கார் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு பார்வை-பகுதி-3

வேகமாக செல்லும்போது பிரேக்கை திடீரென அழுத்தினாலும் காரை நிறுத்துவதற்கு முன்பக்கம் மற்றும் பின்பக்க சக்கரங்களுக்கு சீரான பிரேக்கிங் திறனை அனுப்புவதே எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிரிபியூசன் சிஸ்டத்தின் வேலை. மேலும், காரின் எடைக்கு தக்கவாறு பிரேக்கிங் சிஸ்டத்தை தானாகவே மாற்றும் வசதியும் கொண்டது.
எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்(இ.பி.எஸ்.,)
காரின் வேகத்திற்கு ஏற்ப ஸ்டீயரிங் வீலை தானியங்கி கட்டுப்பாட்டுடன் இயங்க செய்வதே இ.பி.எஸ்., தொழில்நுட்பம். வேகமாக செல்லும்போதோ அல்லது அவசர காலத்திலோ ஸ்டீயரிங் வீலை வேகமாக திருப்பினாலும், காரின் பேலன்ஸ் குறையாமல் சரியான அளவில் முன்பக்க சக்கரங்களை இ.பி.எஸ்., அழகாக திருப்பி கொடுக்கும். பார்க்கிங் செய்யும்போதும், அதிவேகத்தில் செல்லும்போதும் இ.பி.எஸ்., தொழில்நுட்பத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியும்.
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்(இ.எஸ்.பி.,)
கட்டுப்பாட்டை மீறி கார் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், தானியங்கி பிரேக்கை பிடித்து காரை நிறுத்தும் நவீன தொழில்நுட்பமே எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் சிஸ்டம். கார் ஓட்டும்போது டிரைவர் கண் அயர்ந்து, கைகளில் ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை இழந்தாலும், அலுங்கல் குலுங்கல் இல்லாமல் இ.எஸ்.பி., தொழில்நுட்பம் தாமாகவே காரை நிறுத்திவிடும்.
(தொடரும்)..


Click it and Unblock the Notifications








