இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் மெர்சிடிஸ்

ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் பல மாடல்களை விற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் சாதாரண சி கிளாஸ் காரின் ஆரம்ப விலையே ரூ. 26 லட்சமாகும்.
இந் நிலையில் தனது விற்பனயை அதிகரிக்க மாருதி நிறுவனத்தின் ட்ரூ வேல்யூ போல, Proven Exclusivity என்ற பெயரில் செகண்ட் ஹேன்ட் கார்களையும் சான்றிதழுடன் விற்க பென்ஸ் முடிவு செய்துள்ளது.
தான் விற்ற பழைய கார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கி சர்வீஸ் செய்து, நல்ல தரமுள்ளதாக மாற்றி மீண்டும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கவுள்ளது பென்ஸ்.
2009ம் ஆண்டு தான் முதன்முதலாக இந்த திட்டத்தை பென்ஸ் அறிமுகப்படுத்தியது. இப்போது 35 நாடுகளில் இந்த செகண்ட் ஹேன்ட் கார் விற்பனை படு அமோகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தயாரிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குள்ளான கார்கள் மட்டுமே இங்கு விற்கப்படுகின்றன.
இந்தியாவில் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகர்களில் இந்த Proven Exclusivity ஷோ-ரூம்களை பென்ஸ் திறக்கவுள்ளது.
மேலும் கார் விற்பனையை அதிகரிக்க கடனுதவி வழங்கவும் மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இந்த நிறுவனம் கடந்த 5 மாதங்களில் 2,014 கார்களை வி்ற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 59 சதவீதம் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications








