மஹி்ந்திராவின் புதிய வெரிட்டோ, நிசான் எவாலியா- விபரங்கள்

அடக்கமாகவும், அதிக இடவசதியுடன் கார் வேண்டும் என்று கருதும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்க்கொண்டு பல நிறுவனங்கள் தங்களது செடான் கார்களை அடித்து ஒடுக்கி அறிமுகப்படுத்தி வருகின்றன.

மாருதி டிசையரை தொடர்ந்து வர இருக்கும் காம்பெக்ட் செடான் கார்களில் ஒன்றான மஹிந்திராவின் வெரிட்டோவின் தகவல்களையும், நிசான் அறிமுகப்படுத்த இருக்கும் பன்முக பயன்பாட்டு வாகனமான இவாலியா மற்றும் உலக அளவில் பிரபலமான பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர் காரின் விபரங்களை இன்று காணலாம்.

Mahindra Veritoமஹிந்திரா வெரிட்டோ (காம்பெக்ட் செடான்):

டாக்சி மார்க்கெட்டுக்காக ஒதுக்கப்பட்டதாக கருதிய லோஹன் காரை ரினால்ட் பிரிந்தபிறகு வெரிட்டோ என்ற பெயரில் புதுப்பொலிவுடன் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இதனால், டாக்சி முத்திரை சற்று குறைந்து தற்போது குடும்ப கார் அந்தஸ்தை பெற துவங்கியுள்ளது வெரிட்டோ.

இதை தக்கவைக்கும் விதத்திலும், விலையை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் வெரிட்டோவின் காம்பெக்ட் செடான் ரகத்திலும் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. பொருட்களை வைப்பதற்கான பூட் ரூம் அளவில் குறைந்தாலும், உட்புறம் தாராள இடவசதியை கொண்டிருக்கும் வகையில், இந்த காரின் வடிவமைப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக வெரிட்டோ சிஎஸ் விற்பனைக்கு வருகிறது. சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும் இந்த காரை வரும் டிசம்பரில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.ரூ.4.7 லட்சம்

Nissan Evaliaநிசான் இவாலியா:

சொந்த பயன்பாடு மற்றும் வர்த்தக ரீதியிலான பயன்பாடு என எந்தவிதத்திலும் பயன்படுத்திக்கொள்ளும் பன்முக பயன்பாட்டு வாகனமாக இவாலியாவை நிசான் விற்பனைக்கு கொண்டு வருகிறது. மாருதி ஆம்னியில் உள்ளதுபோன்று பக்கவாட்டில் திறக்கும் வசதி கொண்ட ஸ்லைடிங் கதவுகளை கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.

7 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த காரில் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தம் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வருகிறது நிசான். சன்னிக்கு அடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் இவாலியாவை களமிறக்குகிறது நிசான்.

வரும் ஆகஸ்ட்டில் இவாலியாவை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கும் விலை:
ரூ.7 லட்சம்

Benz Roadsterமெர்சிடிஸ் பெனஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர்:

பக்கவாட்டில் திறக்கும் வண்ணத்துப் பூச்சி இறக்கை போன்ற கதவுகள், திறந்து மூடும் கூரை போன்ற வசதிகளை கொண்டிருக்கும் இந்த கார் வடிவமைப்பில் பார்த்தவுடன் பிரமிக்க வைக்கிறது இந்த பென்ஸ் கார். கார் வாங்கினா இப்படித்தான் வாங்கணும் என்று கனவு காண வைக்கும் வடிவமைப்பு.

இதுதவிர, ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் இந்த காரில் 563 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.2 லிட்டர் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிது. இந்த கார் வெறும் 3.8 வினாடிகளில் 0-100 வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்தது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்து மார்க்கெட்டை கிடுகிடுக்க வைக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை: ரூ.2.4 கோடி

தொடரும்...

More from DriveSpark

Article Published On: Friday, April 6, 2012, 7:40 [IST]
English summary
Here we give you an exciting list of new cars that are to be launched this year. Read on to find the detailed info of the upcoming cars and the time of their arrival.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+