5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த மாடல்கள் விற்பனைக்கு வந்துவிடும். இதற்காக நாடு முழுக்க 300 டீலர்களை நியமித்துள்ளது இந்நிறுவனம்.
சென்னை ஒரகடத்தில் நிஸ்ஸான் நிறுவனத்துடன் கூட்டாக ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இங்கு உற்பத்தி துவக்கப்பட்டது. இந்த ஆலையை பிரான்ஸ் நாட்டில் உள்ள ரெனால்ட்டின் தலைமை அலுவலக அதிகாரிகள் சமீபத்தில் பார்வையிட்டனர்.
ரெனால்ட் சிஓஓ பாட்ரிக் பெலேடா, துணை செயல் தலைவர்கள் பிலிப் க்லெய்ன் மற்றும் நகுமுரா ஆகியோர் சமீபத்தில் ஒரகடம் தொழிற்சாலையைப் பார்த்த பின், ரினால்டின் விரிவாக்கத் திட்டங்கள் குறித்துப் பேசினர்.
இங்கு உற்பத்தி செய்யப்பட்டும் கார் ரூ 4 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். 2015 -க்குள் விற்பனைக்கு வரும். அதேசமயம் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
மேலும் கொலோஸ் மற்றும் லக்ஸுரி ஆகிய இரு வகை சொகுசு கார்களை அடுத்த வருடம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் திட்டமும் உள்ளது இந்நிறுவனத்துக்கு. இந்தக் கார்கள் ஒரகடத்தில் அஸெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு தரப்படுகின்றன.
இதே தொழிற்சாலையில்தான் ரினால்டின் மைக்ரா ரக குட்டிக் கார்கள் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் இந்தக் கார்கள் வெளியில் வரும். ஆனால் இவை இந்தியாவில் விற்பனைக்கு உடனடியாக வருமா என்பது சந்தேகமே. தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கார்கள் தயாராகின்றன.


Click it and Unblock the Notifications








