ஐ-பேடு அமர்க்களத்துடன் லேண்ட்ரோவர் சொகுசு கார் அறிமுகம்

Land Rover
லண்டன்: ஆப்பிள் ஐ-பேடு பொருத்தப்பட்ட முதல் சொகுசு காரை லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கார் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறி வருகிறது.சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்ய முனைப்பு காட்டி வருகின்றன.

சொகுசு கார் தயாரிப்பி்ல் புகழ்பெற்ற லேண்ட் ரோவர் நிறுவனம்,தனது ரேஞ்ச் ரோவர் லிமிடேட் எடிசன் காருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் உதவியுடன் ஸ்டாண்டர்டு ஐ-பேடு கருவியை பொருத்தி அறிமுகம் செய்துள்ளது.

ரேஞ்ச் ரோவரின் முன் இருக்கையின் பின்பக்கத்தில்,போர்ட்டபிள் ஐ-பேடு திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.பின்பக்க இருக்கையின் நடுவில் உள்ள கன்சோலில் சிறிய கீ-போர்டு அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் இன்டர்நெட் வசதியை பெற முடியும்.ரேஞ்ச் ரோவரின் பின் இருக்கையில் அமர்ந்தால்,ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மேலும்,இசை கேட்பது வீடியோ பார்ப்பது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள ஆப்பிள் ஐ-பேடு மூலம் அனுபவிக்கலாம்.ஐ-பேடு பொருத்தப்பட்ட முதல் கார் என்ற பெருமையுடன் ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஐ-பேடை வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்குவதாக லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதவிர,கன்சோலில் சிறிய குளிர்சாதன பெட்டி,தோலினால் வேயப்பட்ட கூரையின் உட்புற பகுதி,யாச்சிட் மரவேலைப்பாடுகளுடன் கூடிய தரை தளம் என காரின் அத்துனை அம்சங்களும் அமர்க்களமாக காட்சியளிக்கின்றன.5.0லிட்டர் டர்போ டீசல் மற்றும் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் கொண்ட இரண்டு மாடல்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 12, 2011, 11:44 [IST]
English summary
Land Rover has taken the car industry's association with Apple products to a whole new level - by becoming the first brand to fit a vehicle with iPads as standard.The Range Rover Autobiography Ultimate Edition's encased iPads flip up when rear-seat passengers want to watch movies, listen to music or browse the Internet, and they are removable. The office-style back seat also adds new console extensions with Apple keyboards, aluminium laptop table and drinks chiller.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+