ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய லோகோவை அறிமுகம் செய்யும் ஸ்கோடா ஆட்டோ

வோக்ஸ்வேகனின் கீழ் செயல்பட்டு வரும் செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் ஃபேபியா,லாரா,சூப்பர்ப்,யெட்டி ஆகிய மாடல்களை ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்தநிலையில்,வளர்ந்து வரும் விற்பனையை வேகமாக உயர்த்துவதற்கு புதிய மார்க்கெட்டிங் யுக்திகளை கையாள ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்துள்ளது. இதன்படி,ஜெனிவாவில் விரைவில் துவங்க உள்ள சர்வதேச மோட்டார் ஷோவில் புதிய லோகோவை ஸ்கோடா அறிமுகம் செய்ய உள்ளது.
பழைய லோகோவின் மையப்பகுதியில் சிறகுடன் அம்பு பறப்பது போன்ற உருவத்தை பெரிதுபடுத்தி, லோகோவில் இருந்த தனது பெயரையும் நீக்கி புதிய லோகோவை உருவாக்கியுள்ளது ஸ்கோடா.
அடுத்த ஆண்டு முதல் வெளிவரும் தயாரிப்புகளில் புதிய லோகோ இடம்பெறும் என்று ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது. மோட்டார்ஸ்போர்ட்சில் 110ஆண்டுகள் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கொண்டாட்டத்தையொட்டி,ஸ்போர்ட்டி வடிவமைப்புடன் கூடிய புதிய ஃபேபியா காரையும் அறிமுகம் செய்துள்ளதாக ஸ்கோடா ஆட்டோ கூறியுள்ளது. மேலும்,அடுத்த ஆண்டு புதிய கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தவும் ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








