2011ல் இந்திய சாலைகளைக் கலக்க வரும் 20 மாடல் கார்கள்

Maruti Swift
டெல்லி: கடந்த ஆண்டைப் போலவே 2011ம் ஆண்டும் கார்களுக்கு கோலாகலமான ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு மட்டும் 20 புதிய வகை கார்கள் இந்திய சாலைகளைக கலக்கப் போகின்றன.

கிட்டத்தட்ட இந்திய மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை கார் நிறுவனங்களும் புதிய மாடல்களை களம் இறக்கத் தயாராகியுள்ளன. இதன் மூலம் உலகிலேயே படு வேகமாக வளரும் கார்ச்சந்தை என்ற பெயரை இந்தியா இந்த வருடமும் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாருதி, ஹூண்டாய், ஹோண்டா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டொயோடா என அனைத்து நிறுவனங்களும் புதிய மாடல்களைத் தயார் செய்து விட்டு காத்திருக்கின்றன.

பெரும்பாலான மாடல்கள் சிறிய ரக கார்களில்தான் அறிமுகமாகவுள்ளன. இதுதான் இந்திய கார் விற்பனையில் 70 சதவீதத்தைப் பிடித்திருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாருதி, ஹூண்டாய், டாடா ஆகிய நிறுவனங்களின் சிறிய ரக கார்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

புதிய மாடல்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை ஜப்பானின் டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள்தான். கடந்த டிசம்பரில் எடியோஸ் காரை அறிமுகப்படுத்தியது டொயோட்டா. அடுத்து வருகிற மார்ச் மாதம் லிவா காரை அறிமுகப்படுத்துகிறது. மாருதி, ஹூண்டாயைக் காலி செய்யும் நோக்கில் லிவாவை களம் இறக்குகிறது டொயோட்டா.

ரூ. 4 லட்சம் அளவுக்கு லிவாவின் விலை இருக்கும் என்று தெரிகிறது. மாருதி ஸ்விப்ட், மாருதி ரிட்ஸ், ஹூண்டாய் ஐ10, ஹூண்டாய் ஐ20, போர்டு பிகோ, வோக்ஸ்வேகன் போலோ ஆகியவற்றுக்கு லிவா கடும் போட்டியைத் தரும் என கார்ச் சந்தைத பரபரப்பாகிக் கிடக்கிறது.

முதலில் பெட்ரோல் என்ஜின் காரையும், வருடக் கடைசியில் டீசல் என்ஜின் மாடலையும் டொயோட்டா அறிமுகப்படுத்தவுள்ளது.

அதேபோல ஹோண்டா நிறுவனம் தனது பிரையோ காரை அறிமுகப்படுத்தவுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ரூ. 7 லட்சம் விலையில் ஜாஸ் காரை அறிமுகப்படுத்தி சூடு பட்டுக் கொண்டது ஹோண்டா. ஓவர் விலை காரணமாக ஜாஸ் காரை ஜூஸ் பிழிந்து விட்டார்கள் இந்திய நுகர்வோர். இதையடுத்து ரூ. 4 முதல் 5 லட்சம் என்ற விலையில் பிரையோவை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. இது 1200 சிசி பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகும்.

மாருதி நிறுவனமும் சற்றும் சளைக்கவில்லை. தனது ஸ்விப்ட் காரின் புதிய மாடலை களம் இறக்கப் போகிறது மாருதி. இதை கடந்த ஆண்டு ஹங்கேரியில் அது அறிமுகப்படுத்தியது. புதிய ஸ்விப்ட், ஜூன் மாத வாக்கில் களம் இறங்கும் என்று தெரிகிறது.

அதேபோல ஹூண்டாய் நிறுவனமும் குறைந்த விலைக் காரை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது மாருதி ஆல்டோவுக்கு போட்டியாக இருக்குமாம். மேலும் இந்தக் கார் சான்ட்ரோ விலையை விட குறைவாக இருக்குமாம்.

இப்படி அனைத்து கார் நிறுவனங்களும் புதுப் புது மாடல்களுடன் 2011ம் ஆண்டை கலகலப்பாக்க கிளம்பியுள்ளன. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிரமம்- எதை விடுவது, எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 5, 2011, 13:17 [IST]
English summary
The excitement continues for the car industry in 2011 with a slew of new models slated to hit the road, keeping the tempo going in the fastest-growing car market of the world. Virtually, all the carmakers present-Maruti , Hyundai, Honda, Ford, GM, Toyota-will drive in new models, looking to capture a bigger pie of the market that is forecast to grow in healthy double digits yet again. More than 20 new models will roll out this year, further fuelling competition and adding to the boom.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X