SX4 டீசல் மாடலை அறிமுகப்படுத்த மாருதி ஆயத்தம்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் SX4 பெட்ரோல் மாடல் வாடிக்ககையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து,வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும்,எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் SX4 டீசல் மாடலை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
90bhp திறனை வெளிப்படுத்தும் 1.3லிட்டர் மல்டி ஜெட் டீசல் எஞ்சின் கொண்டதாக மாருதி SX4 டீசல் மாடல் வெளிவர உள்ளது.ஸ்விப்ட்,டிசையர் உள்ளிட்ட மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள அதே பியட் டீசல் எஞ்சின்தான் SX4 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும்,கூடுதலாக VGT தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் SX4 டீசல் மாடல் பிக்கப்பி்ல் பின்னி எடுக்கும்.
மேலும்,SX4 பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சினைவிட டீசல் எஞ்சின் 70 கிலோ எடை குறைந்ததாக இருக்கும்.SX4 டீசல் மாடலை வரும் 22ந்தேதி மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
SX4 டீசல் மாடலை அறிமுகப்படுத்துவது,விலை உள்ளிட்ட விபரங்களை பற்றி மாருதி நிறுவனம் இதுவரை வாய்திறக்காத நிலையில்,பெட்ரோல் மாடலை விட,டீசல் மாடல் ரூ.70,000 வரை விலை கூடுதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








