ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய சொகுசு கார் அறிமுகம்: டாடா ஜாகுவார்

Jaguar XKR S 01
டெல்லி: "விரைவில் துவங்க உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய சொகுசு கார் அறிமுகம் செய்யப்படும்" என,டாடா ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.ஜாகுவார் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்,அவ்வப்போது புதிய மாடல்களை ஜாகுவார் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,வரும் மார்ச் 1ந்தேதி சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா நகரில் சர்வேதேச மோட்டார் கண்காட்சி துவங்க உள்ளது.இந்த கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்து வருகின்றன.இந்த வரிசையில் டாடா ஜாகுவார் நிறுவனமும் XKR-S என்ற புதிய சொகுசு காரை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாடா ஜாகுவார் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

"ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் உயர் ரக XKR-S சொகுசு காரை அறிமுகம் செய்ய உள்ளோம்.ஜாகுவார் வாடிக்கையாளர்களை புதிய மாடல் வெகுவாக கவரும்.சொகுசு,பாதுகாப்பு,பெர்பார்மன்ஸ் என அனைத்திலும் XKR-S முத்திரை பதிக்கும்.

இது அதிகபட்சம் மணிக்கு 300கி.மீ.வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. இது 8.6வினாடிகளில் 0-100கி.மீ வேகத்தை எட்டும். டிரைவிங்கில் இந்த கார் புதிய அனுபவத்தை கொடுக்கும். இதன் ரகத்தை சேர்ந்த மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, XKR-S குறைந்த கார்பன் புகையை வெளியிடும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 27, 2011, 14:52 [IST]
English summary
Tatas-owned British marque Jaguar said it will launch its luxury sedan XKR-S at the forthcoming Geneva Motor Show , which is scheduled to start from March 1.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+