நவீன வசதிகளுடன் சிறிய ரக கார்: மிட்சுபிஷி அறிமுகம்

Mitsubishi's Global Small Car
ஜெனிவா: நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை நனவாக்கும் விலையிலும்,வசதிகள் குறித்த ஏக்கத்தை போக்கும் வகையிலும், நவீன வசதிகள் நிறைந்த சிறிய ரக காரை மிட்சுபிஷி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள,ஜெனிவா நகரில் சமீபத்தில் சர்வதேச கார் கண்காட்சி நடந்தது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் சிறிய ரக கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

'ஹேட்ச்பேக்' ரகத்தை சேர்ந்த இந்த காரில் 5பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு,குறைந்த அளவில் புகையை (கார்பன் டை ஆக்சைடு)வெளியிடும் வகையில்,இலகுவான எடை கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1.0 மற்றும் 1.2 லிட்டர் இன்ஜின் கொண்ட இது,எரிபொருள் சி்க்கனத்திலும் சிறப்பாக இருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது. தவிர, போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது இன்ஜினை ஆப் செய்து,ஸ்டார்ட் செய்யும் நவீன வசதியும் இதில் உள்ளது.

மேல்தட்டு மக்கள் வாங்கக்கூடிய சொகுசு கார்களை மட்டும் தயாரித்ததால் சந்தையில் பின்தங்கியது மிட்சுபிஷி நிறுவனம். சிறிய ரக கார் சந்தையின் அபரீமிதமான வளர்ச்சியை கண்டு சுதாரித்துக்கொண்ட மிட்சுபிஷி,தன்னை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் இந்த புதிய காரை தயாரித்துள்ளது.

அடுத்த ஆண்டு தாய்லாந்தில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த கார்,அதன்பின் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.தகுந்த விலையில் நிறைவான வசதிகள் கொண்ட இந்த கார் நடுத்தர மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 21, 2011, 12:31 [IST]
English summary
Those who visited the Geneva International Motor Show had the opportunity to have a sight on Mitsubishi’s global small car. The company has scheduled the launch of this car from its Thailand facility during March 2012.It is said to be a 5-seater and capable of exertingmost fuel economy and contented emission of carbon dioxide. In addition the car is fitted with start / stop mechanism, 1.0 –1.2 lit engine combined with regenerative braking system. There are hopes that Mitsubishi may drive this car into the Indian market too after the formal launch in Thailand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+