மினி டிரக் விற்பனையை 16 சதவீதம் உயர்த்த மஹிந்திரா இலக்கு

Mahindra Pickup
டெல்லி: இந்த ஆண்டில் மினி டிரக் விற்பனையை 16சதவீதம் உயர்த்த மஹிந்திரா ஆட்டோ புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது.

சிறு வணிகர்களுக்கு ஏற்ற வகையில்,கார் போன்ற முகப்பும்,வசதிகளும் நிறைந்த மினிடிரக் தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. மினி டிரக் விற்பனை சந்தையில் மஹிந்திரா நிறுவனம் 75சதவீத இடத்தை பிடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் 1.5 டன் சரக்கு ஏற்றும் திறன் படைத்த பிக்அப் மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கூடி வருகிறது. எனவே,மினி டிரக் விற்பனையை அதிகரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மூத்த துணைத் தலைவர் கூறியதாவது:

கடந்த ஆண்டில் நிறுவனத்தின் மினிடிரக் விற்பனை 5முதல் 7சதவீத வளர்ச்சியை கண்டது. தற்போது மாதத்திற்கு 6,500 மினிடிரக்குகள் விற்பனை மூலம், ஆண்டுக்கு 85,000மினிடிரக்குகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் விற்பனையை 15முதல் 16சதவீதம் வரை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மினிடிரக் விற்பனையை 3.5லட்சம் முதல் 4லட்சம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம். மினி டிரக் விற்பனையை அதிகரிப்பதற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய ஜீனியோ மினிடிரக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜீனியோ மினிடிரக்கை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.ஜீனியோ மினிடிரக் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்காக ரூ.225கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2011, 11:20 [IST]
English summary
M&M is the dominant company in the pick-up segment with 75% share and now it hopes to witness a rise of the segment by 15-16% during this year. The company’s Senior VP for Marketing said that the company’s current strength is85000 annual units and the motive is to take advantage of this level to increase the market in the wake of projected 15-16%.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+