ஆல்டோ, சான்ட்ரோவால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க குதிக்கும் ஹோண்டா

Honda Small Car
மாருதியின் ஆல்டோ மற்றும் ஹூண்டாயின் சான்ட்ரோ ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள கடும் போட்டியை சமாளித்து வெற்றி பெறும் முயற்சியில் ஹோண்டா நிறுவனம் இறங்கியுள்ளது.

இதற்காக ரூ. 3 முதல் 3.5 லட்சம் மதிப்பிலான கார்களை தயாரித்து ஆல்டோ, சான்ட்ரோவை ஓரம் கட்ட அது முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட, வோக்ஸ்வகன், நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்களும் ஆல்டோ, சான்ட்ரோ மார்க்கெட் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில் தற்போது அதனுடன் ஹோண்டாவும் இணைகிறது.

இவர்களில் வோக்ஸ்வேகனுக்கு சற்று வாய்ப்பு அதிகம். காரணம், மாருதி நிறுவனத்தை கையில் வைத்துள்ள சுசுகியில் வோக்ஸ்வேகனுக்கு பங்குகள் உள்ளன என்பதால்.

தற்போது ஹோண்டா எடுத்துள்ள நடவடிக்கை வெற்றி பெறுமானால், அது இந்தியச் சந்தையில் இறக்கும் 3வது படைப்பாக அமையும். ஏற்கனவே ஜாஸ் மற்றும் 2சிவி ஆகிய இரு படைப்புகளை இந்திய சாலைகளில் இறக்கியுள்ளது ஹோண்டா என்பது நினைவிருக்கலாம்.

சிறிய ரக கார்களுக்கு உலகளவில் குறிப்பாக இந்தியாவில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அறிந்த பிறகே இந்த சிறிய மற்றும் கையடக்க விலை கார்கள் தயாரிப்பில் குதிக்க முடிவு செய்ததாக ஹோண்டா கூறுகிறது.

ஹோண்டாவின் புதிய சிறிய கார், சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரை விட சிறியதாக இருக்குமாம்.

ஹோண்டாவின் ஜாஸ் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இதன் வியாபாரம் திருப்திகரமாக இல்லை.

ஹோண்டாவின் 2சிவி காரின் விலை ரூ. 4 முதல் நாலரை லட்சம் வரை இருக்கிறது. இது மாருதி ஸ்விப்ட் மற்றும் ஹூண்டாய் ஐ10 கார்களுக்கு சற்று போட்டியாக திகழ்கிறது.

2சிவியிலேயே செடன் ரக காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது ஹோண்டா. புதிய சிறிய ரக காரை அறிமுகப்படுத்திய பின்னர் இந்தியாவில் தனது தயாரிப்புத் திறனை 60 ஆயிரம் என்பதிலிருந்து 1 லட்சமாக உயர்த்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இதற்கு வசதியாக தபுகேராவில் புதிய உற்பத்தி மையத்தை அது தொடங்கவுள்ளது.

----------------------------------------

Honda"s move to counter Alto and Santro

The Japanese auto giant, Honda is entering into the compact car segment at Rs3-3.5 lakhs cost, in India to counter the claims of Maruti Alto and Hyundai Santro. This will be the addition to other major players like GM, Ford, VW and Nissan. Among these companies, VW has better advantage with the technical back up from Maruti under a pact with Suzuki. The Indian compact car segment has much potential than any other segment and it is cue to be the move by Honda. If this materializes, then it will be Honda" s third product after Jazz and the ensuing small car 2CV scheduled for the festival season.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 26, 2010, 9:51 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+