மரக்கூழ் அல்லாத காகித்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இதழ்!

கார்கள், வாகனங்கள் உள்பட தனது தயாரிப்புகள், சேவைகள், பேஷன், ஹாபி, விடுமுறை கொண்டாட்டங்கள், உலகின் மாபெரும் பணக்காரர்கள், பிரபலங்களின் வாழ்க்கை முறை, கார்களின் வரலாறு, லேட்டஸ்ட் தொழில்நுட்பம், எதிர்கால கார்கள், ஜோக்குகள், மெர்சிடிஸ் கார் உரிமையாளர்களின் அனுபவங்கள், உலக உணவு வகைகள், பயணத்துக்கான உலகின் மிகச் சிறந்த இடங்கள், கலைகள் உள்ளிட்ட விவரங்களை அடக்கி இந்த இதழை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ளது. பல நாடுகளில் ஏற்கனவே வெளிவரும் இந்த இதழ் இந்தியாவிலும் இப்போது அறிமுகமாகியுள்ளது. இதை நடிகை வி்த்யா பாலன் வெளியிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில் மரக்கூழ் அல்லாத பிற வகையான மூலப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட காகிதத்தில் இந்த இதழை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிடுகிறது.
இந்த காலாண்டு இதழில் 20 சதவீத பக்கங்கள் இந்தியா குறித்த தகவல்களைக் கொண்டதாக இருக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்து்ளது.
கடந்த 55 ஆண்டுகளாக உலகின் 40 மொழிகளில் இந்த இதழ் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications