குஜராத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க போர்டு நிறுவனம் திட்டம்

Ford Figo
டெல்லி: இந்திய கார்ச் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வைக் கண்டு வரும் நிலையில் இந்தியாவில் தனது 2வது கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ போர்டு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. குஜராத்தில் இது அமையலாம் என்று தெரிகிறது. இதற்காக நிலம் தருமாறு கோரி குஜராத் அரசை அது அணுகியுள்ளது.

தற்போது சென்னை அருகே தனது தயாரிப்பு தொழிற்சாலையை வைத்துள்ளது போர்டு. ஆனால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி போராட்டம் நடத்தி வருவதால் சென்னையை விட்டே விலகிப் போக போர்டு திட்டமிட்டுள்ளதாம். இதன் காரணமாகவே தனது அடுத்த ஆலையை குஜராத்திற்குக் கொண்டு போக அது திட்டமிட்டுள்ளது. மேலும் விரைவில் சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையையும் அது வேறு பகுதிக்கு மாற்றும் என்றும் தெரிகிறது.

2015ம் ஆண்டுவாக்கில் புதிய எட்டு மாடல்களை வெளியிடவுள்ளது போர்டு. இந்த மாடல்களை குஜராத் மாநிலம் சனந்த் அருகே புதிய தொழிற்சாலையில் உருவாக்க அது திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில்தான் ஏற்கனவே டாடா மோட்டார்ஸுக்கு, நானோ கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு இடம்வழங்கியுள்ளது நினைவிருக்கலாம்.

குஜராத்தில் போர்டு நிறுவனம் ஆலை அமைத்தால், குஜராத்துக்கு வரும் 3வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக அது சேரும். ஏற்கனவே அங்கு ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை ஆலை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 25, 2010, 13:03 [IST]
English summary
With the Indian car market booming, Ford is planning to set up a second plant and has approached the Gujarat government for land. According to sources, Ford which has announced eight new models for India by 2015, has been suggested a site near Sanand, where Tata Motors also has its factory for Nano, by Gujarat state government officials.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+