மகள் ஆராத்யா பிறந்தநாளுக்கு பரிசளிக்க மினி கார் வாங்கிய அபிஷேக்
பாலிவுட் நட்சத்திர தம்பதியான அபிஷேக்-ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யாவுக்கு நாளை முதல் பிறந்தநாள். இதற்காக, தனது மகள் ஆராத்யாவுக்கு பிறந்தநாள் பரிசாக மினி கூப்பர் எஸ் சொகுசு காரை பரிசாக வழங்கவுள்ளார் தந்தை அபிஷேக் பச்சன். மேலும், இந்த காரை பேத்தியுடன் சென்று தாத்தா அமிதாப்பச்சன் நேரில் சென்று டெலிவிரி எடுத்து வந்துள்ளார்.
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூவின் அங்கம்தான் மினி கார் பிராண்டு. இந்த ஆண்டுதான் இந்தியாவி்ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆராத்யாவுக்கு பரிசாக வழங்கப்படும் இருக்கும் மினி கூப்பர் காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டெலிவிரி எடுத்து வரும் அமிதாப்பச்சன்
புதிய காரை பேத்தியுடன் சென்று டெலிவிரி எடுத்து வரும் தாத்தா அமிதாப்பச்சன். முன் வரிசை இருக்கையில் ஜெயாபச்சன் மற்றும் பின் இருக்கையில் ஆராத்யாவை கையில் வைத்தபடி ஐஸ்வர்யா ராய் அமர்ந்திருந்தார்.

ஸ்போர்ட்டி லுக்
ஸ்போர்ட்டி லுக்குடன் கிளாஸியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது மினி கூப்பர் எஸ்.பார்ப்பதற்கு மாருதி ஸ்விப்ட் போல இருக்கும் இந்த கார் முழுக்க முழுக்க பிரிமியம் அம்சங்கள் நிறைந்தது. வெளிப்புறத்தில் இதன் டூயல் டோன் வண்ணம்தான் காரின் அழகை கூட்டுகிறது. 16 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த காரில் 1598 சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 184 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

மைலேஜ் எவ்வளவு தெரியுமா?
பவர்ஃபுல் காரான மினி கூப்பர் லிட்டருக்கு 15.4 கிமீ., மைலேஜ் தரும் என்கிறது மினி பிராண்ட்.

இன்டிரியர்
பிரத்யேக அம்சங்களுடன் இன்டிரியர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஸ்பீடோமீட்டர் டயல் குறிப்பிட்டு கூறும்படியாக வடிவமைப்பை கொண்டது. டூயல் டோன் வண்ண இன்டிரியர் கொண்ட மினி கூப்பர் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை கொண்டிருக்கிறது.

அதிகபட்ச வேகம்
7.2 வினாடிகளில் இந்த கார் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 223 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை பொருந்தியது.

அழகுக்கு அழகு சேர்க்கும் அலாய் வீல்
16 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிராண்டு முத்திரை
பக்கவாட்டு இன்டிகேட்டர் அருகில் அலங்கரிக்கும் பிராண்டு முத்திரை

ஹெட்லைட்
முட்டை வடிவ ஹெட்லைட் வடிவமைப்பு. புரொஜெக்டர் லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிக்குன்னு டேஞ்சர் லைட்
காரின் வடிவத்துக்கு பொருத்தமான சிக்குன்னு இருக்கும் டேஞ்சர் லைட் வடிவமைப்பு.

வாழ்த்துக்கள்
'மினி' கிப்ட்டை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ஆராத்யா.


Click it and Unblock the Notifications








