ஜனவரி மாதம் வாகன விற்பனை கிடுகிடு உயர்வு

Sandero
டெல்லி: இந்த ஆண்டு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இனிய ஆண்டாக அமையும் விதத்தில்,கடந்த ஜனவரி மாதம் இந்திய கார் விற்பனை சந்தை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளன.இதில்,விதிவிலக்காக ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை மட்டும் சரிவை சந்தித்துள்ளது.

கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம்,ஜனவரியில் 1,09,743 கார்களை விற்பனை செய்துள்ளது.இது கடந்த ஆண்டு ஜனவரி விற்பனையை (95,649கார்கள்)ஒப்பிடும்போது,14.73சதவீதம் கூடுதலாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரியில்65,478வாகனங்களை விற்பனை செய்த இந்நிறுவனம்,கடந்த மாதம் 75,423 வாகனங்களை விற்பனை செய்து 15சதவீத விற்பனை உயர்வை பதிவுசெய்துள்ளது.இந்நிறுவனத்தின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜனவரியில் 6சதவீத உயர்ந்தது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9,421 கார்களை விற்பனை செய்த இந்த நிறுவனம்,கடந்த மாதம்9,984 கார்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.

இதேபோன்று,ஹோண்டா சியல் இந்தியா நிறுவனத்தின் விற்பனையும் 6.3சதவீதம் உயர்ந்தது. அதேவேளை,நாட்டின் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின்,விற்பனை ஜனவரியில் 17.7சதவீதம் சரிவு கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 52,628கார்களை விற்பனை செய்த இந்நிறுவனம்,கடந்த மாதம் 43,316கார்களையே விற்றுள்ளது.இந்நிறுவனத்தின் ஏற்றுமதியும் 43.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை19.68சதவீதம் வளர்ச்சி கண்டது.கடந்த ஆண்டு ஜனவரியில் 3,89,802இரு சக்கர வாகனங்களை விற்ற இந்நிறுவனம்,கடந்த மாதம் 4,66,524 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை 30சதவீதம் உயர்வை சந்தித்தது.கடந்த ஆண்டு ஜனவரியில் 127,288 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த இந்நிறுவனம்,கடந்த ஜனவரி மாதம் 1,65,152வாகனங்களை விற்றுள்ளது.பஜாஜ் ஆட்டோவின் விற்பனையும் ஜனவரியில் 18சதவீதம் உயர்ந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, February 4, 2011, 9:57 [IST]
English summary
Automobile sales in India have shown good growth in the month of January.Most of the automobile companies recorded staggering sales volumes.Two-wheelers segment better than cars on the sales chart.Maruti Suzuki India (MSI),reported a 14.73 per cent jump in sales during January,2011.The country's largest two-wheeler maker Hero Honda reported a 19.68 percent jump in sales during January,2011 compared with last year january.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+