மினி காரும், 28 வீராங்கனைகளும்... புதிய கின்னஸ் சாதனை..!!

மினி காரில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்றால் அதிபட்சம் 5 என்று சொல்லலாம். ஆனால், ஒரே நேரத்தில் 28 ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் மினி காரில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். மூச்சுவிடக்கூட இடமில்லாத அளவுக்கு பஞ்சுபொதியை அடைத்தது போன்று அந்த வீராங்கனைகள் காருக்குள் தங்களை வில்லாக வளைத்து மடித்து சென்றனர். காரின் உட்புறத்தில் 23 பேரும், காரின் டிக்கியில் 5 பேரும் அமர்ந்து பயணித்தனர். காரில் 27 பேர் பயணித்தது இதுவரை உலக சாதனையாக இருந்த நிலையில், 28 பேர் பயணித்த இந்த நிகழ்வு தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஸ்லைடரில் இந்த நிகழ்வின் பிரத்யேக படங்களை காணலாம்.

சாதனை நிகழ்வு

சாதனை நிகழ்வு

லண்டனிலுள்ள பாட்டர்ஸ் பீல்டு பார்க் எனுமிடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

கின்னஸில் இடம்

கின்னஸில் இடம்

கின்னஸ் சான்றிதழுடன் போஸ் கொடுக்கும் வீராங்கனைகள்

 விழி பிதுங்கிய வீராங்கனைகள்

விழி பிதுங்கிய வீராங்கனைகள்

முன்புற ஜன்னல் வழியாக வெளியே தலையை நீட்டி பிதுங்கிய படி செல்லும் வீராங்கனைகள்

ஒட்டு இடம் இல்லாதபடி..!!

ஒட்டு இடம் இல்லாதபடி..!!

டேஷ்போர்டு, டிக்கி என அனைத்து இடங்களிலும் வீராங்கனைகள் தங்களது உடலை வளைத்தும், மடித்தும் உள்ளே ஜாம் போல பேக் செய்து இந்த சாதனையை நிகழ்த்தினர்.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

முன்பு இதுபோன்ற சிறிய காரில் 27 பேர் சென்றது சாதனையாக கருதப்பட்ட நிலையில், தற்போது 28 பேர் பயணித்து அந்த சாதனையை உடைத்துள்ளனர்.

போக்ஸ்வேகன் அப் காரிலும் சாதனை

போக்ஸ்வேகன் அப் காரிலும் சாதனை

போக்ஸ்வேகன் அப் காரில் இதேபோன்றே சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக அந்த காரில் 17 பேர் பயணிக்க முடிந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, November 19, 2012, 13:08 [IST]
English summary
The 2012 Mini hatchback might be a small car and yet as many as 28 people were able to get inside it in UK. A team of 28 gymnasts managed to cram in the small car. The ladies set a Guinness World Record for the number of people inside a 2012 Mini, breaking their previous Guinness world record of 27.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+