இந்தியன் வங்கி-ஹூண்டாய் பைனான்ஸ்
சென்னை: இந்தியன் வங்கி - ஹூண்டாய் பைனான்ஸ் என்ற இந்த புதிய கார் லோன் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னணி கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸும் இந்தியன் வங்கியும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் வங்கி - ஹூண்டாய் பைனான்ஸ் என்ற அமைப்பு மூலம் கார் லோன்களை எளிய முறையில் வழங்கத் திட்டமிட்டுள்ளனர்.
இனி ஹூண்டாய் கார் வாங்க விரும்புவோர் நேரடியாக இந்தியன் வங்கி அல்லது ஹூண்டாயின் அனைத்து டீலர்களையும் அணுகலாம்.
இந்த ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு இந்த புதிய அமைப்பு செயல்படும். இந்தியன் வங்கியின் 1700 கிளைகளும் இந்த புதிய கடன் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வர்த்தகத்தின் அளவைப் பொறுத்து நீட்டிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








