டாடா புதிய சஃபாரி, சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி- தகவல்கள்
கம்பீரம், சொகுசு, இடவசதி என அனைத்திலும் எஸ்யூவி கார்கள் நிறைவை கொடுப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதை மனதில்கொண்டு அனைத்து தயாரிப்பாளர்களும் எஸ்யூவி மாடல்களை களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500 விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. கொடுத்து கட்டுப்படியாகாத அளவிற்கு டிமான்ட் இருக்கிறது. இதை மனதில்கொண்டு மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு நேர் போட்டியாக தனது சஃபாரியை மேம்படுத்தி அறிமுகப்படுத்துகிறது டாடா மோட்டார்ஸ்.
இன்றைய சிறப்பு தொகுப்பில் டாடா சஃபாரி ஸ்ட்ராம், ஹோண்டா அறிமுகப்படுத்தும் புதிய சிவிக் செடான் கார் மற்றும் சாங்யாங் பிராண்டில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கும் ரெக்ஸ்டன் எஸ்யூவி கார்களை இன்று காணலாம்.
டாடா சஃபாரி ஸ்ட்ராம்:
தனது கீழ் இயங்கும் பிரிட்டிஷ் பிராண்டான ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் வடிவமைப்பு எஞ்சினியர்களின் ஒத்துழைப்புடன் சஃபாரி எஸ்யூவியை மேம்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். எக்ஸ்1 பிளாட்பார்மில் ஆரியா எம்பிவி வடிவமைக்கப்பட்ட நிலையில், புதிய எக்ஸ்2 பிளாட்பார்மில் சஃபாரி ஸ்ட்ராம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
முன்பக்க வடிவமைப்பு பார்த்தவுடன் கவரும் வகையில் மாற்றங்களை கண்டுள்ளது. ட்யூனிங் செய்யப்பட்ட 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 டிகோர் எஞ்சினுடன் சஃபாரி ஸ்ட்ராம் வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவியின் வாடிக்கையாளர்களை இழுக்கும் விதத்தில் சஃபாரி ஸ்ட்ராம் இருக்கும் என கருதப்படுகிறது.
எதிர்பார்க்கும் விலை: ரூ.11 லட்சம்
ஹோண்டா சிவிக்:
மிட் சைஸ் பிரிமியம் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் ஹோண்டா சிவிக் பின்தங்கியுள்ளது. எனவே, சிவிக் காரை மேம்படுத்தி இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹோண்டா. வெளிப்புறம் மற்றும் உட்புறம் புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா சிவிக்.
இதில், 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட 1.8 லிட்டர் எஸ்ஓஎச்சி எஞ்சினுடன் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இருப்பினும், சிவிக் டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டால்தான் குறிப்பிடத்தக்க விற்பனை இலக்கை எட்டும் என்று நம்பலாம்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.14 லட்சம்
சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி:
தனது கட்டுப்பாட்டில் உள்ள சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ரெக்ஸ்டன் எஸ்யூவியை விரைவில் களமிறக்குகிறது மஹிந்திரா. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்களில் பார்வையாளர்களை கவர்ந்த மாடல்களில் ரெக்ஸ்டனும் ஒன்று.
கொரண்டோ எஸ்யூவியை தொடர்ந்து ரெக்ஸ்டனை இந்தியாவில் களமிறக்க மஹி்நதிரா திட்டமிட்டுள்ளது. 161 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் எஞ்சினுடன் ரெக்ஸ்டன் வருகிறது. பிரிமியம் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.19 லட்சம்
தொடரும்...


Click it and Unblock the Notifications








