SX4 டீசல் மாடல் மைலேஜில் பின்னி எடுக்கும்:மாருதி சுஸுகி சர்டிஃபிகேட்

வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு மாருதி சுஸுகி நிறுவனம்,பெட்ரோல்,டீசல்,இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.டீசலில் இயங்கும் எஞ்சின் கொண்ட ஸ்விப்ட்,டிசையர், ரிட்ஸ் உள்ளிட்ட கார்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.
இந்த நிலையில்,விற்பனையில் முன்னிலை வகிக்கும் SX4 காரின் டீசல் மாடல் இதுவரை அறிமுகப்படுத்தப்படாமல் இருந்தது.இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் குறையாகவே இருந்தது.இந்த குறையை போக்கும் வகையில் SX4 டீசல் மாடலை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
SX4டீசல் மாடல் குறித்து மாருதி சுஸுகி மேலாண் இயக்குனர் கூறியதாவது:
"வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு SX4 டீசல் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதில், பொருத்தப்பட்டுள்ள எரிபொருள் சிக்கனம் தரும் நவீன தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின்,லிட்டருக்கு 21.5கி.மீ., செல்லும்.
இதன் 4சிலிண்டர் சூப்பர் டர்போ டிடிஐஎஸ் எஞ்சின் 90பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நகர்ப்புறங்களில் செல்லும்போது டிரைவிங் கண்டிஷனுக்கு தகுந்தாற்போல் எரிபொருள் சிக்கனம் தரும் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் மைலேஜில் SX4 டீசல் மாடல் முத்திரை பதிக்கும்,"என்று கூறினார்.
SX4 டீசல் மாடல் ரூ.7.74லட்சம் முதல் ரூ.8.62லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








