நல்ல மைலேஜுடன் டொயோட்டாவின் கேஸ் கார் 'விஸ்'!

விஸ் (Viz) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், ஹோண்டாவின் இதே ரக மாடலான 'ஃபிட்' மற்றும் நிஸானின்'மார்ச்' ரகக் கார்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
மற்ற கார்களை விட பிஸ்ஸின் தனிச்சிறப்பு அது தரும் அதிக மைலேஜ். லிட்டருக்கு 26.5 கிமீ தரும் வகையில் இதன் எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 கிமீயும், பிட் 24.5 கிலோ மீட்டரும்
ஜப்பானில் இந்தக் காரின் விலை 1.06 மில்லியன் யென். மாதத்துக்கு 10000 கார்களை விற்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் கேஸில் இயங்கும் கார்களுக்கு ஜப்பான் அரசு மானியம் அளித்து வருவதால், இந்த விஸ் டொயோட்டா தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் வாகனமாக அமைந்துள்ளது.
மற்ற மாடல்களின் விற்பனையில் டொயோட்டாவுக்கு இந்த ஆண்டு 17 சதவீத வீழ்ச்சி இருந்தாலும், விஸ்ஸின் விற்பனை டொயோட்டாவுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. அப்படியும் கூட நவம்பரில் 35 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்தது டொயோட்டா.
70 நாடுகளில் 35 லட்சத்துக்கும் அதிகமான விஸ்-களை இதுவரை விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம். ஜப்பானில் விஸ் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த கார், வெளிநாடுகளில் யாரிஸ் என்ற பெயரில் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications








