இந்திய சாலைகளை கலக்க வரும் 'ஆடி'யின் சொகுசு கார்கள்

Audi Q7
சென்னை: இந்த ஆண்டில் 3 புதிய சொகுசு கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கார் விற்பனை சந்தை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, சொகுசு கார்களின் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு, ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம், தனது புது மாடல் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் ஆடி நிறுவனத்தின் ஆர்8 5.2எப்எஸ்ஐ, என்ற புதிய மாடல் கார் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில், காரை அறிமுகம் செய்து வைத்து பேசிய, ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் பெர்ஸ்க் கூறியதாவது,

இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு, 'ஏ' வரிசையில் 3 புதிய மாடல்களை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏ8 மாடலும், வரும் ஜூன் மாதம் ஏ7மாடலும், ஆண்டு இறுதியில் ஏ6 மாடலும் அறிமுகப்படுத்தப்படும்.

புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதால்,எங்கள் நிறுவன கார் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு ஏற்படும்.கடந்த ஆண்டு 3,003 கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த 2009ம் ஆண்டு விற்பனையை(1,658 கார்கள்)ஓப்பிடுகையில் 81 சதவீதம் கூடுதலாகும்.

சொகுசு கார் சந்தையில் 20 சதவீத இடத்தை ஆடி கார்கள் பிடித்துள்ளன.இதை இந்த ஆண்டு இறுதிக்குள் 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல்கள் அறிமுகத்தால், விற்பனை இலக்கை எளிதாக எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மைக்கேல் பெர்ஸ்க்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 18, 2011, 15:44 [IST]
English summary
Buoyed by growing luxury car market , German luxury car maker , Audi has lined up three new launches for the Indian market this year. it will indroduce 3 more luxury cars this year.The Audi A8 model will hit roads beginning February, Audi A7 will be made available by June while Audi A6 can be seen on India roads in the fourth quarter of this year," Michael Perschke, head of Audi India said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+