மீண்டும் பாயும் மகிந்திரா-தார் எஸ்.யு.வி. அறிமுகம்

Mahindra Thar
மகிந்திராவின் கமாண்டர் ஜீப்பை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அதை ஓட்டிய அனுபவம் கொண்டவர்களும் சரி, சாலையில் அது பாய்ந்து பாய்ச்சல் காட்டியதைப் பார்த்தவர்களும் சரி இதுதாண்டா ஜீப்பு என்று உற்சாகமடைந்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.

கமாண்டர் அறிமுகமாகி இப்போது பத்து வருடங்கள் ஓடி விட்டது. இதையடுத்து அடுத்து ஒரு அற்புதத்தை மகிந்திரா சாலைக்குக் கூட்டிக் கொண்டு வருகிறது. அதன் பெயர் தார். எஸ்.யு.வி. வாகனமான இது கமாண்டரின் மறு வடிவமாகும். கமாண்டரை மேலும் செதுக்கி தார் என்ற பெயரில் இறக்குகிறது மகிந்திரா.

ரூ. 7 லட்சம் என்ற விலையுடன் களமிறக்கப்படும் தார், முதலில் கேரளாவிலும், ராஜஸ்தானிலும் இந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது தெந் ஆப்பிரிக்க சாலைகளில் தார், ரூ. 9.5 முதல் 10 லட்சம் விலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தியத் தேவைகளுக்கேற்றார்பால இதை சரி செய்து அறிமுகப்படுத்துகிறது மகிந்திரா.

ஜீப் வெறியர்களுக்கேற்ற அட்டகாசமான வாகனமாக இது இருக்கும் என்று மும்பை டீலர் ஒருவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், இளைஞர்களுக்கேற்ற வேகமான வண்டியாகவும் இது இருக்கும் என்கிறார் அவர்.

தார் குறித்த மேல் விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் கமாண்டர் 5 ஜீப்பின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இது என்பது மட்டும் உறுதியாகத் தெரியவருகிறது.

2.5 லிட்டர் எரிபொருள் திறன், சிஆர்டிஐ டீசல் என்ஜின், லேட்டஸ்ட் சஸ்பென்ஷன் ஆகியவையும் இதில் இடம் பெறுகிறதாம்.

தனது கன்டிவ்லி பேக்டரியில் தார் ஜீப்பை தயாரிக்கவுள்ளது மகிந்திரா. வருடத்திற்கு இங்கு 5000 தார் வாகனங்கள் தயாரிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 19, 2010, 15:31 [IST]
English summary
Those who have driven or witnessed the run of Commander Jeep would not have forgotten the mirth of the pace till a decade ago. Now exactly after 10 years, Mahindra is entering into the SUV segment with the proposed launch of Thar, a refined version of Commander Jeep. With the price tag of Rs7 lakhs, Mahinda works out to introduce this first in Kerala and Rajasthan in this December. The SUV is on the run now in South African roads at the price range of Rs9.5- 10 lakhs. M&M intends to refine this SUV to suit the Indian demands, said an official from the company.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+