,764 கார்கள் விற்றது. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 115,084 கார்கள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








