மீண்டும் அமெரிக்காவில் பியட்: குறைந்த விலை பியட் 500 அறிமுகம்

39 மாநிலங்களில் பியட் கார் விற்பனை செய்யும் 130 டீலர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பியட், கிரைஸ்லர் குரூப்பை தன்னுடன் இணைத்துக் கொண்டது. கிரைஸ்லர் டிலர்களுக்குத் தான் தனியுரிமையில் முன்னுரிமை அளிக்கிறது பியட். ஆனால் அவர்களை தனி விற்பனை மற்றும் சேவை நிலையங்களை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பியட் 500 கார், 3 கதவுகள் கொண்ட ஹாட்ச்பேக் கார் ஆகும். இது தான் பியட் கடந்த 1983-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தும் முதல் காராகும்.
கடந்த 1983-ம் ஆண்டு பியட் துரு மற்றும் தரப் பிரச்சனைகள் காரணமாக அமெரிக்க சந்தையை விட்டு வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








