ஷாங்யாங் மோட்டார்சை கையகப்படுத்த மஹிந்திராவுக்கு பச்சைக்கொடி

Sangyong
டெல்லி: பங்குதாரர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் ஷாங்யாங் மோட்டார்சை, மஹிந்திரா ஆட்டோ விரைவில் கையகப்படுத்த உள்ளது.

உலக பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தென்கொரியாவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஷாங்யாங் மோட்டார்ஸ் கூட்டு குழுமம் கடும் பொருளாதார பிரச்சினையில் சிக்கியது.

இதையடுத்து,அந்நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இதன்தொடர்ச்சியாக,தனது பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்தது.

ஷாங்யாங் நிறுவனத்தை கையகப்படுத்த பல நிறுவனங்கள் முன் வந்தாலும், இந்தியாவின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மேலும், ஷாங்யாங் மோட்டார்சின் பங்குகளை அதிக மதிப்பிற்கு வாங்கி கொள்வதாகவும் மஹிந்திரா அறிவித்தது.

இதற்கு ஷாங்யாங் மோட்டார்சிற்கு கடன் வழங்கியுள்ள கொரியன் டெவலப்மென்ட் வங்கியும் பார்கலேஸ் வங்கியும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.இதுதவிர,பங்குதாரர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து,ஷாங்யாங் மோட்டார்சின் ரூ.2083 கோடி மதிப்புடைய 70சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.இதில்,மொத்த மதிப்பில் 10 சதவீத தொகையை ஷாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மஹிந்திரா முன்பணமாக வழங்கிவிட்டது.

கையகப்படுத்துவதற்கான ஒப்பந்த நடைமுறைகள் விரைவில் முடியும் தருவாயில் உள்ளதால், அடுத்த வாரத்தில் முழு தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் மார்ச் மாதம் முதல் ஷாங்யாங் மோட்டார்சின் முழு கட்டுப்பாடும் மஹிந்திரா வசம் வரும் என்று தெரிகிறது.

ஷாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், "மஹிந்திராவின் வருகையால்,ஷாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய பரிமாணம் பெறும். மஹிந்திராவிடம் இருந்து பெறப்படும் தொகையில் ரூ.300 கோடி வரை மறுசீரமைப்பிற்காக ஷாங்யாங் நிறுவனத்திலேயே முதலீடு செய்யப்படும்,"என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 31, 2011, 15:44 [IST]
English summary
The acquisition process of Ssangyong by M&M went off smoothly with the creditors giving their consent for the revival plan. The shareholders and the creditors have gracefully okayed the proposal without any hitch. Thus the entire acquisition process will come to a complete shape during March 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+