கார் விற்பனை... தொட முடியாத உயரத்தில் மாருதி!

டெல்லி: டிசம்பர் மாத நிலவரப்படி கார் விற்பனையில் இன்றும் முடிசூடா நிறுவனமாகத் திகழ்வது மாருதி சுஸுகி நிறுவனமே. இந்த ஒரு மாதத்தில் மட்டும் மாருதி 84804 கார்களை விற்றுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் வரும் ஹூண்டாய் 22252 கார்களை மட்டும் விற்றுள்ளது (டாடா மோட்டார்ஸ் தனது டிசம்பர் மாத விற்பனை விவரங்களை இன்னும் வெளியிடவில்லை).

hyundai

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்து கார் விற்பனை 49 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் கார்கள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும், இந்தியாவில் மட்டும் கார் விற்பனையில் சரிவு ஏற்படவில்லை.

குறிப்பாக மாருதி நிறுவனம் உள்நாட்டில் மட்டும் 71000 கார்களை விற்றுள்ளது. வேறு நிறுவனங்களால் தொட முடியாத உயரம் இது. மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் கூட இதற்கு முந்தைய மாதத்தில் உள்நாட்டில் 54000 கார்களைத்தான் விற்றது. அதுவும் நானோவுடன் சேர்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

விலையைக் குறைக்காமல், அதே நேரம் அதிக விலை கொண்ட சொகுசு கார்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இந்த விற்பனையை சாதித்துள்ளது மாருதி.

கிறிஸ்துமஸ் சீசனில் மட்டும் இந்த நிறுவனம் 13804 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும்.

மாருதியின் இந்த அபார விற்பனைக்குக் காரணம் என்ன?

"நாங்கள் கார்களின் விலையைக் குறைக்கவில்லை. அந்தமாதி தந்திரங்களில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. தரமான கார்கள், சமரசமற்ற மைலேஜ் இதுதான் மக்களுக்கு மாருதி மீதுள்ள நம்பிக்கை. இன்னொரு பக்கம் வங்கிகள் கார் லோன்கள் தருவதில் பின்பற்றிய சில நடைமுறைகளை எளிமைப்படுத்திக் கொண்டன.

கடந்த 2008 டிசம்பரில் 4264 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தோம். அது இந்த டிசம்பரில் 224 சதவிகிதம் அதிகரித்து 13804 என சாதனை படைத்துள்ளது. அரசு தரும் ஏற்றுமதிச் சலுகைகள் இதற்கு முக்கிய காரணம். இன்னொன்று மாருதியின் ஏ ஸ்டார் கார்களுக்கு ஐரோப்பாவில் அருமையான மார்க்கெட் அமைந்துள்ளது" என்கிறார் மாருதி சுஸூகியின் தலைமை பொது மேலாளர் ஸ்ரீவத்சவா.

மாருதிக்கு அடுத்து நிச்சயம் டாடா மோட்டார்ஸ்தான் அதிக கார்களை விற்றுள்ளது. ஆனாலும் டிசம்பர் மாத விவரங்கள் வெளியாகாத நிலையில், மாருதிக்கு அடுத்து அதிக கார்கள் விற்றுள்ள நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இடம்பெற்றுள்ளது. உள்நாட்டில் ஹூண்டாயின் விற்பனை 22,252 என்கிறது புள்ளிவிவரம்.

மகிந்திரா அண்ட் மகிந்திரா 16999 கார்களையும், ஜெனரல் மோட்டார்ஸ் 8258 கார்களையும், ஸ்கோடா 1113 கார்களையும் விற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 2, 2010, 11:28 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+