வோக்ஸ்வேகனுக்கு ஏ-ஸ்டார் காரை சப்ளை செய்ய மாருதி சுஸுகி முடிவு

Maruti Suzuki
டெல்லி: ஏ-ஸ்டார் காரை புதிய பிராண்டில் விற்பனை செய்வதற்கு வோக்ஸ்வேகனுக்கு அனுமதி தர மாருதி சுஸுகி நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்காக இரு நிறுவனங்களிடையே விரைவி்ல் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகியின் ஏ-ஸ்டார் காருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.மாருதியின் ஹேட்ச்பேக் வரிசையில் ஏ-ஸ்டார் மாடல் சிறந்த காராக பாராட்டுக்களை பெற்று வருகிறது.இந்த நிலையில், ஏ-ஸ்டார் காரை புதிய பிராண்டில் விற்பனை செய்ய விரும்புவதாக வோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக பரிசீலித்த மாருதி சுஸுகி நிறுவனம்,வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஏ-ஸ்டார் கார்களை சப்ளை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்காக,ஏ-ஸ்டார் காரின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளில் ஏ-ஸ்டார் கார் புதிய வடிவமைப்புடனும்,புதிய பிராண்டு பெயரிலும் வெளிவரும் என ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஏ-ஸ்டார் கார்களை சப்ளை செய்வதற்காக மாருதி சுஸுகி,வோக்ஸ்வேகன் இடையே விரைவில் ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

ஏ-ஸ்டார் கார்களை ஜப்பானை சேர்ந்த மற்றொரு நிறுவனமான நிசான் நிறுவனத்திற்கு மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக வழங்கி வருகிறது.இதனால்,ஏ-ஸ்டார் கார்களை புதிய பிராண்டில் விற்பனை செய்ய வோக்ஸ்வேகனும் விரும்புவதாக கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி கூட்டு குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வோக்ஸ்வேகன் நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, February 24, 2011, 11:16 [IST]
English summary
India's largest automobile company Maruti Suzuki will supply its latest compact car A-Star to Volkswagen AG . The car, which will undergo some modifications and design changes, will be sold in India and Asian markets under a new brand, according to senior officials in the automobile industry.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+